நவீன ஜனநாயக
நாடுகள் அனைத்தும் அரசியல் யாப்பினைக் கொண்டே தமது அரசியல் நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றன. அரசியல் யாப்பு என்பது, ஆள்வோரின் கடமைகளையும் ஆளப்படுவோரின் உரிமைகளையும்
குறிப்பிடும் விதிகளின் தொகுப்பு எனக் கூறலாம். இதனடிப்படையில் அனேகமான நாடுகளின்
அரசியல் யாப்புக்களில் அடிப்படை உரிமைகளையும் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது.
இவ்வாறாகவே இந்திய அரசியல் யாப்பும் ஏனைய நாடுகளின் அரசியல் யாப்பிலிருந்து தன்னை
தனித்துவமாக காட்டுவதுடன்,
அடிப்படை
உரிமைகளையும் ஒரு பகுதியாகக் கொண்டு காணப்படுகின்றது.
இந்திய அரசியல்
யாப்பினுடைய தனித்துவத்தினையும் அதில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும்
விளங்கிக் கொள்வதாயின் பின்வருவனவற்றை தெளிவாக விளங்குதல் வேண்டும். இந்தியா
பற்றிய விளக்கம், யாப்பினுடைய
தோற்றம், அதன் தனித்துவம்
அல்லது சிறப்பம்சம், ஏனை நாடுகளுடன்
ஒப்பிடுப்பார்த்தல், கூட்டாட்சியின்
சிறப்பு, அடிப்படை
உரிமைகள் பற்றிய அத்தியாயம், அதன் தோற்றம், தோற்றத்துக்கான காரணம், அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள், அவற்றின் நடைமுறை
சாத்தியப்பாடு, அடிப்படை
உரிமைகளில் தாக்கத்தினை செலுத்தும் காரணிகள், நிறுவனங்கள், அவற்றின் நன்மை தீமை, எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டிய விடயங்கள் அல்லது
சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள், புதியவை சேர்க்கப்படுவதற்கான தேவைகள், ஐக்கிய நாடுகள்
சபையின் அடிப்படை உரிமைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். இவற்றை விளக்குவதன்
மூலம் இந்திய அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பகுப்பாய்வு
செய்யலாம்.
தென்னாசிய
நாடுகளில் மிகப் பெரிய நாடாகவும் ஒரு உபகண்டமாகவும் காணப்படும் 'பாரத்' என்று
அழைக்கப்படும் இந்தியாவானது, மிக நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியத்தினைக் கொண்டதொரு
நாடாகும். இதன் அரசியல் வரலாறானது மேற்குத்தேச கிரேக்க, உரோமானிய கால
வரலாற்றிற்கும் முற்பட்டதாக கருதப்படுகின்றது. ஆரம்ப கால இந்தியா பல சிறிய அரசகளாக
மன்னர்களினால் ஆளப்பட்டு வந்தது. பிரித்தானிய ஆதிகத்தின் பின்னர்அனைத்தும்
இவ்வரசியலமைப்பின்
சிறப்பம்சங்களை அல்லது தனித்துவத்தினை நாம் பல அடிப்படைகளில் நோக்கலாம். இந்திய
அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது வசனமானது பின்வருமாறு
காணப்படுகின்றது. 'பாரத தேசத்தை, மதசார்பற்ற
சமதர்ம குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதிப்பூண்டு, இந்திய மக்கள்
அனைவருக்கும், சமூக பொருளாதார
அரசியல் நீதி, எண்ண, எழுத, எடத்துச் செல்ல, நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய
சுதந்திரம், தரத்திலும்
தகுதியிலும் வாய்ப்பிலும் சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதற்கு எங்களிடையே தனிமனிதரின்
கௌரவம் மற்றும் தேசிய ஒற்றுமையும், ஒருமைபாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத்துவத்தை
வளர்க்கவும் உறுதி எடுத்துக் கொண்டிருக்கின்றோம். எங்களது அரசியல் நிர்ணய சபையில் 1949ம் ஆண்டு நவம்பர்
மாதம் திங்கள் 26ம் நாள் இந்த
அரசியல் சாசனத்தை உருவாக்கி ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.' என்பதாக
காணப்படுகின்றது. இங்கு சமதர்ம குடியரசு எனக் கூறப்பட்டிருப்பது ஒரு தனித்தவமான
விடயமாக நாம் எடுத்துக் கூறலாம். இதனால் இவ்வரசியல் யாப்பு அடிநிலை மக்களின்
நலனிலும் அக்கறை காட்டியது. மேலும் சமய சார்பற்ற ஆட்சியெனக் கூறுவதன் மூலம்
அனைத்து மக்களையும் மதிக்கின்ற தன்மையினையும் யாப்பில் காணக்கூடியதாக உள்ளது.
'உருவாக்கி எங்களுக்கு
வழங்கிக் கொண்டிருக்கின்றோம்' என்று குறிப்பிடுவதன் மூலம் இறைமை அதிகாரமானது
மக்களிடமுள்ளது என்பதை எடுத்தக் காட்டுகின்றது. இது இந்திய அரசியல் யாப்பிற்கு ஒரு
தனிச் சிறப்பாக காணப்படுகின்றது.
குடியுரிமை பற்றி
ஒரு தெளிவான விளக்கத்தினைக் கொண்டள்ளது. அதாவது இந்த அரசியல் சாசனம் துவங்கப்பட்ட
நாளில் இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு நபரும், மற்றும் இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும்
அவர்களுடைய பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருப்பின் அத்தகைய நபரும், இந்த அரசியல் சாசனம்
துவங்கிய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் வசித்து வரும் நபரும்
ஒவ்வொரு இந்திய குடிமக்களாவர். 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி அல்லது அதற்குப் பிறகும் ஆனால் 1986 நவம்பர் 26ம் நாளுக்கு
முன்பதாக பிறந்த ஒவ்வொருவரும் இந்தியக் குடிகளாகக் கருதப்படுவர். 1947ம் ஆண்டு மார்ச்
முதல் நாளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற எவரும் இந்தியக்
குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள். என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில்
காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த சில நாடகளில் குடியுரிமை பிரச்சினைகள்
இன்றுவரைத் தொடர்கின்றது. இதற்கு காரணம் அந்நாடுகள் இயற்றிய முதலாவது குடியரசு
யாப்பாகும். இதன்படி பார்க்கும் போது இந்திய யாப்பானது தனிச்சிறப்பினைக் கொண்டு
காணப்படுகின்றது.
உலகிலேயே அளவில்
பெரியதும் பிற அரசியலமைப்பு முறைகளின் சரத்தையும் கொண்ட பெருமைக்குரிய இந்திய
அரசியலமைப்புச்சட்டம் இதுவரை சுமார் நூறுமுறைகளுக்கு மேல் திருத்தப்பட்டுள்ளது.
இவ்வரசியலமைப்பின் பகுதிகலாக பின்வருவன காணப்படுகின்றன.
1. முகப்புரை
2. பிரிவுகள் 1 தொடக்கம் 444 வரையுள்ள
பகுதிகள் 1 தொடக்கம் ஒஒiஎ வரை
3. அட்டவணைகள் 1 தொடக்கம் 12 வரை
4. பிற்சேர்க்கை
பகுதி ஒi பஞ்சாயத்தக்கள்
மற்றும் அட்டவணை 6 (பிரிவு 243 – 9) 1992 இந்திய
அரசியலமைப்புத் திருத்தம் 78 ஆக பதிதாக
இணைக்கப்பட்டது.
இவ்வாறானதொரு
தனித்துவமான கட்டமைப்பினைக் கொண்டு காணப்படுகின்றது. இந்திய அரசியல் யாப்பின்
பகுதி 111 சரத்துக்கள் 12 தொடக்கம் 35 வரை அடிப்படை
உரிமைகள் பற்றி குறிப்பிடுகின்றது. வேறு எந்த நாடிலும் காணாத அளவிற்கு அடிப்படை
உரிமைகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வாரள்கள் கருதுகின்றனர்.
அடுத்ததாக இந்திய
அரசியலமைப்பின் தனித்துவங்களை ஏனைய நாடுகளுடன் ஒப்பீட்டுப்பார்க்கும் போதும்
விளங்கிக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இங்கிலாந்து அரசியல் கூறுகள் சிலவற்றைக்
கொண்டிருந்தாலும் அவற்றை அவ்வாறே கொள்ளாது இந்திய சமூகத்திற்கு ஏற்ற வகையில்
மாற்றி யாப்பில் சேர்க்கப்படட்டுள்ளது. அதாவது ஜனாதிபதி பெயரளவு நிர்வாகியாக
இருந்தாலும் பிரித்தானிய முடியைப்போல் அல்லாமல் இரு சபைகளின் இணைப்புக்
கூட்டத்தில் தெரிவு செய்யப்டுவதென்பது சிறப்பானதொரு அம்சமாக காணப்படுகின்றது.
அமெரிக்க
யாப்பில் கூறப்பட்டுள்ளது போன்று இங்கும் உரிமைகள் கூறப்பட்டாலும் அவை இந்திய
சமூகத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி பிரதான ஆறு அம்சங்களை உள்ளடக்கி
காணப்படுகின்றது. இதனால் பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாட்டிட்கு ஏற்புடையதாக
அமைந்துள்ளமை இதன் தனி சிறப்பம்சமாகும்.
கனடாவின்
யாப்பினை ஒத்தாக மத்திய அரசில் பலமான ஒரு கூட்டாட்சி முறையினை யாப்பு
காட்டுகின்றது. இருப்பினும் இது கனடாவின் முறையிலிருந்து பெருமளவிற்கு வேறுபட்டு
காணப்படுகின்றது. இது சிறப்பானதொரு தன்மையாகும்.
சிறப்பானதொரு
வழிக்காட்டி தத்துவத்தினைக் கொண்டு காணப்படுகின்றது. இது ஏனைய நாடுகளுடன்
பார்க்கும் போது அயர்லாந்து யாப்பில் உள்ளது போன்று காணப்படுகின்றது. இருப்பினும்
இந்தியக் குடியரசிற்கு ஏற்றவகையில் இது அமைக்கப்ட்டுள்ளது.
இவற்றுடன்
பஞ்சாயத்துக்கள் போன்ற வற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கிராமட்டம்
வரையிலான அடிப்படை தகவல்களை உள்ளடக்கியதாக இவ்யாப்பு வரையப்பட்டுள்ளது. இது
மிகவும் சிறப்பானதொரு விடயமாகும். இது ஏனைய நாடுகளில் காணப்படாத ஒரு விடயமாகும்.
அடுத்ததாக இந்திய
அரசியலமைப்பின் தனித்துவத்தினை அது அமைத்துள்ள கூட்டாட்சி முறையினைக் கொண்டும்
விளக்கலாம். இங்கு 28 மாநிலங்களும்
ஏழு யூனியன் பிரதெசங்களும் காணப்படுகின்றன. இவற்றிற்கும் அதிகாரங்கள்
வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மத்திய பட்டியல,; மாநில பட்டியல், ஒத்தியங்கும் பட்டியல் என்ற அடிப்படையில் யாப்பினூடாக
பிரித்து காட்டப்பட்டுள்ளது. இங்கு பட்டியல் என்பது ஒவ்வொரு பிரதேசத்திற்கும்
ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறிக்கின்றது. உலக நாடுகள் வேறு எதுவும் கொண்டிராத
ஒரு சமஷ;டி முறையினையே
இந்தியா கொண்டுள்ளது. ஒத்தியங்கும் பட்டியலை மத்திய அரசிற்கு சாதகமாக அமைத்துள்ளது.
மேலும் மாநில ஆட்சியை கலைக்கும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டிருக்கின்றது.
இவ்வாறனதொரு யாப்பினையே இந்தியாக கொண்டுள்ளது.
அடுத்ததாக இந்திய
அரசியலமைப்பபை திருத்தும் முறையினூடாகவும் இதன் தனித்துவத்தினை விளங்கிக்
கொள்ளலாம். இவ்யாப்புத்திருத்தம் மூன்றுவகை நடைமுறைகளை பின்பற்றிச் செய்யப்பட
வேண்டியவை.
1. நாடாளுமன்றத்தின்
பெரும்பான்மையை மட்டுமே பெற்றுச் செய்யக் கூடிய திருத்தங்கள். இவை வெறும் அட்டவணை
விவரங்களைப் போன்றவை. அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாதவை.
2. நாடாளுமன்றத்தின்
இரு அவைகளின் 2ஃ3 பங்கு
பெரும்பான்மையை பெற்றபிறகே செய்யக் கூடிய திருத்தங்கள். முன்னதை ஒப்பிட இவை
முக்கியமான விஷயங்கள்.
3. நாடாளுமன்றத்தின்
இரு அவைகளின் 2ஃ3 பங்கு
பெரும்பான்மையுடன் குறைந்த பட்டச பாதியளவு மாநில சட்டப் பேரவைகளின் ஒப்புதலை பெற்றப்
பிறகே செய்யக் கூடிய திருத்தங்கள். இவை எத்தகையவை என்பதை இந்திய
அரசியலமைப்புச்சட்டம் வரைந்துள்ளது.
இவ்வாறான
விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசியலமைப்பின் தனித்துவத்தினை விளங்கிக்
கொள்ளக் கூடியதாக உள்ளது.
அரசாங்க
அமைப்பின் ஆணிவேறாக உரிமைகள் விளங்குகின்றன. அரசாங்கத்தின் அதிகார செயற்பாடிற்கு
ஓர் அறப்பண்பை அவை அளிக்கின்றன. அதனோடு நல்வாழ்விற்க இன்றியமையாதனவாக இருப்பவை
என்ற முறையில் அவற்றை இயற்கை உரிமைகள் என்றும் கொள்ளலாம். ஒரு அரசின் அரசியல்
சட்டத்தில் உரிமைகள் இடம்பெற்று விட்டால் அவற்றை யாரும் மீறமுடியாது. அரசாங்கம்
மக்கள் என்ற இரு பிரிவினரும் அவற்றை சிறப்பாக கருதுவர். ஒவ்வொரு குடிமகனும்
அடிப்படையாக உள்ள உரிமைகளை நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டிக் கொள்ள முடியும்.
உரிமைகள் எனும்
எண்ணக்கருவானது பிரான்சிய புரட்சியினைத் தொடர்ந்து பேசப்பட்டு வந்த ஒரு விடயமாக
இருந்தாலும், அடிப்படை
உரிமைகள் எனும் விடயமானது ஐக்கிய அமெரிக்காவின் தோற்றத்துடனேயே பாரிய அளவில்
பேசப்படத் தொடங்கியது. அதாவது ஐக்கிய அமெரிக்க யாப்பில் அடிப்படை உரிமைகள்
சேர்க்கப்பட்டதை தொடர்ந்து இது ஆரம்பமானது எனலாம். இதன் பின்னர் உருவான அனேகமான அரசுகள்
தமது அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் என்ற விடயத்தில் கவனத்தை செலுத்தின.
இந்தவகையிலேயே இந்திய அரசியல் நிர்ணய சபையும் தமது அடிப்படை உரிமைகளை யாப்பில்
சேர்த்துள்ளன.
இதற்கான அடிப்படை
காரணம் அல்லது பின்னூட்டல் என்று நாம் பார்க்கும் போது காங்கிரஸ் கட்சியும் இடது
சாரி கட்சிகளும் அவ்வப்போது அடிப்படை உரிமைகள் தொடர்பாக பேசி வந்தன. அடிப்படை
உரிமைகள் யாப்பில் சேர்த்தக் கொள்வதன் மூலம் தான் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த
முடியும். என்பதோடு மக்கள் பூரணமான ஜனநாயக
உரிமைகளை அனபவிக்க முடியும் என்றார் பிரபல சட்ட வல்லுனர் என்.ஏ. பல்கிவாலா.
அடிப்படை உரிமைகள் பற்றி சிந்திப்பது இப்பொது இயல்பாகி விட்டது என்;றும் அவற்றின்
மூலம் தான் வாழ்வியல் நடைபெறுகின்றது என்றும் டாக்கடர் அம்பேத்கார் தெரிவித்தார்.
இந்திய
அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் பற்றி கூறப்பட்ட விடயங்களை நோக்கம் போது அவை
பின்வருமாறு காணப்படுகின்றது. இந்திய அரசியலமைப்பில் பகுதி 111 சரத்துக்கள் 12 தொடக்கம் 35 வரையான
பிரிவுகளில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அட்டவணைப்படுத்தப்பட்டு, விளக்கப்பட்டு
நிறுவுப்பட்டுள்ளன. இந்திய அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்
பற்றிய விடயங்களை நோக்கும் போது அவற்றை பின்வரும் ஆறு வகையாக பிரித்து
விளக்குகின்றது.
1. சமத்துவ உரிமைகள்
(விதிகள் 14 முதல் 18 வரை)
2. சுதந்திரமாக
இருக்கும் உரிமைகள் (விதிகள் 19 முதல் 22 வரை)
3. சுரண்டலுக்கெதிரான
உரிமைகள் (விதிகள் 23,24)
4. சமயச் சுதந்திரம்
(விதிகள் 25 முதல் 28 வரை)
5. பண்பாடு மற்றும்
கல்வி உரிமைகள் (விதிகள் 29,30)
6. அரசியலமைப்புத்
தீர்முறை உரிமைகள் (விதிகள் 32 முதல் 35 வரை)
இவற்றில்
கூறப்படும் விதிகளை விரிவாக நோக்கும் போது அவற்றில் பின்வரும் விடயங்கள்
கூறப்பட்டுள்ளன.
1. சமத்துவ உரிமைகள்
விதி 14
சட்டத்தின் முன்
அனைவரும் சமமாக கருதப்படவும் பதுகாக்கப்படவும் வேண்டும்.
விதி 15
மதம்,இனம்,சாதி,பால்,பிறப்பிடம்
காரணமாக அல்லது வேறு எக்காரணத்திற்காகவும் அரசு மக்களிடையே வேறுபாடு காட்டக்
கூடாது. ஆனால் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், தனிவசதிகள் வழங்குவது;ம் பிற்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் தனிச்சலுகைகள் வழங்குவதும்
இவ்விதிக்கு முரணாக அமைய மாட்டாது.
விதி 16
அரசாங்க
சேவைகளில் சேருவதற்கு அரசாங்கம் எல்லா மக்களுக்கும் சம வாய்ப்புக்களை வழங்குதல்
வேண்டும். ஆனால் பிற்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் அரசாங்கம் தனியான சலுகைகளை
வழங்கலாம்.
விதி 17
தீண்டாமை
ஒழிக்கப்பட்டடுள்ளதுடன் அது நடைமுறையில் செயற்படுத்தப்படுவதும் தடை
செய்யப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக எழும் எத்தகைய குறைபாடுகளும் சட்டப்படி
தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களாகும்.
விதி 18
படைத்துறை, கல்வித்துறை
பட்டங்களைத் தவிர பிற பட்டங்கள் எதனையும் அரசு வழங்கக்கூடாது. அதேவேளை இந்திய
மக்கள் எவரும் பிற நாடுகள் வழங்கும் பட்டத்தினை பெற்றுக்கொள்ளக்கூடாது. இந்திய
குடிமகனாக இல்லாவிட்டாலும் அரசின் கீழ் பயன் பெறுகின்ற அல்லது அரசின்
நம்பிக்கைக்குரிய பணியை ஏற்றுக்கொண்டுள்ள எவ்நபரும் இந்திய ஜனாதிபதியின் சம்மதம்
இன்றி வெளிநாடுகளிலிருந்து எத்தகைய பட்டங்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
2. சுதந்திரமாக
இருக்கும் உரிமைகள்.
விதி 19
இந்திய
குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமாக சிந்திப்பதற்கும், அதனை எடுத்துச்
சொல்வதற்கும் ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்கும் சங்கங்களையும், அமைப்புக்களையும்
ஏற்படுத்துவதற்கும் இந்திய எல்லைக்குள் எத்தகைய தடையுமின்றி நடமாடுவதற்கும், இந்திய
எல்லைக்குள் தாம் விரும்பிய இடங்களில் வசிப்பதற்கும், தங்கியிருப்பதற்கும்
உரிமையுண்டு. அத்துடன் சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும், வைத்திருப்பதற்கும், எந்தத்தொழிலையும்
செய்வதற்கும், நடாத்துவதற்கும், எந்தப்பணியிலும்
ஈபடுவதற்கும், எத்தகைய
வியாபாரத்தையும் செய்வதற்கு உரிமையுண்டு.
விதி 20
குற்றம் செய்யும்
காலத்தில் நடைமுறையிலிருக்கும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை
மீறுபவர்களுக்கே தண்டனை வழங்கல் வேண்டும். ஒரு நபரை ஒரு குற்றத்திற்காக ஒரு
தடவைக்கு மேல் குற்றஞ்சாட்டி தண்டிக்கக் கூடாது. அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட எந்த
நபரையும் தமக்கெதிராக தாமே சாட்சியளிக்க வேண்டுமென வற்புறுத்தக்கூடாது.
விதி 21
சட்டப்படி
உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி வேறு எந்த விதமாகவும் ஒரு தனி நபரின்
தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக் கூடாது.
விதி 22
கைதுசெய்து ஒரு
நபரை சிறையில் வைப்பதற்கு முன்னர் அவர் எதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்
என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவித்தல் வேண்டும். அத்தோடு அவர் தான் விரும்பி
தேர்ந்தெடுக்கும் சட்டத்தரணியுடன்கலந்தாலோசிக்கவும், அவரது துணையுடன் வாதாடவும் உரிமையளித்தல்
வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டவரை 24 மணித்தியாலத்திற்குள் நீதிபதி முன் கொண்டுவந்து அவரின்
ஆணையின் பேரிலையே அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருத்தல் வேண்டும்.
நீதிபதியின்
உத்தரவில்லாமல் 24 மணி நேரத்திற்கு
மேல் காவலில் வைத்திருக்க முடியாது.
மேற்கூறப்பட்ட
விதி வெளிநாட்டைச் சேர்ந்த எதிரிக்கும், தடுப்புக் காவலில் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு
காவலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கும் பொருந்தமாட்டாது.
ஆனால் எந்த
நபரையும் 3 மாதங்களுக்கு
மேல் சிறையில் வைத்திருப்பதற்கான அதிகாரத்தை எந்த தடுப்புக்காவல் சட்டமும்
வழங்கக்கூடாது,
சிறையில்
நீடித்து வைத்திருக்க வேண்டிய தவிர்க்க முடியாத அவசியம் இருப்பின் உயர்
நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தவர்கள் அதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையினை
வழங்குதல் வேண்டும். அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கத்தக்கவர்கள்
அடங்கிய ஓர் ஆலோசனைக்குழு அவ்வாற்ன அறிக்கையினை வழங்குதல் வேண்டும்
3.சுரண்டலுக்கெதிரான
உரிமைகள்.
விதி 23
மனிதர்களை விற்பதோ, வாங்குவதோ
வற்புறுத்தி வேலை செய்வதோ,
பிச்சை எடுக்க
வைப்பதோ கூடாது. அத்துடன் பொதுக் காரியங்களுக்காக கட்டாயப்படுத்தி வேலைவாங்கவும்
கூடாது. அவசியமக வாங்கவேண்டி ஏற்படின் சாதி, சமயம், இனம், வர்க்கம் என்கிற வேறுபாடுகளின்றி அனைவரிடமும் வாங்கப்படல்
வேண்டும்.
விதி 24
14 வயதுக்கு
குறைந்த சிறுவர்களை எந்த தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் வேறு அபாயகரமான
வேலைகளிலும் அமர்த்தக்கூடாது.
4.சமயச் சுதந்திரம்
அல்லது வழிபாட்டுச் சுதந்திரம்.
விதி 25
பொது ஓழுங்கு, ஒழுக்கம் அற்றும்
நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இப்பகுதியில் கூறப்பட்ட ஏனையவற்றிற்கும் உட்பட்டு
மக்கள் எல்லோரும் தம் மனசாட்சிப்படி செயற்படுவதற்கு சுதந்திரமுடையவர்களாவர்.
இதனடிப்படையில் தாம் விரும்பும் மதத்தை தழுவி அதன் கொள்கைகளுக்கேற்ப நடந்து அதைப்
பரப்ப அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் மதத்துடன் தொடர்புடைய பொருளாதார, அரசியல், நீதி சார்ந்த
உலகியல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் அரசுக்கு அதிகாரமுண்டு. இதன்
அடிப்படையில் இந்துக்களுடைய கோவில்கள் மற்றும் மதச்சார்பற்ற இடங்களை இந்து மதத்தைச்
சார்ந்த எல்லா வகுப்பினருக்கும் பாகுபாடு இன்றி திறந்து வைக்கப்படுவதற்கு
தேவைப்படும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அல்லது அது தொடர்பான புதிய சட்டத்தை
உருவாக்குவதற்கம் அரசிற்கு உரிமையுண்டு.
இங்கு இந்து என்ற
சொல் சீக்கிய, சமண, புத்த மதங்களைச்
சார்ந்தவர்களை குறிப்பிடுவதோடு இம் மதங்கள் தொடர்பான கோவில்களையும், மதச்சார்பற்ற
இடங்களையும் குறிப்பிடுகிறது.
விதி 26
பொது அமைதிக்கும், ஒழுக்கத்திற்கும், மக்கள்
நல்வாழ்விற்கும் உட்பட்ட வகையில் எந்த மதப்பிரிவினரும் மத வழிபாட்டுச்
செயல்களுக்காக நிறுவனங்களை அமைத்துப் பேண உரிமையுண்டு. இதன்படி தமது மதம்
சம்மந்தப்பட்ட விடயங்களை தாமே நிர்வகிப்பதற்கும், சொத்துக்களைப் பெறுவதற்கும,; அதனை உரிமையுடன்
வைத்திருப்பதற்கும், அத்தகைய
சொத்துக்களை சட்டப்படி நிர்வகிப்பதற்கும் உரிமையுண்டு.
விதி 27
ஒரு குறிப்பிட்ட
மதத்தின் அல்லது மதப்பிரிவின் செலவுகளுக்காக வேறு எவரையும் வரி செலுத்தும்படி
கட்டாயப்படுத்தக்கூடாது.
விதி 28
அரசு
நிதியிலிருந்து நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் எத்தகைய மத போதனைகளையும்
மேற்கொள்ளக்கூடாது. ஆனால் மதபோதனைக்கென ஓர் அறக்கட்டளை அல்லது கொடைகள் மூலம்
உருவாக்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை அவை அரசாங்க நிதி உதவியின்
மூலம் தொழிற்பட்டாலும் இவ்விதி பொருந்தாது. அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அல்லது
அரசாங்க உதவித் தொகையினைப் பெற்று நடாத்துகின்ற கல்வி நிலையங்களில் அல்லது
அவற்றடன் இணைந்த கட்டடங்களில் நடைபெறும் மத போதனைகளிலும், வழிபாடுகளிலும்
சம்மந்தப்பட்டவர்களின் சம்மதம் இன்றி சம்மந்தப்பட்டவர்கள் பாலகர்களாக இருந்தால்
அவர்களுடைய பாதுகாவலர்களின் சம்மதம் இன்றி பங்கேற்கவேண்டும் எனக் கேட்கக்கூடாது.
5.பண்பாடு மற்றும்
கல்வி உரிமைகள்
விதி 29
தனி மொழி, மதம், பண்பாடு
ஆகிவற்றைச் சேர்ந்த பிரிவினர் அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு உரிமையுடையவர்களாவர்.
சமயம், சாதி, இனம், மொழி அல்லது பிற
வேறுபாடுகள் காரணமாக எந்தப் பிரஜைக்கும் அரசால் அல்லது அரசின் உதவித்தொகையால்
நடாத்தப்படும் கல்வி நிலையங்களில் அனுமதியளிப்பதற்கு மறப்புத் தெரிவிக்கக்கூடாது.
விதி 30
மதம் அல்லது மொழி
அடிப்படையில் அமைந்துள்ள சிறுபான்மையினர் தமது விருப்பம்போல கல்விநிலையங்களை
நிறுவி நிர்வகிப்பதற்கு உரிமையுண்டு. மொழி அல்லது மதத்தின் காரணமாக
சிறபான்மையினராக உள்ளவர்களின் நிர்வாகத்தின் கீழ் ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது
என்பதற்காக அதற்கு உதவித்தொகையளிப்பதில் எத்தகைய பாகுபாட்டையும் அரசு
காட்டக்கூடாது.
6.அரசியலமைப்பத்
தீர்முறை உரிமைகள்
விதி 32
அடிப்படை
உரிமைகளைச் செயற்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தினை அணுகும் உரிமை இந்தியப்
பிரஜைகள் அனைவருக்குமுண்டு. இதற்காக பிரஜைகள் நேரடியாகவும் உச்சநீதிமன்றம்
செல்லலாம் அல்லது மாநில உயர்நீதிமன்றம் சென்று பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு
மேன்முறையீடு செய்யலாம்.
அடிப்படை
உரிமைகளை வலியுறுத்துவதற்காக உச்ச நீதிமன்றமும், மாநில உயர்நீதிமன்றங்களும் ஆட்கொணர்ந்திப்
பேராணை, செயலுறுத்தும்
நீதிப்பேராணை, தடை நீதிப்பேராணை, ஆவணக்கேட்பு
நீதிப்பேராணை, உரிமையேதுவினா
போன்ற நீதிப்பேராணைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளன.
விதி 33
படைப்பிரிவினரும்
மற்றும் பொதுஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ள படையினரும் தமது கடமைகளை
ஒழுங்காக நிறைவேற்றவும் கட்டுப்பாட்டைக் காத்து பராமரிக்கவும் ஏற்ற வகையில்
உரிமைகளை எந்தளவிற்கு கட்டுப்படுத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்பது பற்றி
பாராளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் வரையறை சேய்யலாம்.
விதி 34
இந்திய
எல்லைக்குள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒரு பிரதேசத்தில் ஒழுங்கை
நிலைநாட்டவும், பாதுகாக்கவும்
மத்திய அல்லது மாநில அரச பணியில் இருப்போர் அல்லது அத்தகைய வேறு நபர்கள் எத்தகைய
செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பதற்கும்
அல்லது அதற்கென விதிக்கப்பட்டுள்ள தண்டனையை பறிமுதல் செய்யப்படும் உத்தரவு அல்லது
வேறுசெயலைச் சட்டபூர்வமாக்குவதற்கும் பாராளுமன்றம் சட்டங்களை இயற்றலாம்.
விதி 35
19(3), 32(3), 33, 34 விதிகளில்
வரக்கூடிய விடயங்களில் பாராளுமன்றமே சட்டமியற்றும் அதிகாரத்தைக்
கொண்டிருக்கும். இவற்றின்கீழ் வரும் குற்ற விடயங்களில் கூட தண்டனை விதிக்கும்
அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அரசியல் யாப்ப தொடங்குவதற்கு முன்னர்
இருந்த சட்ட விடயத்திலும் இவ்விதி பொருந்துவதாக இருக்கும்.
போன்ற
விதிகளினூடாக அடிப்படை உரிமைகள் விளக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல்
யாப்பானது அடிப்படை உரிமைகளை பட்டியலிட்டு காட்டிய போதும் அவற்றின் நடைமுறை
சாத்தியப்பாடு பற்றி நாம் நோக்குதல் வேண்டும். மேற்கூறியவிதிகளில் மூல யாப்பின் மூலம் அடிப்படை உரிமைகளை
விளக்குகின்ற போதும் ஆரம்பத்தில் இதனை வரையரை செய்ய வில்லை. இருப்பினும்
பிற்காலத்தில் ஏற்பட்ட இன முரண்பாடுகள் போன்றவற்றின் விளைவாக அடிப்படை கடமைகள்
பற்றியும் யாப்பில் சேர்க்க வேண்டிய தொரு நிலை ஏற்பட்டது. இதனால் 1976ம் ஆண்டு 48வது
சீர்த்திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகளும் சேர்க்கப்பட்டது. இது அடிப்படை
உரிமைகளுக்கு முதலாவதாக இடப்பட ஒரு கட்டுப்பாடாக காணப்படுகின்றது.
18ம் விதியானது
இந்தியப் பிரஜை எவரும் வெளிநாட்டுப்பட்டங்களைப் பெறுதல் கூடாது. அவ்வாறு
பெறுவதாயின் ஜனாதிபதியின் அனுமதியினைப் பெறுதல் வேண்டும். என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது நடைமுறையில் சாத்தியப்பாடு குறைந்த
ஒன்றாகவே காணப்படுகின்றது. ஏனெனில் இன்றைக்கு அனேகமான இந்தியப் பிரஜைகள்
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலேயே பட்டங்களை பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக
அவுஸ்திரேலியாவை குறிப்பிடலாம். எனவே இது ஒரு யாப்பலங்காரமே எனலாம்.
24ம் விதியானது
சிறவர்கள் வேலைக்கு அமர்த்தப்படக் கூடாது என்கின்றது. ஆனால் அண்மைய ஆய்வின் படி
இந்தியாவில் அதிகமான சிறுவர் தொழிலாளர்கள்
காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2005ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி கோத்ரா
இரயில் எரிப்பு சம்பவம் எதேச்சியான ஒரு தீவிபத்தே என ஜஸ்டிஸ் பானர்ஜி கமிட்டி
அறிக்கை சமர்பித்தது. இந்த சம்பவமானது அடிப்படை மனித உரிமைகளை கேள்விக்குறியாக்கும்
ஒன்றாகவே காணப்பட்டது.
கவனக்குறைவாக
சிகிச்சை அளித்தால் அரசு மருத்துவ மனைகளும் நட்டயீடுவழங்க உச்ச நீதிமன்றம் 2005.01.22ம் திகதி
உத்தரவிட்டது. அது கவனக் குறைவாக செய்ய தூண்டுவதாகவே அமைந்துள்ளது எனலாம்.
இவ்வாறான தீர்ப்புகள் அடிப்டை உரிமையினை மீறுவதாகவே கருதப்படுகின்றன.
25ம் மற்றும் 26ம் விதிகளில்
கூறப்பட்டுள்ள மதச்சுதந்திரம் மற்றும் மத சார்பற்ற நாடு என்று குறிப்பிட்டாலும்
வாபர் மசூதி தொடர்பான வழக்கினை அரசானது தொடர்ந்து இழுபறி நிலையில் வைத்திருப்பதனை
நாம் காணக்கூடியதாக உள்ளது. இது யாப்பிற்கும் மனித உரிமைக்கும் முரணானதொன்றாகவே
பேசப்படுகின்றது. மேலும் அதிகமான மனித வளங்களை சுரண்டுகின்ற நாடு என்றும் இந்தியா
விமர்சிக்கபடுவது குறிப்பிடதக்கது. இவ்வாறான விடயங்களைக் கொண்டு இன்றைய நடைமுறை
சாத்தியப்பாடினை குறிப்பிடக் கூடியதாக உள்ளது.
அடுத்ததாக
இவ்வடிப்படை உரிமையில் பங்களிப்பு செய்யும் காரணிகள் அல்லது நிறுவனங்களை நாம்
நோக்கும் போது அது பின்வறுமாறு அமைந்துக் காணப்படுகின்றது. அடிப்படை உரிமைகள்
மீறப்படுள்ளது எனக்கருதும் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம். இது தொடர்பாக
விதி 32
குறிப்பிடுகின்றது. இம்முறையீட்டின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஐந்து வகையான
தீர்ப்புகளை வழங்கலாம். அவையாவன ஆட்கொணர்வு உத்தரவு, கடமை செய் உத்தரவு, வழக்கை
நிறுத்தும் ஆணை, நீதிமன்ற ஆணையினை
தடுக்கும் உத்தரவு. எந்த அதிகாரத்தில் செயலாற்றுநுகின்றார் என வினாவும் ஆணை
என்பனவாகும்.
மேற்கூறிய அதிகாரங்களை 226 வது பிரிவு உயர்
நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. எனினும் மேற்கண்ட அடிப்டை உரிமைகள் குறைக்கவோ
தள்ளிவைக்கவோ படலாம். படைத்துரையினருக்கும், ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டும் துறையினருக்கும்
அவர்களது பணியின் காரணமாக நாடாளுமன்றம் அடிப்டை உரிமைகளை குறைக்கலாம் என 33வது பிரிவு
குறிப்பிடுகின்றது. நெருக்கடி காலத்தில் அடிப்டை உரிமைகள் செயற்படாமல் ஒத்தி
வைக்கப்படலாம் என 358ம் பிரிவும் 359ம் பிரிவு
குறிப்பிடுகின்றன.
இவ்யாப்பின் கீழ்
குறிப்பிடப்பட்டுள்ள அடிப்டை உரிமைகளின் நன்மைகளையும் நாம் நோக்குதல் வேண்டும்.
அதன் படி மக்களின் வாழ்க்கைக்கு தேவையான இன்றியமையாத உரிமைகள் யாப்பில்
சேர்க்கப்பட்டமை மிகவும் சிறப்பானதொரு விடயமாக கருதப்படுகின்றது.
தீண்டாமை
ஒழிப்பும் யாப்பில் சேர்க்கப்பட்டுள்ளமையானது சாதியால் ஒதுக்கப்பட்ட மக்களும்
மேல்நிலையடைய வாய்ப்பாக அமைகின்றது. இது மிகவும் சிறப்பானதொரு விடயமாகும். உரிமை
மீறல்களை விசாரிப்பதற்கு உயர் நீதி மன்றமும், உச்ச நீதி மன்றமும் காணப்படுவதால் இவைகள் சிறப்பாக
பாதுக்கப்பட்டு வருகின்றன எனலாம். இவற்றுடன் மனித உரிமை ஆணைக்குழுக்களும் இவற்றில்
பங்கு கொள்கின்றன.
இவற்றுடன் மனித உரிமை
ஆணைக்குழுக்கள் மனிதனின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியல் யாப்பினூடாக
இடமளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடைமுறைகளை யாப்பின் ஊடாக கொண்டுள்ள போதும்
இவற்றில் சில காரணிகள் தாக்கத்தினை செலுத்துபவனவாகவே காணப்படுகின்றது.
அவசர கால
நிலைகளின் போது அடிப்படை உரிமைகளை அரசு கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படடுள்ளது.
அவ்வாறான ஏற்பாடுகளானது அரசியல் விடயங்களுக்காக மனித உரிமைகளை கட்டுப்படுத்த
அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டமையானது பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு
வருகின்றது. ஏனெனில் இன்றைய நவீன ஜனநாயகத்தின் கோட்பாடானது அடிப்படை மனித உரிமைகளை எச்சந்தர்ப்பத்திலும்
யாரும் மீறுதல் கூடாது என்று கருதுகின்றது. எனவே இதனை மீறுவதாக அமைகின்றது.
சில அடிப்படை
உரிமைகள் எல்லா மக்களுக்கும் வழங்கப்பட்டுள்டளன. வேறு சில உரிமைகள் குடிகளுக்கு
மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது இன்று
இந்தியாவில் பல முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக அமைகின்றது. இவ்வாறான ஏற்பாடுகள்
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது. மேலும், படைத்துறையினுடைய
அடிப்படை உரிமைகளை அவர்களது பணி காரணமாக பாராளுமன்றம் குறைக்கலாம். இது அவர்களின்
அடிப்படை உரிமையினை மீறுவதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக படையினரும் மனிதர்களாகவே
காணப்படுகின்றனர் எனவே அவர்களும் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வேண்டியவர்களே.
எனவே இவர்களின் உரிமைகள் இவ்வாறு கட்டுப்படுத்தப்படுவது நாட்டு நலனுக்காக
என்றாலும் அதுவும் மனித உரிமையினை
பாதிப்பதாகவே அமைகின்றது.
இவ்வாறான நன்மை
தீமைகளை இனங்காணக் கூடியதாக இருந்த போதிலும், எதிர்காலத்தில் இவற்றில் சில மாற்றங்களை கொண்டுவரவேண்டியத்
தேவையினை இந்திய அரசியலமைப்பு சந்தித்துள்ளது. இவற்றை நோக்கும் போது அவை
பின்வருமாறு காணப்படுகி;ன்றது.
சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் சொல்லப்பட்டாலும் அது நடைமுறையில் பயனளிக்க
கூடியதாக அமையவில்லை. எனவே மேலும் சில அடிப்படை உரிமைகளை அதில் சேர்க்கப்பட
வேண்டியதாக உள்ளதுடன், சிறுவர்களுக்காக
காணப்படும் அடிப்படை உரிமைகளை சரியான முறையில் நமைமுறைப்படுத்துதல் வேண்டும்.
தொழிலாளர்களுக்கான
அடிப்படை உரிமைகள் தெளிவாக கூறப்பட வில்லை. எனவே அவர்கள் அதிக நேரம் வேலைக்கு
அமர்த்தப்படுதல், வேலைக்கு ஏற்ற
ஊதியம் வழங்கப்படாமை போன்றன நi;டமுறையில் காணப்படவே செய்கின்றன. எனவே இவற்றை குறைக்கும்
அளவிற்கு தொழிளார்களுக்கான அடிப்படை உரிமையானது மேலும் வலுவானதாக
குறிப்பிடப்படுதல் வேண்டும். மேலும் மத சார்பற்ற அரசு என்றாலும் மத சார்பான
கட்சிகளுக்கு அரசு தலைசாய்த்து சில மத நடவடிக்கைகளிலும் இறங்குவது ஒரு மதத்திற்காக
வேறு மதங்களை புறக்கணிப்பதாக விமர்சிக்கப்டுகின்றது. குறிப்பாக தற்போது பகவத்
கீதைக்காக ரஷ;ய அரசுடன்
இந்தியா பரிந்து பேசுவதை குறிப்பிடலாம். அவ்வாறாயின் அரசு எல்லா சமய
விவகாரங்களிலும் தலையிட வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது.
அடுத்ததாக, சில குழுக்கள்
அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக காணப்படுகின்றது. இவ்வாறான குழுக்களுக்கு
அதிகளவிளான சுதந்திரங்கள் வழங்கப்பட்டைமையானது அவை மனித உரிமைகளை மீறுவதற்கு வழி
வகுத்தது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினை குறிப்பிடலாம். இவ்வாறான மத
இயக்கங்கள் தமது மதத்திற்காக பிற மத மக்களை துன்புறுத்துகின்றன. எனவே இவ்வாறான
இயக்கங்கள் மனித உரிமைகளை மீறாதவாறு அரசியல் யாப்பில் உரிமைகள் மாற்றியமைக்கப்ட
வேண்டும்.
இவ்வுரிமைகளை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பெரும்பாலான
உரிமைகளானது கூறப்பட்ட போதும் அவற்றில் சில ஐக்கிய நாடுகள் சபையை போன்று
விரிவுப்படுத்தப்பட்டு கூறப்பட வில்லை. எடுத்துக்காட்டாக சிறுவர் உரிமையினை
குறிப்பிடலாம்.
இவ்வாறான
விடயங்களை தொகுத்துப் பார்க்கும் போது, இந்திய அரசியல் அமைபானது சுதந்திர காலத்தில் உருவாக்கப்பட்ட
ஒன்றாக காணப்பட்டாலும் அதில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளானது மிகவும்
சிறப்பானதாக காணப்படுகின்றது. இவை குறிபிட்ட கட்டமைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது
என்பது சிறப்பான விடயமே. எனினும் தற்கால பொருத்தப்பாடிற்கு ஏற்ப சில விடயங்களை
மாற்றியமைத்தல் வேண்டும். இது காலத்தின் கட்டாயமே. ஏனெனில் காலத்திற்கு ஏற்ப
அடிப்படை உரிமைகளை மாற்றியமைத்தல் என்பது சாதாரணமான ஒன்றாக கருதலாம். மேலும்
இந்திய மக்களின் நிலையினை அதாவது கல்வியறிவு, தொழிநுட்ப மாற்றம் என்பவற்றிட்கு ஏற்ப சிலவற்றை உள்வாங்கி
செயற்படுமானால் அடிப்படை மனித உரிமைகளை சிறப்பா கொண்டுள்ள அரசியலமைப்பாக இந்திய
அரசியலமைப்பு திகழும் என்பதோடு, சிறந்த நாடாகவும் இந்தியா காணப்படும் என்பது உறுதியான
ஒன்றே.