“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

Political Science

அரசியல் - பொருளாதாரம் - பல்தேசிய கம்பனிகள்


அறிமுகம்.
தற்போதைய உலகமயமாக்கல் செயற்பாடானது தனியார் கரங்களுக்கான செல்வக்குவிப்பையே தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில்  அதிகம் பேசுப்பொருளாகக் காணப்படுவது இந்த பல்தேசிய கம்பனிகள். இன்று பல அரசுகள் தமது பொருளாதார நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுப்பதில் தோல்விகளைக்கண்டு வருகின்றன. அரசுகளின் பொருளாதாரத்தினை தீர்மானிப்பதில் வெளி சக்திகளின் ஆதிக்கமே இதற்கான காரணம். இதில் பல்தேசிய கம்பனிகள் முக்கியப்பங்கைக் கொண்டுள்ளனநாம் அறிந்தோ அறியாமலோ இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றோம். நாம் நமது அன்றாட செயற்பாடுகளின் மூலம் இவைகளை ஊக்குவிக்கின்றோம். தேசிய அரசுகளின் இறைமை, தேசிய எல்லைகள் என்பன தகர்த்தெரியப்பட்டு, ஒரு கட்டற்ற சந்தைப்பொருளாதாரம் ஒற்றைமைய உலகப் பொருளாதாரமாக வளர்ந்து வருகின்ற நிலையில் அரசுகள் தமது திட்டமிட்ட பொருளாதார கொள்கைகளைப் பேணமுடியாது போயுள்ளது. இதிலும் மூன்றாம் உலக நாடுகள் முற்றாக பல்தேசிய கம்பனிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிட்டன. தகவல் தொழிநுட்பம், கல்வி, வங்கித்தொழில், வர்த்தகம் என்ப பாரிய வளர்ச்சிக்காணுவதற்கு இவைகளின் பங்களிப்பே காரணம் என்று ஒரு மாயையினை உருவாக்கி விடுகின்றன. எனவே, இதனை கட்டவிழ்த்துப் பார்க்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையானது இவற்றின் சில புள்ளிகளை தொட்டுக்காட்ட விளைகின்றது.

அரசியற் பொருளாதாரம்.
தற்காலப்பொருளாதாரமானது அரசியற் பொருளாதாரமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. ஒரு நாட்டின் அரசியலைப் பொறுத்துத்தான் அந்நாட்டின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகின்றது. அரசியலமைப்பும் அதன் காரணமாக ஏற்படும் சீரான பொருளாதார நிலையும் சேர்ந்துதான், ஒரு நாட்டை வளம்பெற செய்ய முடியும். அரசாங்கத்தின் நிதிக்கொள்கைகள், நாணயமாற்று விகிதங்கள், வட்டி வீதம், வங்கி முறைமை மற்றும் தனியார் பொருளாதாரக் கொள்கை இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தினை தீர்மானிக்கின்றன. எனவே அரசாங்கம் மற்றும் ஆட்சிமுறை என்பவற்றை பொறுத்தே அரசியல் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகின்றது. 1990ம் ஆண்வரை சோவியத் ரஷ்யாவும் அதன் சார்பு நாடுகளும் மூடிய சோசலிச பொருளாதாரத்தினை பின்பற்றி வந்தன. இதேப்போன்று அமெரிக்காவும் அதனது சார்பு நாடுகளும் முதலாளித்துவ திறந்த சந்தைப் பொருளாதாரத்தினை பின்பற்றிவந்தன. ஆனால் 1990ம் ஆண்டிற்குப் பின்னர் சோவியத் தலைமையிலான மூடிய சோசலிசப் பொருளாதாரம் உடைக்கப்பட்டு சந்தைப் பொருளாதாரத்துடன் கூடிய ஒரு கலப்புப்பொருளாதார முறை உருவாக்கப்பட்டது. இச்செயற்பாட்டிற்கு பல காரணிகள் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தன. இதில் பல்தேசிய கம்பனிகளின் வகிப்பங்கு முக்கியமானதாகக் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்தேசிய கம்பனிகள்.
ஒரு நாட்டில் தலைமையகத்தினைக் கொண்டு ஏனைய நாடுகளில் தமது கிளைகளைப் பரப்பி வர்த்தகத்துறையில் ஈடுபட்டுள்ள கம்பனிகளே பல்தேசிய கம்பனிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளில் பல்வேறுவகைப்பட்ட கம்பனிகள் காணப்படுகின்றன. உதாரணமாக வர்த்தகம், வங்கி, காப்புறுதி போன்றவற்றை குறிப்பிடலாம். வர்த்தக கம்பனிகளிலும் பல்வேறு வகைப்பட்ட கம்பனிகள் தற்போது இயங்கி வருகின்றன. கிழக்கிந்திய வர்த்தக கம்பனியின் தோற்றத்துடன் பல்தேசிய கம்பனிகளின் ஆரம்பத்தினை நோக்குகின்ற போதும், 1970களின் பின்னரே இவற்றின் பெருக்கத்தினை காணக்கூடியதாய் உள்ளது. இவற்றின் பெருக்கத்திற்கு திறந்த சந்தைப்பொருளாதாரமும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையுமே காரணமாக அமைந்தன. மேலும், 1990ம் ஆண்டின் பின்னர் பனிப்போரின் முடிவினைத் தொடர்ந்து பல்தேசிய கம்பனிகளினால் உலக நாடுகள் பலவற்றில் அகல காலூன்றி செயற்பட முடிந்தது.


மனித உரிமைகள்


மனிதன் தோன்றிய அன்றே இயற்கைஉரிமைகளை அவனுக்கு வழங்கிவிட்டது. ஆனால்மனிதனானவன் அதனை உணர்ந்துக் கொள்வதற்கு குறிப்பட்ட காலம் அவன் கூர்ப்பு அடைய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த காலத்தினை அடைந்த போதுதான் அவன் உரிமைகளை உணரத்தொடங்கினான். இதன் பின்னரே உரிமைகளைப்பற்றி பேசவும் தொடங்கினான் எனலாம். மனித உரிமைகள் என்ற எண்ணக்கருவானது பல்வேறு நிலைகளில் இருந்து நோக்கப்படுகின்றது. இதற்கு பல்வேறு அறிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.  இவர்கள் தமது கருத்துகளை கால சூழ்நிலைக்கு ஏற்ப முன்வைத்துள்ளமையை நாம் அவதானிக்கலாம்.

உரிமைகள் என்பது 'சமூகத்தினாலும் அரசினாலும் அங்கிகரிக்கப்பட்ட மனிதக் கோரிக்கைகள்எனலாம். இதில் மூன்று விடயங்கள் முக்கியம் பெறும். குறிப்பாக மனிதக் கோரிக்கைகள்சமூக அங்கிகாரம்அரசியல் அங்கிகாரம் என்பனவாகும். இங்கு மனிதனது கோரிக்கைகளை எடுத்துக் கொண்டால் அனைத்துக் கோரிக்கைகளும் உரிமைகள் ஆகிவிடாது. அதன் தன்மையிலேயே தங்கியுள்ளது. கோரிக்கைகள் பாரபட்சமற்ற வகையில் அனைவரது நலனையும் நோக்காகக் கொண்டிக்கும் போது சமூகம் அங்கிகாரம் வழங்கும். சமூக அங்கிகாரம் பெற்ற கோரிக்கைகள் யாவும் உரிமைகளாக அமைவதில்லை. ஏனெனில் அவற்றுக்கு அரசின் அங்கிகாரம் அவசியமாகும். அரசின் அங்கிகாரம் கிடைக்கப்பெறும் போதே உரிமைகள் சட்ட ரீதியான தன்மைப்பெறும் ஏனையவர்களுக்கு பங்கம் விளைவித்து,
Read More................................................

ஐக்கியநாடுகள்சபையின் மனித உரிமைகள் பேரவையின் கண்டன பிரேரணைகள் இலங்கையின்இராஜதந்திர உறவு முறையில் எற்படுத்திய தாக்கம்.

 

இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் அதன் அமைவிடம் என்பது புவியியல் அரசியலில் மிகவும் முக்கியமானதொன்றாகும். இரண்டாம் உலகப்போரினைத் தொடர்ந்தும், பின்னர் ஏற்பட்ட பனிப்போரின் முடிவுடனும் பொருளாதார அரசியல் என்பது பலமானதாக மாற்றமடையத் தொடங்கியது. இதன்போது இந்துசமூத்திரமானது பல நாடுகளுக்கு அவசியப்படும் ஒரு இடமாக மாற்றமடைந்தது. இதனால் உலக அரசியல் நகர்வுகளானது இந்து சமுத்திரத்தின்பால் நகரத்தொடங்கியது எனலாம். இதன்போது சர்வதேச அரசியல் வலைப்பின்னலுக்குள் உள்ளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் தமது இராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையினை பலப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. 


'வெளியுறவும் இராஜதந்திரமும் சர்வதேச அரசியலை நடாத்திச் செல்லும் இரு சக்கரங்கள்' என்றார் பேராசிரியர் மொடெல்லஸ்கி அவர்கள். ஓவ்வொரு தேசிய அரசிற்கும் தனிப்பட்ட வெளியுறவுக்கொள்கைகள் உள்ளன. இந்த வெளியுறவுக் கொள்கைகளை இராஜதந்திர வழிமுறைகளில் அந்தந்த நாடுகள் நடத்திச் செல்கின்றன. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அந்த அரசாங்கத்தின் பிரத்தியேகக் கொள்கையாகும். இது நாட்டின் தேசிய நலனை அடிப்படையாகக்கொண்டு காணப்படும்.

இலங்கை அரசாங்கம் பயன்படுத்திய மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை இறுதியுத்தத்தில் வெற்றியடைவதற்கு பெரும் பங்காற்றியுள்ளதுடன் அரசியல் சாணக்கியம் புத்திசாலிதனமான சர்வதேச இராஜதந்திரம் என்பன தமிழீழ விடுதலைப்புலிகளை பூரணமாக அழித்தொழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறுதியுத்தக்காலத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பான இலங்கையின் புரிந்துணர்வு பரந்துப்பட்டதாகக் காணப்பட்டதுடன், வெளியுறவுக் கொள்கையின் இராஜதந்திர திறன்களை விருத்தி செய்வதாகவும் இருந்தது. ஆயினும், யுத்தத்தின் பின்னர் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றை யுத்ததக்காலத்தில் இலங்கை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதுடன் அதற்கான பொறுப்பினை ஏற்குமாறும் இலங்கை நிர்பந்திக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மேற்படி குற்றச்சாட்டுக்களைத் தனது இராஜதந்திர திறன் மூலம் தோற்கடிப்பதில் இலங்கை பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.

Read more....

  அரிஸ்டோடில் கூறும் ஆட்சி முறை

 

அரிஸ்டோடில் கி.மு 384 – கி.மு 322 வரை கிரேக்கத்தில் வாழ்ந்தவர். இவர்வாழ்ந்தக் காலக்கட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் இவர் எதன்ஸ் நகருக்கு அண்மையில் Stagira என்ற ஊரில் கி.மு 384ஆம்; ஆண்டு பிறந்தார். இவரின் நாட்டம் அதிகமாக சமூகத்துறைகளில் காணப்பட்டது. இவர் பிளேட்டோவின் மாணவராக சேர்ந்து அவரின் பள்ளியில் கல்விப் பயின்றார். அரிஸ்டோடில் பிளேட்டோவை பின்பற்றி தனது கருத்துக்களை முன்வைத்தாலும் பல இடங்களில் பிளேட்டோவின் சிந்தனையில் இருந்து விடுபட்டுச் செல்கின்றார். அரிஸ்டோடில் அரசியல், பொருளாதாரம், சமூகம், மெய்யியல் போன்றத்துறைகளை ஆராய்ந்து கருத்துக்கள் தெரிவித்துள்ளார். கிரேக்க சிந்தனையாளராக காணப்படும் இவரின் அனேகமானக் கருத்துக்கள் கிரேக்கத்தை மையமாகக் கொண்டே பின்பற்றப்பட்டது. எனினும் தற்காலப் பொறுத்தப்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் அரிஸ்டோடிலின் கருத்துக்கள் காலம் கடந்தவையாகவே காணப்படுகின்றன. இதனடிப்படையில் அரிஸ்டோடில் கூறும் ஆட்சி முறைகளையும் அதன் தற்காலப் பொருத்தப்பாட்டினையும் பகுப்பாய்வுசெய்து பார்ப்போம்.

 

 

நல்லாட்சியின் தற்கால தேவையும், முக்கியத்துவமும்.

கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட வருடார்ந்த சஞ்சிகையான வெளி 2012 வெளியான கட்டுரை.
 

நல்லாட்சித்தத்துவத்தின் ஆரம்பக்கால நிலை, அறிஞர்கள் மத்தியில் அதன் செல்வாக்கு, பண்புகள், சிறபம்சங்கள் போன்றன மற்றுமன்றி நல்லாட்சியின் தற்கால முக்கியத்துவம், வலியுறுத்துவதற்கான காரணங்கள், நவீன
ஜனநாயக முறையில் இதன் செல்வாக்கு, மூன்றாம் உலக நாடுகளில் இதன் நிலைபோன்ற விடயங்களை தொகுத்துப் பார்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்றைய நவீன ஜனநாயக உலகில் பல நாடுகள், சர்வதேச நிறுவனங்கள், பொதுநல அமைப்புக்கள் போன்ற பல ஸ்தாபனங்களில் பேசப்படுவதும், அபிவிருத்தி, இறையாண்மை போன்ற கருத்துகளுக்கு முக்கியத்துவமாகவும், ஜனநாயகத்தின் மற்றுமோரு பரிணாமமாகவும் பேசப்பட்டு வருகின்ற ஓர் எண்ணக் கருவே நல்லாட்சியாகும். Read more