“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

கோ. நடேசைய்யர்



 மலையக தொழிற்சங்க முன்னோடி 

கோ. நடேசைய்யர்

Ramakrishnan Chandrasegar.
Political Science (Special Student)
Eastern University, Sri Lanka 
தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் வசதியாக்கிக் கொள்ளவும் அமைத்தக் கொண்ட தொடர்சியாக இயங்கும் அமைப்புகளே 'தொழிற்சங்கம்' என அழைக்கப்படுகின்றது. அந்த வகையில் மலையக தொழிற்சங்க வரலாற்றில் தொழிற்சங்க முன்னோடி என புகழப்படும் கோ.நடேசையர் பற்றிய ஓரு வரலாற்றுப் பார்வையாக இக் கட்டுரை அமைந்துள்ளது.

கோ.நடேசையர் 1887 இல் தமிழகத்தில் தஞ்சாவூரில் பிறந்தார். தஞ்சை மண்ணில் பிறந்த ஐயர் தழிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். வர்த்தகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக தமிழரும் தடம் பதிக்க வேண்டும் என 1914 இல் வணிகர்களுக்காக 'மித்திரன்' எனும் பத்திரிகையை நடாத்தினார். இளம் வயதில் மகாகவி பாரதியின் தேசவிடுதலை பாடல்களை தேசிய உணர்வோடு கற்றுத் தேர்ந்தார்.

கொழும்பு மாநகரில் இயங்கிய 'தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின'; வருடாந்த விழாவில் கலந்துக் கொள்ள இலங்கை வந்த ஐயரின் மனதில் தேயிலை தோட்டங்களில் வாடும் தன் மண்ணின் உறவுகளை காண வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி காணப்பட்டது. இருப்பினும் அக்கால கட்டத்தில் மலையகமானது வெள்ளை இனத்தினை சேர்ந்த துரைமார்களின் இரும்புக் கோட்டையாக காணப்பட்டது. இதனால் அங்கு வெளியாட்கள் செல்வதும் தடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு செல்வது கிரிமினல் சட்டத்திற்கு இணங்க  குற்றமாக கணிக்கப்பட்டது. ஆனால் புடவை வியாபாரிகள் தங்களுடைய வியாபார நோக்கமாக மலையகத்தக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆகவே நடேசையரும் ஒரு புடவை வியாபாரியாக வேடமணிந்து வியாபாரிகளுடன் இணைந்து தோட்டங்களுக்கு சென்றார், மக்களின் அடிமை வாழ்வினை நேரில் கண்டார்.

இந்தியா திரும்பியவுடன் இலங்கையில் தோட்ட தொழிலாளிகளாய்  எம்மக்கள் படும் துன்ப அறிக்கையை துண்டு பிரசுரமாக வெளியிட்டார்.
தஞ்சாவூரில் காங்கிரஸ் கமிட்டியிடம் தனது பிரசுரத்தையும் வழக்கமாக சமர்பித்தார். தோட்ட தொழிலாளிகளின் மீட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஐயருக்க அவரது துணைவி மீனாட்சி அம்மையார் தோல் கொடுத்துத் தாங்கினார்.

மீண்டும் 1920 இல் இலங்கை வந்த ஜயர் 'இலங்கை தேசிய காங்கிரஸின் உறுப்பினர்களான ஈ.வீ ரட்ணம், எம்.ஏ அருளானந்தம் ஆகிய இருவருடைய துணையுடன் மலையக மக்களின் எழுச்சிக் குரலென ஒலித்த 'தேசநேசன்' எனும் பத்திரிகையை வெளியிட்டார். இது தமிழில் வெளிவந்த முதலாவது பத்திரிகையாக விளங்கியது.

'இலங்கை தொழிலாளர் யூனியனின்'  துனைத் தலைவராக விளங்கிய ஐயர் மற்றுமொரு தொழிற்சங்கத் தலைவரான யு.நு  குணசிங்கவுடன் இணைந்து 'துழைரமுக தொழிலாளர் போராட்டத்தை' முன்னின்று நடாத்தினார்.அதே வேளை கொழும்பு நகரில் வாழ்ந்த இந்திய தமிழர்களின் அவல வாழ்வை விபரிப்பதற்காக 'தி சிட்டிசன்' என்ற ஆங்கில வார இதழை தொடங்கினார்.

ஐயருடைய திடமான நம்பிக்கையும் சறப்பான பேச்சாற்றலும் வெள்ளையர்ககை திக்குமுக்காட செய்தன. இதனால் விரக்தியுற்ற தோட்ட துரைமார்களும், இந்திய தொழிலாளர்களை உடைமைகளாக கொண்டிருந்த கண்காhணிமார்களும்  பல சதிமுயற்சிகளை செய்தனர். இதில் சிறிதளவு வெற்றியும் பெற்றனர். இலங்கையில் இந்திய தொழிலாளர்களின் அடிமை வாழ்வை நீக்கி அவர்களின் உரிமைகளை சமூக, அரசியல், பொருவளாதார உறுதிப்படுத்திக் கொள்ளவும் 'தொழிற்சங்கத்தை' தோறற்றுவித்த முன்னோடியாக கோ.நடேசையர் விளங்குகின்றார்.

1921 ஆம் ஆண்டு பீஜிங் தீவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 'டாகடர் மணிலால்' என்பவரை ஐயர் சந்தித்து அவரை அழைத்துக் கொண்டு தேயிலை மரத்தடியில் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு அதை தேடித்திரியும் இந்திய தொழிலாளர்களின் விடுதலைக்காக போராடுமடாறு  உற்சாகமூட்டினார் ஐயர். இவர்களின் இணைந்த கரங்களினால் வெள்ளைத் துரைமார் அச்சம் கொண்டனர். மணிலாலை நாடுகடத்தும் முயற்சியில் வெள்ளையர்கள் வெற்றியும் பெற்றனர்.

பின்னர் தெபழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ குணசிங்கா, அநாகரிக தர்மபால உடனும் இணைந்து செயற்பட்ட ஐயர் பின்னாளில் இவர்களிடம் காணப்பட்ட இனவாத பேக்கினால் விரக்தியுற்ற ஐயர் இவர்களிடமிருந்து விலகி தனிவழி போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு ஆணின் வெற்றிக்குபட பின்னால் ஒரு பெண் இருப்பது போல ஐயருக்கு அவரின் மனைவி திருமதி மீனாட்சி அம்மையார் ஐயருக்கு தோல் கொடுத்துத் தாங்கினார். ஒரு புறம் மீனாட்சி அம்மையார் பாரதியின் தேச விடுதலை பாடல்களை தோட்ட தொழிலாளர் மத்தியில் பாட மறு புறம் ஐயர் தனது பேச்சாற்றலால் தொழிலாளர்களை விழிப்படைய செய்தார். இவ்வாறு விடுதலை குரலோடு தழிழையும் செழிப்படைய வைத்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து பாடிய 'தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் தொழிலாளர்களின் மனங்களில் மின்னலாக பாய்ந்தது. தேசபக்தன் பத்திரிக்கையில் 'மலையக ஆத்திச்சூடி' பாக்களை எழுதி வெளியிட்டனர். தோட்ட துரைமார்களையும்;, கங்காணிமார்களையும் முன்னிலைப் படுத்தி அவர்களை சாடும் வண்ணம் நடேசையரின் பாடல்கள் அமைந்திருந்;தன.

ஐயர் வழக்கறிஞ்சராக பணியாற்றியமையால் சிறப்பான வாதப் பிரதிவாதங்களை வெளளைய துரைமார்களின் முன்னிலையில் நிகழ்த்தினார். இதனால் பலரை எதிரியாகவும் சம்பதித்துக் கொண்டர்.
1931 ஆம் ஆண்டு நடேசையர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார். 'அகில இலங்கை தோட்ட சம்மேளனம்' என்ற பெயரிலேயே மேற்கூறிய சம்மேளம் உருவாக்கப்பட்டது. இவரிடம் காணப்பட்ட தனி முதன்மையான குணாம்சங்கள் பிரித்தானியர்களுக்கு சவால் விடக்குடியதாக அமைந்தது. 

1929 ஆம் ஆண்டு காணப்பட்ட பொருளாதார மந்தத்திலும் கூட வேதனக் குறைப்பிற்கு எதிராக குறல் கொடுத்தார். இத்தகைய தைரியம் வேறு எந்த தொழிலாளிக்கும் வந்திருக்கவில்லை.

தொழிலாளர்களை விழிப்படைய செய்து அவர்களின் அறியாமை, மதுபழக்கம், சூதாட்டம் போன்ற அஞ்ஞான இருள் நீங்கிய வாழ்வைப் பெற்றுத்தர போராடினார். இருப்பினும் இக்காலப்பகுதியில் பிரித்தானிய அரசாங்கம் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு எதிரான சட்டங்களை உருவாக்கியமையால் கோ.நடேசையர் தோட்டப்புறங்களுக்கு சென்றுமக்களை எழுச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியவில்லை.
இருந்தாலும் வெளி இடங்களில் கூட்டப்படும் கூட்டங்களின் போதே தொழிலாளர்களை தனது இலட்சிய பாதையில் பயணிக்க செய்ய முடிந்தது. 1931 ஆம் ஆண்டு ஐயர் அட்டனில் நடாத்திய மேதின விழாவில் 5000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றினார்.

  1. வேதனக் குறைப்பினை எதிர்த்தல்
  2. கண்காணிகளால் நடாத்தப்படும் truck system ற்கு எதிர்ப்பு தெரிவித்தல்.

மேற்கூறிய வகையில் தொழிலாளர்களின் அடிமை வாழ்வினை அகற்றி அவர்களக்கென ஒரு தனியான வாழ்க்கைத் தரத்தினை பெற்றுக் கொடுக்க ஐயருக்கு எதிராக பலர் குறிப்பாக கண்கணிமார்கள், தோட்ட துரைமார் போன்றோர் ஐயரை பழித்தீர்பதற்கான தருணத்தை எதிர்பார்திருந்தனர்;. தொழிலாளர்களின் வளர்ச்சியினாலும் தொழிற்சங்கங்களின் எழுச்சியினாலும் தாம் நசுக்கப்படுவதை உணர்ந்த தோட்ட உரிமையாளர்கள் தமக்காக ஒரு சம்மேளனத்தை உருவாக்கிக் கொண்டனர். அது 'தோட்ட உரிமையாளர் சம்மேளனம்' என அழைக்கப்பட்டது.

அதே வேளை ஐயரின் செயற்பாடுகளினால் அதிர்ப்தியுற்ற சிலர் வழிய சென்று பேரம் பேசுவதில்; ஈடுபட்டனர். இன்னும் சிலர் கண்காணிகளுக்கும் நடேசையருக்கும் இடையில் உஙவினை வளர்க்க முற்பட்டனர். இவ்வேளை ஐயர் 'தொழிலாளிகளின் உண்மையான எதிரிகள் கண்காணிகளே' எனக் கூறித் தூற்றினார். 

இந்நிலையில் தோல்வியுற்ற கண்காணிமார் வேட்டையாட போகும் ஓநாய் ஆட்டு மந்தையில் இருந்து ஒரு ஆட்டை தனிமைப்படுத்தும் அதே வேலையை தொழிலாளர்களிடமிருந்து ஐயரை பிரிப்பதற்காக மேற்கொண்டனர். இதற்காhக அவர்கள் பயன்படுத்திய ஆயுதமாக 'ஜாதி முறை' அமைந்தது. ஐயர் பிராமணக் குலத்தில் பிறந்தவர். அவ்வாறான ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் பழகுவது குலத்திற்கு இழிவானதாக தெரிவித்த போதும் அதில் காணப்பட்ட சூழ்ச்சியினால் தொழிலாளர்களிடமிருந்து ஐயரை பிரிப்பது நீண்ட தூர இலக்காகவே  மாறியது.

1931 ஆண்டு தோட்ட உரிமையாளர் சம்மேளனம் நடேசையருக்கு எதிரான பிரசுரங்களை, சாதி உணர்வுகளை தொழிலாளர் மத்தியில் வளர்க்கும் வண்ணம் பரப்பினர். கண்காணிமார்கள் ஒரு பிராமணரால்  நசுக்கப்படுகின்றார்கள் என  எழுதினார்கள். இந்நிலையில் தொழிலாளி ஒருவரே தொழிற்சங்க தலைவராக வரவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்த இவர்கள் தங்களுடைய சம்மேளனத்தின் ஊடாக 'ஊழியன்' எனும் பத்திரிகையின் ஊடாக 'நடேசையர் தொழிலாளர்களை  சுரண்டுவதாக கூறி ஐயரை தொழிலாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தினர்.
இவ்வாhரான பொய்யான பிரச்சாரங்களினால் கவரப்பட்ட குழந்தை மனம் படைத்த தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய இலட்சிய வீரனின் மீது சந்தேக பேக்கினை வெளிப்படுத்தினர். அதே வேளை தொழிற்சங்கத்தக்குள் இருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட தலைமைத்துவத்துக்கான போட்டியும் தொழிற்சங்கத்தினை பலவீனப்படுத்தியது. 

ஐயரின் தொழிற்சங்கப் போராட்டத்தில் மீனாட்சி அம்மையாரின் பங்களிப்பு
தோட்ட தோட்டமாக சென்று ஐயருக்கு துணையாக நின்று கருமங்கள் ஆற்றியவரும் ஐயரின் முன்கோபத்தை கட்டுப்படுத்தி தனது நோக்கத்தை சரிவர நிர்ணயித்த பெறுமை மீனட்சி அ ம்மையாருக்கே உரித்தாகும்.
ஐயரின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர். மனைவியை இழந்திருந்த ஐயரின் வாழ்வில் எரு விடிவெள்ளியாக மலர்ந்து  அவருடைய சபலமனம் ஒருமுகப்படவும் காரணமாக இருந்தார். அம்மையார் கவிதை, எழுத்தாற்றல் என்பவற்றில் சிறப்பான தேர்ச்சி மிக்கவராக இருந்தார். மேடையில் பேசவும் பாடவும் கூடியவர். அவர் படிய ஒரு பாடல் பின்வருமாறு அமைந்திருந்தது.

சட்டமிருக்குது ஏட்டிலே-நம்மள்
சக்தியிருக்குது கூட்டிலே.....
வேலை இருக்குது நாட்டிலே- உங்கள்
வினையிருக்குது வீட்டிலே.....

என்றுத் தொடங்கும் 'தொழிலாளர் சட்டக் கும்மியில்' மலையகு மக்களின் அடிமைத்தனம் நீங்கவும், தங்களுடைய சுய நிர்ணய உரிமையை பெறவும் ஏற்ற வழிமுறைகளை எளிய நடையி;ல் எல்லோருக்கும் விளங்கும் வகையில் படியமைத்தார். தோட்டப்புறங்கள்,நகர்புறங்கள் என அம்மையாரின் பேச்சுகள் எதிரொலித்தன. முப்பதுகளில் இந்தியர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 28 புதிய விதிமுறைகள் உள்ளடங்கிய சட்ட மூலத்தை எதிர்த்துப் பேசினார். 

27.05.1939 ஆம் ஆண்டு இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களின் நிலை குறித்து ஆராயும் கூட்டம் நடைபெற்ற போது அஸீஸ், ஜி.ஜி பொன்னம்பலம், ஐயர் ஆகியோரோடு மீனாட்சி அ ம்மையாரும் கலந்துக்  கொண்டு அரசியல் விமர்சனம் செய்தார்.

பதுளையில் வ.ஞானபன்டிதன் கூட்டிய 'சமத்துவ மகா நாட்டில்' மாதர் வரவேற்புக் கமிட்டியின் தலைவியாக இருந்து கடமையாற்றினார். 1929 ஆம் ஆண்டு ' தேசபக்தன்'பத்திரிகை தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. அன்று முதல்  இப்பத்திரிகையின் அனைத்து பொறுப்புக்களையும் முன்னின்று நடாத்தி வந்தார். இதில் போதும் என்ற மனம், சமையல் பாகம்,இந்தியாவின் முன்னேற்றம் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டார். 1929 இல் இருந்து தனது பதிப்புக்  கூடத்தில் பெண்களையும் இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையை ஐயரின் எதிரிகளால் அவரின் நற்பெயருக்கு பங்கம் ஏட்படுத்தும் வகையில் கையாளப்பட்டப் போதும் அம்மையாரின் சிறப்பான ஆற்றல் முலம் அதனை தருத்து நிறுத்தினார். இவ்வாறு பல எதிர்ப்பகளின் மத்தியிலும் ஐயர் வெற்றிப் பெற அம்மையார் துணையாக இருந்தார்.

முடிவுரை

இலஙகையில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட முறையின் பின்னர் இத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட தழிழர்கள் தங்களுடைய உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் தொடர்ந்தும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டனர். இத் தொழிற்சங்கங்களின் தலைமைத்துவமானது கல்வி கற்ற, சொத்துடைய வாரிசுகளுக்கே கிடைத்தது. இத்தகைய தொழிற்சங்கங்களுக்கு ஆரம்பக் கர்த்தாவாக விளங்கியவர். தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த கோ.நடேசையர் ஆவார். இவருடைய மனைவி மீனாட்சி அம்மையாரும் இணைந்து தொழிலாளர்களின் மீட்சிக்காக போராடினார்கள். அத்தோடு இலக்கிய ரீதியாக தங்களுடைய விடுதலைக் கருத்துக்களை பரப்பியதோடு 'அகில இலங்கை தொழிலாளர் தேசிய சம்மேளனம்' என்ற முதலாவது தொழிற் சங்கத்தை உருவாக்கினார்.

இவருடைய வேகமும், விவேகமும் பலரை இவருக்கு எதிரிகளாக மாற்றியமைத்தது. இந்த வகையில் தொழிலாளர்களின் உயர்சிக்காக போராடிய ஐயரை தொழிற்சங்க முன்னோடி என்று வரலாறு போற்றுவதில் தவறில்லை.