“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

Sri Lanka

இலங்கை இன முரண்பாட்டில் நோர்வே.................


       சர்வதேச அளவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத முரண்பாடுகளில் இலங்கை இன முரண்பாடும் பிரதானமானதாகும். இதனால் தேசிய சர்வதேச மட்டத்தில் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு இன முரண்பாடாகவும் இம்முரண்பாடு விளங்குகின்றது. இன முரண்பாடு என்பது பல இன மத மொழி கலாசாரங்களைப் பின்பற்றுகின்ற நாடுகளில் பெரும்பாண்மையினம் சிறுபாண்மையினரின் அடிப்படைத் தேவைகள் அபிலாசைகளை நிறைவேற்ற மறுக்கும் போது அல்லது ஒரு இனம் மற்ற இனத்தைத் தாக்கும் போது இன முரண்பாடு என்பது தோற்றம் பெறுகின்றது. இலங்கை பல்லினங்களையும் பல சமூகங்களையும் கொண்ட ஒரு பன்மைத்துவ கலாசார பின்னனியைக் கொண்ட நாடாகும். இந்நாட்டின் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் பறங்கியர் என பல இனங்கள் வாழ்கின்றனர். இவர்களுல் சிங்கள - தமிழ்  சிங்கள முஸ்லிம் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடே பிரதானமானதாகும்.  அதிலும் குறிப்பாக சிங்கள-தமிழ் முரண்பாடே இன்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற ஒரு போக்கைக் காணலாம்.

     ஆரம்பத்தில் இலங்கையில் இருந்த இன முரண்பாடுகளுக்கிடையிலான முரண்பாடென்பது வன்முறை இல்லாமலே இருந்தது. காலப் போக்கில்   அரசுக்கும் சிறுபாண்மை தமிழ் ஆயுத குழுக்களுக்கிடையில் ஆயுத முரண்பாடாக மாறியது. இது இலங்கை உள்நாட்டு ஆயுத முரண்பாடென அழைக்கப்பட்டது. எனவே இது கிட்டதட்ட 30 வருடத்துக்கு வேரூன்றி காணப்பட்டதுடன் இது சிக்கல் நிறைந்ததாகவும்இ வன்முறை நிறைந்ததாகவும் அச்சுறுத்தல் தன்மை கொண்டிருந்ததால் இது சர்வதேச ரீதியாக நாடுகளின் கவனிப்புக்கு உட்பட்ட வகையில் இன்று பரிணாமம் அடைந்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் இன முரண்பாடு ஏற்படுவதற்கு குறிப்பாக சிங்கள – தமிழ் முரண்பாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் பின்னனியாக அமைந்துள்ளது. அந்தவகையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றம்இ 1948 ஆம் ஆண்டு 18ம் இலக்கப் பிரஜா உரிமைச் சட்டம்இ 1956 ஆம் ஆண்டு சிங்கள அரச கரும மொழிச்சட்டம் ஆகியன நிறைவேற்றப்பட்டமைஇ 1961ஆம் ஆண்டு சிங்களம் இலங்கை முழுவதற்குமான நீதிமன்ற மொழியாக்கப்பட்டமைஇ 1961 ஆம் ஆண்டு கிறிஸ்தவ மிசனெறிகள் அரசவுடைமையாக்கப்பட்டமை 1971 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்மைஇ இரண்டாம் குடியரசு யாப்பில் தமிழர் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்காமை 1979 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம்இ 1983இல் இடம் பெற்ற ஜூலைக் கலவரம் போன்ற பல்வேறு காரணிகள் இலங்கையில் இன முரண்பாடு ஏற்பட பின்னனியாக அமைந்தது. இவ் இன முரண்பாடு ஆயுதமுரண்பாடாக வழர்ச்சி அடைந்ததோடு அதன் முலடாக பல்லாயிரக்கணக்காண உயிர் இழப்புக்களோடு செத்திழப்புக்கழும் ஏற்பட்டன. இதனால் இனமுரண்பாட்டுக்கு தீர்வொன்று தேவைப்பட்டது.

       இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. சாக் முயற்சிக்கு பின்பே இலங்கை இன முரண்பாட்டினை சமாதான தீர்வு முயற்சிகளில் கொண்டுவர நோர்வேயின் முயற்சி மகத்தானதாகும். Read more................


யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை சமாதானத்தை கட்டியெழுப்புவதில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றிய ஒரு பார்வை.

அறிமுகம்.
இலங்கையானது பல்லினங்களைக் கொண்டதொரு நாடாகும். இந்நாட்டில் சுமார் முப்பது ஆண்டுகள் யுத்தம் இடம்பெற்று வந்தது. 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் 19ம் திகதியுடன் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை பாரிய சவால்களை சந்திக்கத்தொடங்கியது. இது உள்நாட்டு ரீதியாகவும்வெளிநாட்டு ரீதியாகவும் அமைந்திருந்தது. உள்நாட்டு ரீதியாக சந்தித்த சவால்களில் மிக முக்கியமானது யுத்தத்தின் பின்னர் சமாதானத்தினை கட்டியெழுப்புதல் என்பதாகும். யுத்தம் முடிந்து இன்று வரையிலும் இலங்கை சமாதானத்தை கட்டியெழுப்புவதில் பாரிய பின்னடைவினை கண்டுவருகின்றது என்றும் கூறப்படுகின்றது.

சமாதானம் என்பதுபல்லினங்கள் வாழ்கின்ற நாடொன்றில் எல்லா மக்களும் தங்களது தேவைகளை பூர்த்திச் செய்துக்கொண்டுசமமாக வாழ்கின்ற நிலையினை சமாதானம் என்கின்றோம். இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதும் சமாதானம் கிடைத்துவிட்டதாக சிலர் கருத்துக்களை பரப்பி வந்தனர். ஆனால்ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு இனம் சிறுபான்மையாக வாழ்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திச் செய்யாத போது அல்லது அதனை பெற்றுக்கொள்ள தடையாக இருக்கின்ற போது இச்சிறுபான்மை இனம் தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையே இலங்கையிலும் இடம் பெற்றது. இதில் பெரும்பான்மை இனமானது ஆயுத பலத்தின் மூலம் சிறுபான்மை இனத்தினை வெற்றிக்கொண்டுவிட்டது. இதனை முழுமையான சமாதான நிலை என்று கூறமுடியாது. ஆகவே யுத்தத்தின் பின்னர் சமாதானத்தினை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதற்காக இலங்கை அரசு பல நெறுக்கடிகளையும் சந்தித்து. இதற்காக சில அணுகுமுறைகளையும் கையாண்டது. எனினும் அதில் பூரணமான வெற்றி கிடைத்ததாஎன்பதும்அவ்வணுகுமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் எதிர்நோக்குகின்ற சவால்களும் ஆராயப்பட வேண்டியவையாகும்.

இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள்.

யுத்தத்திற்குப் பின்னர் சமாதானத்தினை கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் பின்வருமாறு நோக்கலாம். 

Read More........................


இலங்கை அரசியல் கட்சிகளின் தலைமைத்துவப் போக்கு


அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துக் கொள்கின்றவர் யாராக இருந்தாலும் அவர் தலைவராவார் என்று ஸ்பிறாட் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். மேலும் தலைமை என்பது நடத்தை முறை இது பிறரின் நடத்தை முறையை பாதிக்குமே தவிர பிறரின் நடத்தைமுறை தலைவரின் நடத்தை முறையை பாதிக்காது என்று லாட்பியர், பிரான்ஸ் வொர்த் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக பார்க்கும் போது தலைவரின் நடத்தையானது அவர் சார்ந்த அமைப்பினை பாதிக்கும் என்ற கருத்தினை பெறக்கூடியதாக உள்ளது. எனவே தலைமைத்துவமானது மிகவும் முக்கியமானதும், அதன் தனை;மையினை பொருத்தே கட்சியின் செயற்பாடும் அமையும் என எம்மால் அறிய முடிகின்றது

அரசியற் கட்சி எனும் போது, ஓர் இணைந்த அரசியல் சமூகமாக செயற்படுவதும், ஓரளவிற்கு நெறிப்படுத்தப்பட்டதுமான ஓர் அமைப்பு என்றும் அது குடிமக்களால் உருவாக்கப்படுமாயின் அதுவே அரசியற் கட்சி என்று குறிப்பிடலாம். ஒரு அரசியற் கட்சியின் வெற்றிக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும், அக்கட்சியின் தலைமைத்தவத்திலேயே அவற்றை ஒழுங்கப்படுத்தி செயற்படுத்தக் கூடிய பலம் காணப்படுகின்றது. ஆகவே கட்சியானது நிலைத்து ஆட்சிப்பீடத்தை கைப்பற்றுவதும் அதன் வெற்றி தோல்வி என்பன தலைமைத்துவத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எந்தவொரு கட்சியானாலும் ஒரு தலைமைபீடத்தைக் கொண்டே காணப்படும். அதில் ஒரு தலைவர் காணப்படவே செய்கின்றார். மேலும் ஆட்சி பீடத்தை அமைக்கும் கட்சியின்

 Read more



 இலங்கை அதிகார பரவலாக்க முயற்சியில் கண்டுவரும்தொடர் தோல்விகள்.


அறிமுகம்.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்கவில்லை என்ற விமர்சனம் பல தரப்புகளினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில், இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அதிகார பரவலாக்க முன்னெடுப்புகள் பலவற்றை சில காலகட்டங்களில் முன்னெடுத்திருந்தது. உலகில் பல்வேறு மதிரிகளில் அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளபட்டுள்ளது. அவை அந்தந்த நாட்டின் சூழ்நிலக்கு ஏற்றதாக அமைந்திருக்கும். இவற்றில் சில மாதிரிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு, அவை செயற்திறன் குன்றியனவாய் தோல்வி அடைந்தமையை காணலாம். எனவே இதற்கான காரணங்கள் முறையான வகையில் ஆராயப்பட்டால் மாத்திரமே எதிகாலத்தில் சிறந்த தீர்மானத்திற்கு வரமுடியும் என்பது தெளிவு. இந்நிலையில்தான் கடந்த காலங்களில் அதிகாரபரவலாக்க முயற்சிகள் தோல்வி கட்டமைக்கான காரணங்களை இக்கட்டுரை ஆராய்கின்றது. Read more