“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

Other Counries


தனித்துவம் பொருந்திய இந்திய அரசியல் யாப்பு

நவீன ஜனநாயக நாடுகள் அனைத்தும் அரசியல் யாப்பினைக் கொண்டே தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அரசியல் யாப்பு என்பது, ஆள்வோரின் கடமைகளையும் ஆளப்படுவோரின் உரிமைகளையும் குறிப்பிடும் விதிகளின் தொகுப்பு எனக் கூறலாம். இதனடிப்படையில் அனேகமான நாடுகளின் அரசியல் யாப்புக்களில் அடிப்படை உரிமைகளையும் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது. இவ்வாறாகவே இந்திய அரசியல் யாப்பும் ஏனைய நாடுகளின் அரசியல் யாப்பிலிருந்து தன்னை தனித்துவமாக காட்டுவதுடன், அடிப்படை உரிமைகளையும் ஒரு பகுதியாகக் கொண்டு காணப்படுகின்றது. 

இந்திய அரசியல் யாப்பினுடைய தனித்துவத்தினையும் அதில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் விளங்கிக் கொள்வதாயின் பின்வருவனவற்றை தெளிவாக விளங்குதல் வேண்டும். இந்தியா பற்றிய விளக்கம், யாப்பினுடைய தோற்றம், அதன் தனித்துவம் அல்லது சிறப்பம்சம், ஏனை நாடுகளுடன் ஒப்பிடுப்பார்த்தல், கூட்டாட்சியின் சிறப்பு, அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம், அதன் தோற்றம், தோற்றத்துக்கான காரணம், அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள், அவற்றின் நடைமுறை சாத்தியப்பாடு, அடிப்படை உரிமைகளில் தாக்கத்தினை செலுத்தும் காரணிகள், நிறுவனங்கள், அவற்றின் நன்மை தீமை, எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டிய விடயங்கள் அல்லது சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள், புதியவை சேர்க்கப்படுவதற்கான தேவைகள், ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை உரிமைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். இவற்றை விளக்குவதன் மூலம் இந்திய அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பகுப்பாய்வு செய்யலாம்.
Read more................

 

 

பிரான்சிய ஜனாதிபதி


ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்கான ஆட்சி என்று குறிப்பிடலாம். இன்றைய உலகில் மக்கள் தமது பிரதிநிதிகள் ஊடாக தமது அரசியலினை செயற்படுத்தி வரகின்றனர். இதனையே பிரதநிதித்துவ ஜனநாயகம் என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படு ஆட்சி பீடத்திற்கு அனுப்படும் மக்கள் பிரதிநிதிகள் சில நேரங்களில் சகல அதிகாரங்களையும் தமது கையில் எடுத்துக் கொண்டு, சர்வாதிகார போக்கில் செயற்படுவதையும் நாம் அவதானிக்கலாம். ஆனால் அது குறிப்பிட்ட கட்டத்தின் பின்னர் மக்களால் வீழ்த்தப்படுவதையும் நாம் வரலாற்றின் ஊடாக கண்டுள்ளோம்.


சுவிற்சர்லாந்தின் கூட்டுக் குழு நிர்வாக முறை


பல இனங்களைக் கொண்ட ஒரு தேசத்தை சமஷ;டிமுறையின் கீழ் வெற்றிகரமாக வடிவமைத்த முதலாவது தேசம் என்ற பெருமையைசுவிட்சர்லாந்துக்குண்டு. ஜேர்மன், பிரஞ்சு, இத்தாலி ஆகிய பல தேசிய இனங்களையும் தேசிய சிறுபான்மைஇனங்களையும் கொண்ட தேசமே சுவிட்சர்லாந்து. பல் தேசிய அரசின் வளர்ச்சியை இங்குகாணலாம். சுவிஸ் மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாடாகும்.  Read more