1.1. சமூக விஞ்ஞானங்களுள் ஒன்றாக அரசியல்
விஞ்ஞானத்தை அறிமுகம் செய்தல்.
1.2. அரசியல் விஞ்ஞானத்திற்கும் ஏனைய சமூக
விஞ்ஞானங்களுக்குமிடையிலான தொடர்பு.
1.2.1. வரலாறு
1.2.2. புவியியல்
1.2.3. பொருளியல்
1.2.4. சமூகவியல்
1.2.5. மெய்யியல்
1.2.6. சட்டம்
1.3. அரசியல் விஞ்ஞானத்தின் பரிணாம வளர்ச்சி
1.3.1. கிரேக்க காலம்
1.3.2. உரோம காலம்
1.3.3. மத்திய காலம்
1.3.4. நவீன காலம்
அரசறிவியல் பற்றி ஒரு பொது வரைவிலக்கணம் காணப்படுவதில்லை. சிலர் அதை ஆட்சிக்கலை என்றும், அதிகாரம் பற்றிய கலை என்றும் இன்னும் சிலர் இவை இரண்டையும் கவனத்திலெடுக்கும் பாடம் என்றும் பொருள் கூற முட்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக அண்மைக்காலத்தில் அரசறிவியல் என்பது அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல் மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்த்தல் என்பவற்றை கவனத்தில் எடுக்கும் பாடம் என்றும் பொருள் கூறப்படுகின்றது. மேற் குறிப்பிட்ட சகல விடயங்களும் இறுதியாக அரசோடு தொடர்பு படுகின்றன என்றும் எந்தவொரு விடயமும் அரசியலில் இருந்து விடுபடுவதில்லை என்றும் அரசை மையமாகக் கொண்டு அவை பல்வேறு திசைகளில் பரவியுள்ள துணைப்பிரிவுகள் என்றும் தெரிகின்றது. இப்பரவலானது அரசு முறையின் வளர்ச்சி அரசின் செயற்பாட்டுபரப்பு, காலத்தின் தேவைக்கேற்ப மாற்றமுற்றமை என்பனவற்றோடு இணைந்தே இடம்பெற்றுள்ளது.