இலங்கை இன முரண்பாட்டில் நோர்வே.................
சர்வதேச அளவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத
முரண்பாடுகளில் இலங்கை இன முரண்பாடும் பிரதானமானதாகும். இதனால் தேசிய சர்வதேச மட்டத்தில்
ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு இன முரண்பாடாகவும் இம்முரண்பாடு விளங்குகின்றது.
இன முரண்பாடு என்பது பல இன மத மொழி கலாசாரங்களைப் பின்பற்றுகின்ற நாடுகளில் பெரும்பாண்மையினம்
சிறுபாண்மையினரின் அடிப்படைத் தேவைகள் அபிலாசைகளை நிறைவேற்ற மறுக்கும் போது அல்லது
ஒரு இனம் மற்ற இனத்தைத் தாக்கும் போது இன முரண்பாடு என்பது தோற்றம் பெறுகின்றது. இலங்கை
பல்லினங்களையும் பல சமூகங்களையும் கொண்ட ஒரு பன்மைத்துவ கலாசார பின்னனியைக் கொண்ட
நாடாகும். இந்நாட்டின் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் பறங்கியர் என பல இனங்கள்
வாழ்கின்றனர். இவர்களுல் சிங்கள - தமிழ் சிங்கள– முஸ்லிம் தமிழ்
- முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடே பிரதானமானதாகும். அதிலும் குறிப்பாக சிங்கள-தமிழ் முரண்பாடே இன்று
முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற ஒரு போக்கைக் காணலாம்.
ஆரம்பத்தில் இலங்கையில் இருந்த இன முரண்பாடுகளுக்கிடையிலான
முரண்பாடென்பது வன்முறை இல்லாமலே இருந்தது. காலப் போக்கில் அரசுக்கும் சிறுபாண்மை தமிழ் ஆயுத குழுக்களுக்கிடையில்
ஆயுத முரண்பாடாக மாறியது. இது இலங்கை உள்நாட்டு ஆயுத முரண்பாடென அழைக்கப்பட்டது. எனவே
இது கிட்டதட்ட 30 வருடத்துக்கு வேரூன்றி காணப்பட்டதுடன் இது சிக்கல் நிறைந்ததாகவும்இ
வன்முறை நிறைந்ததாகவும் அச்சுறுத்தல் தன்மை கொண்டிருந்ததால் இது சர்வதேச ரீதியாக நாடுகளின்
கவனிப்புக்கு உட்பட்ட வகையில் இன்று பரிணாமம் அடைந்துள்ளது. அந்தவகையில் இலங்கையில்
இன முரண்பாடு ஏற்படுவதற்கு குறிப்பாக சிங்கள – தமிழ் முரண்பாடு ஏற்படுவதற்கு பல்வேறு
காரணிகள் பின்னனியாக அமைந்துள்ளது. அந்தவகையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இடம்பெற்ற
திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றம்இ 1948 ஆம் ஆண்டு 18ம் இலக்கப் பிரஜா உரிமைச் சட்டம்இ
1956 ஆம் ஆண்டு சிங்கள அரச கரும மொழிச்சட்டம் ஆகியன நிறைவேற்றப்பட்டமைஇ 1961ஆம் ஆண்டு
சிங்களம் இலங்கை முழுவதற்குமான நீதிமன்ற மொழியாக்கப்பட்டமைஇ 1961 ஆம் ஆண்டு கிறிஸ்தவ
மிசனெறிகள் அரசவுடைமையாக்கப்பட்டமைஇ 1971 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல்
முறை அறிமுகப்படுத்தப்பட்மைஇ இரண்டாம் குடியரசு யாப்பில் தமிழர் உரிமைக்கு உத்தரவாதம்
அளிக்காமைஇ 1979 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம்இ 1983இல் இடம் பெற்ற
ஜூலைக் கலவரம் போன்ற பல்வேறு காரணிகள் இலங்கையில் இன முரண்பாடு ஏற்பட பின்னனியாக அமைந்தது.
இவ் இன முரண்பாடு ஆயுதமுரண்பாடாக வழர்ச்சி அடைந்ததோடு அதன் முலடாக பல்லாயிரக்கணக்காண
உயிர் இழப்புக்களோடு செத்திழப்புக்கழும் ஏற்பட்டன. இதனால் இனமுரண்பாட்டுக்கு தீர்வொன்று
தேவைப்பட்டது.
இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு
பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. சாக் முயற்சிக்கு பின்பே இலங்கை இன முரண்பாட்டினை
சமாதான தீர்வு முயற்சிகளில் கொண்டுவர நோர்வேயின் முயற்சி மகத்தானதாகும். எனவே இந்திய
மத்தியஸ்த முயற்சியின் பின்னர் எதுவித ஆக்க பூர்வமான முயற்சிகளும் மேற்கொள்ளாதவிடத்து
தீவிரமடைந்த இன முரண்பாட்டில் நோர்வேயின் தலையிட்டில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது
என்பது நடைமுறையில் பேசப்பட்ட ஒன்றாகும். இந்தவகையில் அரசாங்கத்திற்கும் டுவுவுநுக்கும் இடையில் பரஸ்பரம்இ புரிந்துணர்வு நம்பிக்கை தொடர்பாடல்
என்பவற்றை ஏற்படுத்தி முரண்பாட்டில் சம்மந்தப்பட்ட இவ்விரு தரப்புக்களையும் பேச்சு
வார்த்தை மேசைக்கு மீண்டும் ஒரு தடவை கொண்டுவந்ததில் நோர்வேயின் பங்களிப்பு மிக முக்கியத்துவம்
வாய்ந்ததாகும்.
நோர்வே இந்தியாவைப் போன்று மத்தியஸ்தர் என்ற நிலைமையில்
அல்லது என்ற நிலையிலே கருதப்பட்டது. அரசாங்க தரப்பில் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாட்டாள்
என்ற நிலைமையிலேயே நோர்வேயின் பங்கு வரையறுக்கப்பட்டாலும் கூட அதனை விட அன்று அதிகமான
பங்கினையே நோர்வே கொண்டுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதே நேரம் விடுதலைப்புலிகள்
தரப்பில் நோர்வே மத்தியஸ்தம் எனும் ரீதியிலேயே நோக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் அதன்
மத்தியஸ்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என வேண்டுகோள்விடுக்கப்பட்டது. எவ்வாறாயினும்
இருதரப்பினரதும் விருப்பத்தின் பேரிலேயே நோர்வே நடுநிலையானது என்ற நம்பிக்கையின் பேரிலையும்
இலங்கை பிரச்சினையின் சமாதான தீர்வு முயற்சிகளில் 3ம் தரப்பு என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டது.
நோர்வே தென்னாசியாவை விட எவ்வித காலணித்துவ தொடர்புகளும்
அற்ற நாடாக இருப்பதுடன் இந்தியாவைப் போலன்றி நோர்வேக்கு இலங்கையின் இனப்பிரச்சினையில்
முக்கிய பங்காளர்களாக காணப்படும் சிங்களவர்களுடனோஇ தமிழர்களுடனோ எவ்வித இனஇ மதஇ மொழி
தொடர்புகளுமில்லை. ஆதலால் இரு இனக்குழுக்களுக்கும் ஒரு மத்தியஸ்தராக விளங்குவதற்கு
நம்பகத்தன்மையுடையதாக இது காணப்படுகிறது. ஆனாலும் சிங்கள கட்சிகளில் நோர்வே பக்கச்சார்பாக
செயற்படுகின்றது என குறையும் கூறப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு டுவுவுநுக்கு
வானொளி உபகரணங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்தமை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி(துஏP)பிக்குமார்
எடுத்த கிளர்ச்சிகளைக் காட்டலாம். இது பின் சர்வதேச அழுத்தத்தின் நிமிர்த்தம் இலங்கையின்
இனப் பிரச்சினையை தீர்ப்பதில் விடுதலைப்புலிகள் நோர்வே அரசாங்கம் பக்கச்சார்பற்றஇ நடுநிலை
தன்மை கொண்டது என்பதுடன் ஏற்றுக் கொண்டதுடன் இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டதனால்
சமாதான முயற்சிகளில் தலையிடுவதற்கு நோர்வே அழைக்கப்பட்டது.
இலங்கை
இன முரண்பாட்டில் நோர்வே தலையிடுவதற்கான பின்னணிக் காரணிகள்.
இலங்கை இன பிரச்சினையில் தலையிடுவதற்கு நோர்வே
பொருத்தமான நாடாக தெரிவு செய்வதற்கு வேறு காரணங்கள் உள்ளன. 1977ல் து.சு ஆட்சிக் காலத்தின்
போது இலங்கை பொருளாதாரக் கொள்கை U.N.P அரசாங்கத்தினால் கட்டில்லாஇ வெளிநாட்டு முதலீட்டுப்
பாச்சல் அடிப்படையில் இடம் பெற வேண்டும் என கருதியமையினாலும்இ 1977 இருந்து நோர்வேக்கும்
இலங்கை இருந்த பொருளாதார இன பிரச்சினை உறவுகள் மற்றும் நோர்வே சமாதான விரும்பி என்ற
நிலையில் தன்னை உலக நாடுகளுக்கு வெளிக்காட்டியது போன்ற காரணங்களால் நோர்வே இலங்கை இனப்
பிரச்சினை தீர்வு விடயத்துக்கான நாடாக தெரிவு செய்யப்பட்டது. இது அன்று சமாதான தீர்வு
முயற்சிகளில் பெரும்பங்காற்றி வந்துள்ளது எனலாம்.
இலங்கை
நோர்வே உறவு
இலங்கையைஇ ரு.முஇ போத்துகல்இ ஒல்லாந்து போன்ற
நாடுகள் காலணித்துவத்தின் கீழ் வைத்திருந்தது. ஆனால் நோர்வேக்கு இலங்கை காலணித்துவ
ரீதியிலோ அல்லது புவியியல் ரீதியிலோ எதுவித தொடர்பும் இருக்கவில்லை. ஆனால் நோர்வே இலங்கை
அபிவிருத்தியில் நீண்ட காலமாக அக்கறையும்இ பங்களிப்பும் செய்து வருகிறது. இவ் வகையில்
இலங்கைக்கும்இ நோர்வேக்கும் இடையில் 1970 இருந்து பொருளாதார உறவுகள் நிலவி வந்தன. நோர்வேஇ
இலங்கை பல துறைகளிலுமான அபிவிருத்தி திட்டத்திற்கு நிதி உதவி வழங்கி வந்தது. இந் நிலையில்
நோர்வேயின் பொருளாதார உதவியானது அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டது. எனினும்
இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவி வரையறைக்கு உட்பட்டதாக இருந்தது.
1970இன் பின்னரே இலங்கை அபிவிருத்தி செயற்பாடுகளில்
நோர்வே அதிக பங்களிப்பு செய்தது. 1976ல் இலங்கை ஒரு பிரதான உதவி பெறும் நாடாக ஆக்குவதற்கான
தீர்மானம் நோர்வே அரசினால் எடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கைஇநோர்வேயின் அபிவிருத்தி
ஒத்துளைப்பின் பிரதான பங்காளர் நாடு எனும் அந்தஸ்து 1977ல் இருந்து அடையப்பட்டது. இவ்வாறாக
தீர்மானம் எடுப்பதற்கான காரணங்களை பின்வருமாறு கூறலாம்.
1) இலங்கை அரசு உதவியை எதிர் பார்த்து இருந்தமை.
2) தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியாஇ பங்காளதேஸ்இ
பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஏற்கனவே நோர்வேயின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களில் பங்காளர்
நாடு எனும் அந்தஸ்த்தை அடைந்திருந்தமை.
3) இலங்கையில் காணப்பட்ட பொருளாதார பலவீனம்.
போன்ற
காரணங்களால் இலங்கைஇ நோர்வேயின் பிரதான பங்காளர் நாடாக அபிவிருத்தி கூட்டுறவில் காணப்பட்டது.
மேலும் நோர்வே தனது முகவர்களான சீ.நோர் (LEY-NOR)இ வேன்ட் வீயூ இ
ரெட் பார்னா நொராட் போன்றவற்றின் மூலம் இலங்கை அபிவிருத்தி சமூக நலத்திட்டங்களில்
ஈடுபட்டுள்ளது. இவை பின்வரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
1984ன் பின் இந் நிறுவனங்கள் இலங்கையில் ஏற்பட்ட
வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிவருகின்றது. இவற்றில் Nழுசுயுனு
எனும் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது. இது இலங்கை உட்கட்டுமான வசதிகள்இ கல்வி
பெரும் பங்கு வகித்தது. அத்தோடு அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளது. இது தவிரவும் இலங்கை
வடகிழக்குப் பகுதியில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கும் பெரும் முயற்சி எடுத்து
வருகின்றது.
பொதுவாக இந் நிறுவனங்கள் இலங்கையில் சமாதானத்தை
நோக்கிய செயன்முறையில் அதிகளவு கவனத்தைச் செலுத்துகின்றது. அதாவது சமாதானம்இ கூட்டுறவுஇ
மனித உரிமை போன்ற விடயங்களில் கருத்தரங்குகள்இ கலந்துரையாடல்கள் நடாத்தும் குழுக்களுக்கு
உதவி வழங்குதல்இ சமுகமேன்பாடுஇ தேர்தல் கண்காணிப்பு மனித உரிமைகள் போன்றவற்றின் மேன்பாட்டுக்கு
உதவியது.
சமாதானத்
தூதுவர் என்ற நோர்வேயின் நிலைமை
முரண்பாடு உடைய நாடுகளின் முரண்பாட்டின் சமாதானத்
தீர்வு முயற்சிக்கு உதவுதல் நோர்வே நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான குறிக்கோளாகும்.
ஏனைய நாடுகளின் சமாதான முயற்சிக்கு உதவுவதனூடாகச் சமாதான விரும்பி அல்லது சமாதானத்
தூதுவர் என்னும் பட்டத்தினைப் பெறுவதில் நோர்வே ஆர்வம் காட்டுகிறது. இதை விடவும் நோர்வே
நீண்ட காலம் காலணித்துவத்தில் இருந்து பெற்ற அனுபவமும் ஏனைய நாடுகளின் சமாதான முயற்சிகளுக்கு
உதவி செய்யுமாறு தூண்டியது.
நோர்வே
1905ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. குடியேற்றச் சக்திகளான டென்மார்க்இ சுவிஸ் போன்ற
நாடுகளின் ஆட்சியின் கீழ் சுரண்டப்பட்டு வறுமையில் வாடி காலணித்துவ ஆட்சியின் கீழ்
500 வருடங்கள் வரை நோர்வே பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வந்தது. குறைந்த மக்கள் அடர்த்தியுள்ள
ஒருநாடாகம். இதன் மொத்த நிலப்பரப்பு 323இ802 சதுரகிலோமீற்றர் ஆகும். இங்கு அதிகமாக
கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். அத்துடன் நோர்வே
ஐரோப்பிய நாடுகளில் அதிக நீர்வளம் நிறைந்த நாடாகவும் விளங்குவதுடன் சவூதி அரேபியாஇ
ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிக பாறை எண்ணெய் பெறலோலியம் உற்பத்தி செய்யும் நாடாகவும்
விளங்குகின்றது. இதன் ஆட்சிமுறை அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி ஆகும்.
உலக
சமாதானத்தில் நோர்வேயின் பங்கு
உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வே குறிப்பிடத்தக்க
பங்களிப்பினைச் செய்துள்ளது. மேற்கு ஆசியா முதல் இலத்தீன் அமெரிக்கா வரையிலான நாடுகள்
வரையுள்ள முரண்பாடுகளில் சமாதான முயற்சிகளில் நோர்வே பாராட்டத்தக்க அனுபவம் பெற்றுள்ளது.
தென் அமெரிக்காவில் கொத்தமாலாஇ ஆபிரிக்காவில் சூடான்இ கபிரியனின் சமாதானத் தீர்வில்
நோர்வே 3ம் தரப்பாகச் செயற்பட அனுபவமுள்ள நாடென்றவகையில் இலங்கையிலும் நோர்வேயின் ஆர்வம்
வரவேற்கத்தக்கது. இவ்வாறு பல நாடுகளின் முரண்பாட்டுத் தீர்வு முயற்சிகளில் தலையிட்ட
அனுபவம் கொண்ட நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளில்
தலையிடுவதற்குப் பொருத்தமான நாடாக நோர்வே தேர்ந்தெடுக்கப்பட்டது. இலங்கையிலுள்ள முரண்பாட்டில்
உள்ள இருதரப்பினராலும் விரும்பப்பட்டது.
இலங்கை
சமாதான முயற்சியில் நோர்வேயின் நிலைமை
இலங்கை சமாதான முயற்சிகளில் இந்தியா தலையிட்டு
வெளியேறிய பின் இலங்கை நீண்ட காலமாக நிலவி வந்த யுத்தம் தீவிரமடைந்ததுடன் இனப்பிரச்சினையைச்
சமாதானமான வழிமுறைகளில் தீர்ப்பதற்கு எந்த விதமான முயற்சிகளும் எடுக்கவில்லை. 1994ல்
நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவியான சந்திரிக்கா பண்டார
நாயக்கா சமாதானத்தை கோசமாக வைத்து போட்டியிட்டார். 62.5மூ வாக்குகளை பெற்று டுவுவுநு
யுத்தத்தை மேற்கொண்டார். அதாவது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு டுவுவுநு அழைப்பு விடுத்ததைத்
தொடர்ந்து புலிகள் சாதகமாகப் பதிலளித்ததைத் தொடர்ந்து 1995ம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணத்தில்
பேச்சுவார்த்தைகள் எதுவித ஆக்கபூர்வமான முடிவினையும் எட்டாத நிலையில் மூன்றாவது ஈழப்போர்
1995 ஏப்ரலில் ஏற்பட்டது.
இவ்வாறு பேச்சுவார்தைகளில் தோல்வியைத் தொடர்ந்து
டுவுவுநுகும் அரசாங்கத்திற்கும் இடையே இருந்த நம்பிக்கையினம் அதிகரித்தது. இதனால் இரு
தரப்பினர்களிடையேயும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நம்பிக்கையான 3ம் தரப்பின் அவசியம்
ஏற்பட்டது. இச் சந்தர்ப்பத்திலே நோர்வே பற்றி இரு தரப்பினராலும் சிந்திக்கப்பட்டது.
எனவே 1998ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நோர்வே
அரசாங்கமும்இ இலங்கையின்; இன முரண்பாட்டுத் தீர்வைக்காண உதவுவதற்கு 3ம் தரப்பு பங்கொன்றை
வகிக்குமென ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா அவர்கள் கூறியமையே இலங்கை நோர்வேயின்
சமாதான முயற்சிக்கான அடிப்படையாக அமைந்தது. இதன் பின்னரான காலப்பகுதிகளில் இலங்கை சமாதான
முயற்சிகள் படிப்படியாக நோர்வேயின் அனுசரனை இடம் பெற்றது. 2000ஆம் ஆண்டு பெப்ரவரி
16ல் நோர்வேயின் வெளிநாட்டு அமைச்சர் எரிக்சொல்கெய்ம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நோர்வே இலங்கை சமாதானத்
தீர்வு முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் கொண்டிருப்பதாக அறிவித்தார். இவர் இலங்கை ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க எதிர்கட்சித் தலைவராக இருந்த ரணில்விக்ரமசிங்காவுடனும்
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ;மன் கதிர்காமருடனும் 3சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திய பின்
பேச்சுவார்த்தை நோர்வே பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்கு விரும்புகிறது என தெரிவித்தார்.
இத்தகைய அறிவிப்பு அரசியல் பத்திரிகை வட்டாரங்களில்
பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. ஏனெனில் இதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. நோர்வேயின்
இத்தகைய நிலைப்பாடு இலங்கையின் இனப்பிரச்சினையை ஒரு புதிய திருப்பத்திற்குள்ளாக்கலாமெனக்
கருதப்பட்டது.
நோர்வேயின் சமாதான முயற்சிக்கு விடுதலைப்புலிகளும்
ஒத்துழைப்பு வழங்கும் நிலையில் இருந்தார்கள். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 3ம் தரப்பு
ஒரு அனுசரணையாளராக இருக்கலாம் என்றும் மத்தியஸ்தராக விளங்க முடியாது என்றும் கருத்து
தெரிவிக்கப்பட்டது. ஆயினும் டுவுவுநு நோர்வேயே மத்தியஸ்தராக இருக்க வேண்டுமென்றும்
வற்புறுத்தியது. 2000ம் ஆண்டு ழேஎ 27ஆம் திகதி வருடாந்த மாவீரதின உரையின் போது விடுதலைப்புலிகளின்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை அரசாங்கத்திற்குத் தனது ஒழுங்கமைப்பு நிபந்தனைகள்
எதுவும் அற்ற பேச்சு வார்த்தைகளுக்கு ஆயத்தமாக இருப்பதாக அறிவித்ததுடன் அத்தகைய பேச்சு
வார்த்தைக்கு அனுசரணையாளராக இருக்கும் பொருட்டு நோர்வே அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நோர்வே அரசாங்கம் முரண்பாட்டில் சம்மந்தப்பட்டிருந்த இருதரப்பினர்கள் மத்தியில் நம்பிக்கையை
ஏற்படுத்தும் வண்ணம் நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆலோசனைகளைத் தெரிவிப்பதாகவும்
தெரிவித்தார். மேலும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குப் போர்நிறுத்தம் அவசியமெனவும் தமிழர்
தாயகத்தில் வழமை நிலையினை ஏற்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு தமிழீழா
விடுதலைப்புலிகளாலும் இலங்கை அரசாங்கத்தாலும் அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து
நோர்வே அரசாங்கம் இலங்கையின் சமாதான முயற்சியில் தீவிரமாக இறங்கியது.
நோர்வேயின்
முதலாவது சமாதான முயற்சிகள்.
இலங்கையின் விசேட தூதுவராக நோர்வேயால் நியமிக்கப்பட்ட
எரிக்சொல்கெய்ம் மூலமாகவே இலங்கையின் சமாதான முயற்சிகள் விரிவாக முன்னெடுக்கப்பட்டன.
ஏரிக்சொல்கெய்ம் இரு தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகளை நடாத்தினார்.
இக் காலப்பகுதியில் டுவுவுநு போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆயினும் அரசாங்கம்
இதற்குச் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. எனவே இது தொடர்பாக ஏரிக்சொல்கெய்ம் இரு தரப்பினரையும்
சந்தித்து கலந்துரையாடியதுடன் டுவுவுநு போர் நிறுத்த அறிவிப்புக்கு அரசிடமிருந்து சமிக்கைகளை
பெறுவதில் அக்கறையுடன் இருந்தார். ஆயினும் அரசாங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான சமிக்கை
எதுவும் வெளிவரவில்லை. சமாதான பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினதும் நேரடியான சந்திப்புக்களின்றி
ஏரிக்சொல்கெய்ம் மூலமாக இடம் பெற்றது.
நோர்வேயின்
அனுசரணையுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த போதும் இரு தரப்பும்
புதிதாக ஆட்சேர்ப்பதிலும்இ ஆயுதக் கொள்வனவிலும் ஈடுபட்டிருந்தன. சர்வதேச சமூகத்திற்குத்
தாங்கள் சமாதானத்திற்கு ஆதரவு எனக்காட்டுவதிலேயே இலங்கை அரசாங்கம் குறிப்பாக இருந்தது.
டுவுவுநு இத்தகைய பேச்சுக்களை முறித்தால் அதற்கு எதிராக சர்வதேச முழுவதற்குமான பிரச்சாரத்தினை
மேற்கொள்ளலாம் என அரசாங்கம் எண்ணியிருந்தது. டுவுவுநு களைப் பொறுத்தவரையில் தமிழர்களின்
உரிமைகளைச் சிங்கள அரசாங்கம் வழங்கமாட்டாது என்ற சிங்கள அரசாங்கத்தின் நோக்கங்களை உலகெங்கும்
உணரவைப்பதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.
விடுதலைப் புலிகளினதும் அரசாங்கத்தினதும் நோக்கங்கள்
இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் நோர்வே இரு பகுதியினரும் காட்டியிருந்த ஆர்வமும்இ நம்பிக்கையும்
இருந்ததன் கார்ணத்தினால் பேச்சு வார்தையில்
ஆர்வத்துடண் ஈடுபட்டிருந்தது. மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் நோர்வே நாட்டின் பிரதிநிதி
எரிக் சொல்கிய்ம் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சிகளை வரவேற்றனர். எனினும் இலங்கையில்
உள்ள சில ஒழுங்கமைப்புகளும்இ அரசியல்கட்சிகளும் நோர்வே சமாதான தூதுவரின் விஜயத்தினை
பெருமளவு வரவேற்கவில்லை. அதேவேளை இந்திய உள்துறை அமைச்சர் பிரபாகரனை தங்களிடம் ஒப்படைக்க
வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இது இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும்
பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டுவரும் முயற்சியை குழப்பத்துக்குள் உள்ளாக்கியது. இவ்வாறான
சூழ்நிலையின் போதும் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது.
நோர்வேயின்
இரண்டாவது சமாதான முயற்சி:-
நோர்வேயின் இரண்டாவது சமாதான முயற்சியில் ஐக்கிய
தேசிய முன்னனி அரசாங்கம் பதவியேற்றுக் கொண்ட பின்னரே இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி சந்திரிக்கா
பண்டார நாயக்க குமாரத்துங்கவின் அரசாங்கம் நோர்வேயின் சமாதான முயற்சியில் காட்டிய அதிருப்தி
வெளிப்படையாகவே பலருக்க தெரிந்தது. இதுமட்டுமன்றி 2001 -12-05ல் நடைபெற்ற பாராளுமன்ற
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னனி 109 ஆசனங்களை பெற்று பொதுஜன ஐக்கிய முன்னனியை
நிராகரித்தது. வாக்காளர் யுத்தத்தால் ஏற்பட்ட அநீதிகளையும் அவர்களின் பொருளாதார துன்பங்களையும்
கோடிட்டுக் காட்டியது. அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பெற்ற வியத்தக்க வெற்றியானது விடுதலைப் புலிகளையும் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு இருந்த
ஆழ்ந்த ஆதரவையும் தன்னாட்சிக்கான தமிழர்களின் வேண்டுவாவையும் வெளிப்படுத்தியது. இவை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது.
ஆகவே தேர்தல் முடிவுகள் முரண்பாட்டுத் தீர்வுக்கு
உண்மையான ஒரு சமாதான முயற்சி மூலம் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்று விருப்பம்
கொண்ட மக்களின் நம்பிக்கைகள் பிரதிபலித்தன. இதன் காரணமாக இலங்கையில் மீண்டும் சமாதானப்
பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் இடம் பெற்றதுடன் நோர்வே மீண்டும் இலங்கையில் வந்து
நோர்வே அரசாங்கத்தின் அனுசரணை உடனான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சி
2002-01-24ம் திகதி விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்த ஒரு மாத போர் நிறுத்தத்தை உடன்
அத்து ஆரம்பமானது. இவ்வாறு புலிகள் ஆரம்பித்த ஒரு மாத கால போர் நிறுத்தத்தை பதிலுக்கு
அரசாங்கமும் மோதல் தவிர்ப்பினை மேற்கொண்டது.
இந்நிலையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
தமிழ்ச் செல்வன் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு தமிழ் மக்கள் சுமூகமாக வாழும் சூழ்நிலை
தோன்றும் போது தான் அரசாங்கத்துடனான நேரடிப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான வாய்ப்பு
ஏற்படும் எனத் தெரிவித்தார். ஆயினும் புலிகள் மீதான தடை உடனடியாக நீக்கப்படவில்லை.
சொல்கெய்ம் இது தொடர்பாக இருதரப்பினருடனும் தொடர்பு கொண்டு கதைத்ததுடன் தடை நீக்கப்படுவதற்கு
ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுத்திருந்தார். அத்துடன் இருதரப்பினரிடையே நிலவி வந்த தற்கால
போர் நிறுத்தத்தினை நிரந்தரமாக்கும் பொருட்டு புரிந்துணர்வு ஓப்பந்தம் ஒன்றை தாம் தயாரிப்பதாக
அறிவித்ததுடன் இதில் இரு தரப்பினரையும் கைச்சாத்திடச் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டார்.
இந்நிலையில. இக்கால கட்டத்தில் இருதரப்பினரையும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நோக்கி
நகர்த்துவதில் எரிக்சொல்கெய்ம் ஒரு தபாற்காரன் போல் செயற்பட்டிருந்தார்.
நோர்வேயின்
அனுசரணையும் புரிந்துணர்வு ஒப்பந்தமும்:-
சாதாரணமாக எந்தவொரு நாட்டிலும் உள்நாட்டுப்
போருக்கு அரசியல் தீர்வு காணமுயலும் வேளையில் யுத்தம் மற்றும் மோதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக்
கொள்வது மிகவும் முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. அதற்காக முக்கிய நடவடிக்கையாக போர்
நிறுத்த உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும் நிலமை ஏற்படுகின்றது. எனவே ரணில்
விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் குறுகிய காலத்துக்குள் 2002 பெப்ரவரியில்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.
அரசாங்கத்தின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கா
அவர்களும் டுவுவுநு சார்பில் அதன் தலைவர் வேலுப்பில்;லை பிரபாகரன் அவர்களும்
அனுசரனையாளரயன நோர்வே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இவ்வுடன்பாட்டைத் தொடர்ந்து பேணிவரும்
நோக்குடன் நோர்வே அதற்கு உத்தரவாதம் அளிப்பவராகக் காணப்பட்டார். இவ்வொப்பந்த மீறலைக் கண்காணிக்கும் பொருட்டு நோர்வேயின்
தலைமையில் ஸ்கண்டிNவியாவின் நாடுகளான சுவீடன்இ பின்லாந்துஇ டென்மார்க்இ ஐஸ்லாந்து போன்ற
நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இது ளுடுஆஆ என அழைக்கப்பட்டது.
ஆதன் செயற்பாடு நோர்வே தலைவரை நியமித்தல்இ இரு தரப்பினருடனும் தொடர்பு கொள்ளுதல்இ பிரச்சினைகளின்
போது இரு தரப்புக்கும் ஆலோசனை வழங்குதல் என்பவற்றை கொண்டு செயற்பட்டது. எனினும் கண்காணிப்புக்
குழுவிற்கு இதுவரை வழங்கப்பட்ட அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருந்தது. இது நீதிமன்ற
செயற்பாடு தொடர்பாகவோ தண்டனை வழங்கவோ கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
காரணம் அரசாங்கத்தாலும் விடுதலைப்புலிகளாலும் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையானது தன்னிச்சையானது
என்பதால் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் அப்பால் அதனை நடைமுறைப்படுத்த வேறெந்தவொரு
வெளிச்சக்தியும் இருக்கவில்லை.
எவ்வாறாயினும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைபாடுகளும்
காணப்பட்டன. சிறுவர்களை போருக்கு திரட்டும் செயற்பாடு உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான
குறைபாடுஇ கடல் வலயம் தொடர்பான பிரச்சினைகள் சேர்க்கப்படாமை மட்டுமன்றி நோர்வே சமாதான
அனுசரணையாளராக செயற்படும் அதேவேளை கண்காணிப்பு குழுவிலும் தலைமை தாங்கி செயற்பட்டமை.
எனவே கண்காணிப்பு குழுச்செயற்பாடு வேறு அனுசரணையாளர் செயற்பாடு வேறு ஆகவே இரு பாத்திரங்களை
வகிப்பதால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைபாடுகள் காணப்பட்டன.
என்றாலும் மூன்று வருடங்களுக்கு மேலாக நிலை நிறுத்தியிருப்பதுடன்
பொதுமக்களுக்கு உடன்பாடான பல நன்மைகளை வழங்கியுள்ளது. அதிக பெரும்பான்மை மக்கள் அதற்கு
ஆதரவினை வழங்கியுள்ளனர். உண்மையில் சமாதான முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்துக்கும்
விடுதலைப்புலிகளுக்கும் அழுத்தம் கொடுத்து உதவிய நோர்வே அனுசரணையாளர்களால் வகிக்கப்பட்ட
ஒப்பந்த பங்கு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மகத்தான வெற்றிக்கு ஆதாரமாக விளங்கியது.
சமாதானப்
பேச்சுவார்த்தைகளும் நோர்வேயின் பங்களிப்பும்
இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் நோர்வேயின்
அனுசரணையுடனான யுத்தநிறுத்த ஒப்பந்தத்துடன் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும்
இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை ஆறு சுற்றுப்பேச்சுவார்த்தைகள்
இதுவரை இடம்பெற்றுள்ளன. இதில் முதலாம் இரண்டாம் சுற்றுக்கள் தாய்லாந்திலும் மூன்றாம்
சுற்று நோர்வேயிலும் நான்காம் ; சுற்று மீண்டும் தாய்லாந்திலும் ஐந்தாம் சுற்று ஜேர்மனியிலும்
ஆறாம் சுற்று யப்பானிலும் இடம்பெற்றன. தேடலையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதுடன்
அவற்றில் இனப்பிரச்சினை தீர்வுக்கு தடையாக இருக்கும் காரணிகள் பற்றிய விடயங்கள் ஆராயப்பட்டன.
இருதரப்பினரையும் பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டுவந்து அவர்களிடையே கருத்து பரிமாற
நோர்வே வழிவகுத்தது. மேலும் பேச்சுவார்த்தைகளை வெளிநாடுகளில் நடாத்தி அதனை சர்வதேச
சமூகத்துக்கு எடுத்துக்காட்டியதுடன் அதனூடாக முரண்பாட்டுத் தீர்வு தொடர்பான விருப்பில்
மறைமுகமாக அழுத்தத்தினையும் பிரயோகித்தது. இவ்வாறு நோர்வேயின் பங்களிப்பின் ஊடாக பேச்சுவார்த்தையில்
பல சாதகமான முன்னேற்றங்கள் எடுத்துக்காட்ட வேண்டியவை.
இலங்கையில் நோர்வேயினுடைய சமாதானப் பேச்சுவார்த்தையில்
நான்கு விதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அவையாவன விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடைகள்
நீக்கப்பட்டமைஇ இருதரப்பினர்களினதும் கோரிக்கைகளில் நெகிழ்ச்சித்தன்மை ஏற்பட்டமைஇஅரசியல்
தீர்வு ஒன்றினைக் காண்பதில் இருதரப்பினர்களிடையும்
இணக்கம் ஏற்பட்டமைஇ சர்வதேச சமூகத்தின் பொருளாதார உதவிக்கான ஆர்வம் போன்றவாகும். இதைவிட
இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டமையுமாகும். இவை பற்றி விரிவாக பின்வருமாறு
நோக்கலாம்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டமை:-
2002ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கு
எதிராக தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையானது இப்பேச்சுவார்த்தையின் போது நீக்கப்பட்டது.
இத்தடைநீக்கம் பேச்சுவார்த்தையின் முதலாவது முன்னேற்றமாகும். உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில்
இத்தடை நீக்கம் விடுதலைப்புலிகளுக்கு அத்தியவசியமாகும். எனவே சமாதானப்பேச்சுவார்த்தையின்
மூலமாக விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டமை பேச்சுவார்த்தைகளை எவ்வித தடைகளுமின்றி
கொண்டு செல்ல உதவியது. 'அடிப்படையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கு நன்மையளித்தது.
இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள்
மக்கள் சந்திப்புக்கள்இ பொது விளையாட்டு நிகழ்வுகள் அனைத்திலும் பங்குபற்றித் தங்கள்
புலிக் கொடியை ஏற்றினர். பாடசாலைகளில் தங்கள் பிரச்சாரப் படங்களைக் காட்சிப்படுத்தும்
நிகழ்வுகள் பொது நிகழ்வாக மாறியது. தங்களின் செல்வாக்கைப் பலப்படுத்திக் கொள்வதற்காகத்
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இது போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அரச தரப்பிலிருந்து
எதிர்ப்புகள் எழவில்லை. மூன்றாவது சமூகக் குழுவான முஸ்லிம்களிடமிருந்தே எதிர்ப்புக்
கிளம்பியது. பின்னர் அரசு – புலிகள் இருதரப்பு சமநிலை வலு பிறிதொரு நிலைக்கு மாறியிருந்தாலும்
அடிப்படையில் யுத்த நிறுத்த உடன்பாடானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே சாதகமாக இருந்தது.
இருதரப்பினர்களினதும்
கோரிக்கைகளில் நெகிழ்ச்சித்தன்மை ஏற்பட்டமை:-
சுமாதானப்பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப கட்டத்தில்
விடுதலைப்புலிகளின் தரப்பின் முக்கிய பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் கூறுகையில் 'புலிகள்
அமைப்பு தொடர்ந்தும் தனியான அரசு ஒன்றை உருவாக்குவதற்கான யுத்தத்தில் ஈடுபடாது 'என
ஒருதலைப்பட்சமாகக் கூறினார். அதற்குப் பதிலாக இலங்கையினுள் தன்னாட்சி உரிமையுடன் கூடிய
பிரதேச நிர்வாக நடைமுறை ஒன்றை ஏற்றுக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதன்
மூலம் தனியான அரசு என்ற தமது குறிக்கோளுக்கு அரசியல் ரீதியான மாற்றம் ஒன்றை ஏற்றுக்
கொள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு தயாராக உள்ளதாக கருத முடிந்தது. இலங்கை அரசின் எவ்வித
அழுத்தங்களுமின்றி விடுதலைப் புலிகள் அமைப்பு ஓரு பட்சமாகத் தமது கருத்தை வெளியிட்டமை
மகத்தான விடயமாகும்.
எனவே முரண்பாட்டுத் தீர்வுக்கு முரண்பட்ட தரப்பினரிடையே
நோக்கினை அடைவது என்றால் விட்டுக்கொடுப்பது அவசியமாகும். இந்நிலையில் விடுதலைப்புலிகள்
விட்டுக்கொடுத்து நடந்து கொண்டமை சமாதான பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றத்தினை
ஏற்படச் செய்தது. இதே போன்று அரசாங்க தரப்பிலும் சில விட்டுக் கொடுப்புக்கள் நிகழ்ந்தது.
இலங்கைக்கு ஒற்றையாட்சி முறையே சரியென கூறி வந்த இலங்கை அரசு சமஸ்டி அல்லது கூட்டாச்சி
முறையை ஏற்பதாக வெளிப்படையாக அறிவித்தது. இவ்வாறான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இருசாராரது
கருத்துக்களில் நெகிழ்ச்சித்தன்மை காணப்பட்டதனை அறியலாம். இந்நிலையில் கலாநிதி அன்ரன்
பாலசிங்கத்தின் கூற்று 'தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு கிடைத்தால் இலங்கையில் போராட்டத்திற்குஅவசியமில்லை'
என்ற கருத்தினை இவ்விடயத்தில் வெளிப்படுத்தலாம்.
அரசியல்
தீர்வு ஒன்றினைக் காண்பதில் இருதரப்பினர்களிடையும் ஏற்பட்ட இணக்கம் :-
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற
பேச்சுக்களின் போது அரசும் விடுதலைப்புலிகள்
அமைப்பும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சுயாட்சி மற்றும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு
ஒன்றினை எட்டும் நோக்கில் இருதரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட்டனர். இவ்வகையில் இனப்பிரச்சினைக்கு
அரசியல் தீர்வு ஒன்றே சாத்தியமாகும். இரண்டு தரப்புக்களும் இலங்கையில் ஒற்றையாட்சி
அரசியல் அமைப்பு முறை சமஸ்டி அரசியல் அமைப்பு முறையாக மாற்றப்பட்டதன் பின்னபே அரசியல்
தீர்வு ஏற்பது முறைமை பெறும் எனக் கூறுகின்றன.
இதன்படி இலங்கையில் மத்திய அரசு வடக்கு கிழக்கில்
உதிக்க இருக்கின்ற மாநில அரசு என்பவற்றுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு சிவில்இ நிதிஇ
நிர்வாகம் சட்ட ஒழுங்கு என்பவற்றை எவ்வாறு பங்கீடு செய்வது எனத்தீர்மானிக்கும் பொருட்டு
பல நாடுகளினதும் அரசியல் அதிகாரப்பகிர்வு விடயங்களிலும் ஆராயப்பட்டது. இந்நிலையில்
ஒரு நாட்டின் மாதிரியை மட்டும் கவனத்தில் எடுக்காது பல்வேறு நாடுகளின் மாதிரிகளில்
இலங்கைக்கு பொருத்தமான அம்சங்களை எடுத்து ஆராய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
எடுத்துக்காட்டாக அமெரிக்காஇ சோவியத் யூனியன்இ பெல்ஜியம் போன்ற நாடுகளில் அதிகாரப்
பகிர்வு தொடர்பாக ஆராய்வதில் இருதரப்பினரிடையும் இணக்கம் காணப்பட்டது.
சர்வதேச
சமூகத்தின் பொருளாதார உதவிக்கான ஆர்வம்:-
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில்
முதல் சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில் சர்வதேச ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டது.
அதாவது சர்வதேச சமூகம் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு
பொருளாதார உதவிகளை வழங்க விரும்பியது. பொதுவாகச் சாதாரண நிலையில் சமாதான ஒப்பந்தம்
கைச்சாத்திட்ட பின்னரே பொருளாதார உதவி வழங்கப்படும். மாறாக இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை
பலப்படுத்தும் நோக்கிலே ஆரம்ப நடவடிக்கையின் போது சர்வதேச சங்கம் சர்வதேச உதவிகளை வழங்க
முன்வந்தது.
இவ்வாறு பொருளாதார உதவி வழங்கிய நாடுகள் சமாதானப்
பாதையிலிருந்து விலகக் கூடாது என எச்சரிக்கை விடுத்தது. அரசாங்கம் மேற்கொண்டு வரும்
சமாதான முயச்சிகளில் வரும் பொருளாதார நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும்.
அந்த நிதி கிடைக்கப்பட வேண்டுமானால் வடக்கு கிழக்கு மக்களின் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாக்கப்பட
வேண்டும். அத்துடன் அபிவிருத்தித் திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கமும்;
விடுதலைப் புலிகள் இயக்கமும் சமாதானப் பாதையிலிருந்து விலகிச் செல்லாமல் தடைகளையும்
இடையூறுகளையும் தாண்டிச்செல்ல வேண்டும் என சர்வதேச உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்தியது.
சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்லும் பட்சத்திலேயே உலக நாடுகளின்
நம்பிக்கையினையும் நிதியுதவியினையும் பெறலாமென அதன் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு சர்வதேச சமூகத்தின் உதவி கிடைத்தமையை நாம் காட்டலாம்.
இலங்கையின்
இனப்பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டமை:-
சர்வதேச சமூகம் அரசையும் புலிகளையும் பேச்சுவார்த்தை
நோக்கி நகர்த்தியுள்ளது. இதனால் இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டதனை
அறியலாம். இந்நிலையில நோர்வேயின் அனுசரனையின் போது ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும்
சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடியவாறு வெளிநாடுகளிலேயே இடம்பெற்றது. ஒவ்வொரு
பேச்சுவார்த்தைகளையும் சர்வதேச சமூகம் மிகவும் நுணுக்கமாக அவதானித்து வந்தது. இதனூடாக
இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்திகை ஈர்த்த தனிக்காரணமாக அரசாங்கத்தினையும் விடுதலைப்புலிகளையும் ஒரு உடன்பாட்டுக்கு கொண்டு
வருவதற்காக மறைமுகமாகச் சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தையிலிருந்து
விலகும் எந்த தரப்பினரும் சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாகுவர். இவ்வாறு சர்வதேச சமூகத்தின்
பார்வையில் இலங்கையின் இனப்பிரச்சினை கொண்டுவரப்பட்டதால் நோர்வேயின் மறைமுக அழுத்தமும்
ஏற்பட்டது. இந்நிலையில் இனப்பிரச்சினையில் நீண்டகால யுத்த தவிர்ப்பு ஒன்றை ஏற்படுத்தியதில்
நோர்வேயின் பங்கு மகத்தானது.
நோர்வேயின்
சமாதான முயற்சியில் இடையில் ஏற்பட்ட மாற்றம்:-
கடந்த நான்கு வருடமாக இடம்பெற்ற சமாதான முயற்சி
திடீரென இடைநிறுத்தப்பட்டது. இதற்கு அண்மையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை ஒரு காரணமாக
அமைந்தது. அந்நிலையில் ஜனாதிபதியின் எதிர்ப்பு மூன்று அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி கைப்பற்றிக்
கொண்டமை இ புலிகளின் மூன்று சரக்குக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டமைஇ அரசின் பங்காளியாக
உள்ள ஜே.வி.பியின் எதிர்ப்பு நடவடிக்கைகள்இகருணா குழுவுக்கு இராணுவ உதவி வழங்கப்பட்டமைஇ
புலிகளின் போராளிகள் கிழக்கில் கொலை செய்யப்பட்டமைஇ சமாதான பேச்சுக்களில் ஏற்பட்ட முறிவுஇ
ஜனாதிபதி அரசாங்கத்தை கலைத்தமைஇ இதனைத் தொடந்து எதிர்பாராத விதமாக வந்த சுனாமி அனர்த்தினால்
மீண்டும் ஒரு அவசரகாலச் சட்டத்தினை இலங்கை ஜனாதிபதி பிறப்பித்தார். எனவே இந்நிலையில்
நோர்வேயின் சமாதான முயற்சிகள் இடை நிறுத்தவேண்டிய நிலையில் காணப்பட்டது.
நோர்வேயின்
மூன்றாவது சமாதான முயற்சி:-
நோர்வேயின் மூன்றாவது சமாதான முயற்சி பொதுஜன
ஐக்கிய முன்னனி ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது
ஜனாதிபதி மூன்று அமைச்சுக்களை கையில் எடுத்தமையினால் நாட்டில் அபிவிருத்திக்காகக் கடன்
நன்கொடை வழங்க உறுதி அளித்திருந்த நாடுகள் அரசியல் ஸ்திரமற்ற நிலையினால் அவ்வுறுதிமொழிகளிலிருந்து
பின்வாங்கின. உள்நாட்டில் ஏற்பட்ட அதிகார இழுபறிகளினால் சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து
நடத்துவதற்கு அனுசரனையாளராக செயற்படுவது சிரமம் எனக்கூறி 2003ம் ஆண்டு நவம்பர்14ல்
நோர்வே அரசு தற்காலிகமாக தமது பணிகளை இடைநிறுத்தியது. இவற்றுக்கு மத்தியில் இரு கட்சிகளும்
இணைந்து சகவாழ்வு அரசியலை நடத்த மனோமனக் குழுவினர் எடுத்த முயற்சியும் எவ்வித பயனையும்
தராதரவிடத்து ஆட்சிமாற்றம் நடைபெற்றவுடனே விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி
ஜனாதிபதி பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். பிரதமர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரும் பேச்சுவார்த்தை
உடன் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறி வந்தனர். ஆனாலும் பிரதமரும் அமைச்சின் சிரேஸ்ட
அமைச்சர்கள் சிலரும் ஜனாதிபதியுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு அதனையும்
பேச்சுவார்த்தையில் பங்கு பெறவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இவ்முயற்சிகளில்
சாதகமான முன்னேற்றம் கிடைக்காத நிலையில் 2004 ஏப்ரல் 22ல் ஜனாதிபதி நோர்வே பிரதமருடன்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில்
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கும் படியும் தொடர்ந்தும் அனுசரனையாளராக
செயற்படும் படியும் கேட்டுக் கொண்டார்.
இவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட நோர்வே அரசு மே10ல்
வெளிவிவகார அமைச்சர்களின் தலைமையின் கீழ் இலங்கைக்கு தூதுக்குழு அனுப்பி வைத்தது. இவர்கள்
அரசுடனும் விடுதலைப்புலிகளுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அரசாங்கம் தேர்தலுக்கு முந்திய தனது நிலைப்பாட்டிலிருந்து
மாறுபட்டு பேச்சுவார்த்தைக்குச் சாதகமான சமிக்கைகளை வெளிக்காட்டியது. இந்நிலையில் பங்காளிக்கட்சியான
ஜ.வி.பி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இவ்வாறு பல கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துக்கள்
காணப்பட்ட போதிலும் இவ்வாறு பல்வேறு பட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தைகளைத்
தொடர்ந்து நடாத்தப் போவதாக ஜனாதிபதி கூறினார்.
ஆனால் துரஸ்டவசமாக 2004 டிசம்பர் 26ல் ஏற்பட்ட
சுனாமி அனர்த்தம் வட- கிழக்கு மட்டுமன்றி தென்பகுதியையும் தாக்கியுள்ளதால் பேச்சுவார்த்தை
திசைதிருப்பப்பட்டு சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கான நிவாரண வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றம் ஏற்பட்டது.
எனவே சர்வதேச உதவி வழங்கும் நாடுகள் ஏற்றத் தாழ்வற்றவகையில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி நிவாரணங்களை
மேற்கொள்ளலாமென அறிக்கை விட்டது. இதன்படி நோர்வேயின் அனுசரணையில் பொதுக்கட்டமைப்பு
ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
சுனாமிக்குப்
பின்னரான தொழிற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு
ஒப்பந்தம்;:-
இருபது வருடங்களுக்க மேலாக ஆயுதப்போராட்டத்தினை
நடத்திக் கொண்டிருந்த குழுவினர் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்த வேளையில் சமாதானம் குழப்பியடிக்கப்பட்ட
நிலையில் அரசியல் குழறுபடிகளால் உல்லாசப்பிரயாணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இங்கு முதலீட தயக்கம் காட்டினர். நாட்டின் அபிவிருத்திக்கான
கடன்கள் கொடை வழங்க உறுதி அளித்திருந்த நாடுகள் அரசியல் ஸ்திரமற்ற நிலையினைக் கண்ட
கடன் வழங்க மறுத்த போது நோர்வே 2003ல் தனது சமாதானப்பணிகளை தற்காலிகமாக நிறுத்திக்
கொண்டது. பின்னர் 2004ல் பதவியேற்ற ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று
நோர்வே வெளிவிவகார அமைச்சுத்தலைமையில் 2004 மே10ல் ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் எதுவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எதிர்பாராத விதமாக சுனாமி
இருதரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்கம் சகையில் ஒரு பொதுக்கட்டமைப்பை
உருவாக்க வழிகோலியது.
பொதுக்கட்டமைப்பினை ஏற்படுத்துவதற்கான காரணம்
சர்வதேச நாடுகளின் அழுத்தம் அரசாங்கத்தினையும் விடுதலைப்புலிகளையும் தூண்டியது. இந்நிலையில்
விடுதலைப்புலிகளின் வட -கிழக்கு பகுதிகளிலும் அரசாங்கத்தின் தெற்குப் பகுதியிலும் சுனாமி
அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஏனைய வல்லரசுகளின் அழுத்தத்தின் காரணமாக
விடுதலைப்புலிகளுடன் பொதுக்கட்டமைப்பினை அமைத்துக்கொள்வது என்பது ஜனாதிபதிக்கு ஒரு
தீர்க்கமான விடயமாகிவிட்டது. இந்தப் பிரேரணை விடுதலைப்பலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்
சுனாமி நிவாரணங்களுக்காக நிதிகளை பகிர்ந்தளிப்பதற்கு ஒரு வழியாக அமெரிக்கா ஐரோப்பிய
ஒன்றியம் மற்றும் ஜப்பானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்தகைய உடன்படிக்கை விடுதலைப்புலிகளுக்கும்
அரசாங்கத்துக்கும் இடையில் இருபது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த மோதலுக்கு முடிவு
கட்டுவதற்காகவும் இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்காகவும்
மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்று வழியாகவும் கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்து அரசாங்கத்துடனும் மற்றும் எதிர்க்கட்சி
தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக அமெரிக்க தூதுவர் கிறிஸ்ரீனா றொக்கா
நோர்வேயின் விசேட தூதுவர் எரிக்சொல்கெய்ம் ஆகியோர் இலங்கை வந்ததை அடுத்து சமாதானப்
பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்குவதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் அழுத்தங்கள்
அதிகரித்துள்ளன. எனவே ஜனாதிபதி தனது உயிரைத்துறந்தாவது
பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்துவேன்னென வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் விடுதலைப்புலிகளை
பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் உயர்ந்த மட்டத்தில்
இருப்பதனால் முதற் தடவையாக விடுதலைப்புலிகள் அரசாங்கத்தின் இறைமையினை ஏற்றனர் எனக்கூறினார்.
அடுத்து நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையை ஏற்ற
ஜனாதிபதி கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் 'தமது அதிகாரத்தில் இருக்கும்
சில முட்டாள்கள் நோர்வையை விலக்கி சமாதானப்பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் நோர்வையை
ஒதுக்கா விட்டால் அதைத் தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறினர். இந்த முட்டாள்களை வைத்துக்கொண்டு
எப்படித்தான் நாட்டை ஆட்சி செய்வதென்று தமக்குத் தெரியவில்லை என்கிறார். நோர்வேத் தரப்பு
ஒதுக்கப்பட்டால் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கே வரப்போவதில்லை என்பதனையும் தெரிவித்தார்.
எனவே இந்நிலையில் சுனாமி மீள் கட்டுமானப் பணிகளை
உருவாக்கும் வகையில் பல எதிர்ப்புக்கள் ஆர்ப்பாட்டங்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு
உடன்படிக்கை ஒன்றை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொண்டார். இதனை சுனாமி நிவாரணம் தொடர்பான
பொதுக்கட்டமைப்பு என்றும் 2005-06-24ல் அரச தரப்பில் ஜெயசிங்காவிற்கும் விடுதலைப்புலிகள்
தரப்பில் ரஞ்சன்லாலுக்கும் இடையில் கையொப்பம் இடப்பட்டு நோர்வேயின் தூதுவர் காலஸ்பிரதஸ்;
விடுதலைப்புலிகளுக்கும அரசாங்கத்துக்கும் இடையில் பரிமாற்றம் செய்தார். இந்நிலமை விடுதலைப்புலிகளையும்
பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர நோர்வே எடுக்கும் முயற்சியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருந்தும் 2006ஆம் ஆண்டு சித்திரை மாதம் இலங்கை
இராணுவத் தளபதி மீது மேற் கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலைத் தொடர்து யுத்த
நிலமை மோசமடைந்தது. இருந்தும் 2008 ஆம் ஆண்டு தை மாதம் ஏற்கனவே நடைமுறையிலிருந்த போர்
நிறுத்த உடன்படிக்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையில் ஒருதலைப்பட்சமாக அரசாங்கம் விலகிக்
கொண்டதோடு யுத்தம் ஆரம்பமாகியது. யுத்தம் ஆரம்பமாகி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
கொல்லப்பட்டதுடன் யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து நோர்வேயின் சமாதான முயற்சிகள்
தோல்வியில் முடிவடைந்தன.
நோர்வேயின்
சமாதான முயற்சியில் இந்தியாவின் பங்களிப்பு
இலங்கையின் இனமோதலில் இந்தியாவின் நேரடி மற்றும்
மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி ஏற்படுகின்ற இராஜதந்திர நிர்ப்பந்தமாகும்.
இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியா மறைமுகமாகத் தலையீடு
செய்வதற்கு நோர்வேயினைப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறமுடியும். இலங்கையில் நோர்வே தலைமையிலான
சமாதான முயற்சிகளின் பின்னணியில் இந்தியா பிரதான உந்து சக்தியாக இருந்தது என்பதுடன்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இறுதியில் ஏற்பட்ட மோசமான அழிவுகளுக்கு இந்தியா காரணமாக
இருந்தது என்ற கருத்தை இலங்கையின் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான
இராஐதந்திரச்செயற்பாட்டில் இந்தியாவின் வகிபாகத்தினை இலங்கையின் சமாதான முன்னெடுப்புகள்
தொடர்பாக நோர்வே பிரசுரித்த சமாதானத்திற்கான கையாளுகை 1997 – 2009 வரையிலான இலங்கையில்
நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றிய மதிப்பீடு (Pயறளெ ழக Pநயஉந நுஎயடரயவழைn Pநயஉந
நககழசவள in ளுசi டுயமெயஇ 1997-2009) என்ற அறிக்கையும் அவ்அறிக்கை வெளியிட்டு எரிக்
சொல்ஹெய்ம் ஆற்றிய உரையும் தெரிவிக்கின்றன.
1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலையில் தமிழீழ
விடுதலைப் புலிகள் தொடர்புபட்டமையினயல் அன்று தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில்
செயல்படுவதற்கான தடையினை இந்திய அரசாங்கம் தொடர்ந்து விதித்து வருகின்றது. இது இலங்கை
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக
இந்தியா நேரடியாகப் பங்குபற்றுவதனைத் தடுத்திருந்தது. அதேநேரம் தன்னால் வளர்க்கப்பட்டு
பின்னர் தன்னால் நிராகரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உடனடியாக நிறுத்த முடியாமலும்
திண்டாடியது. அதாவது இலங்கை பிளவுபடுவதைக் இந்தியா ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை
காரணம் தமது நாட்டுப் பிழவுக்கும் இது காரணமாக இமைந்து விடுமம் என்ற அச்சம் எப்போதும்
இந்தியாக்கு இருக்கின்றது. இதனாலே பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் எதனையும்
வழங்குவதற்கு இலங்கை மாத்திரமன்றி இந்தியாவும் தயாராக இருக்கவில்லை.
எனினும்
மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்தியா மீது செலுத்திய
அழுத்தத்தினை கருத்தில் கொண்டு நோர்வேயினை அனுசரணையாளர் வகிபாகத்தினை வகிக்கும் படி
இந்தியா கேட்டுக் கொண்டது. அதாவது நோர்வேக்கு தொடர்பாளர் பணிபாத்திரமே வழங்கப்பட்டது.
சகல தீர்மானங்களையும் புதுடெல்லியே எடுந்திருந்தது. இது தொடர்பாக எரிக்சொல்ஹெய்ம் தனது உரையில் பின்வருமாறு
விபரிக்கின்றார். 'நோர்வே என்பது வெறுமனே பிரபாகரனை அணுகுவதற்கான ஒரு தொடர்பாளர் பாத்திரம்
மட்டுமே. இலங்கையின் சமாதான முயற்சி வெளிப்பார்வைக்கு நோர்வேயின் குழந்தை போன்று காட்சியளித்தாலும்
உண்மையில் இதை இயக்கிய சக்தி இந்தியாதான்'.
என கூறியிருந்தார் . இதை புலிகள் அறிந்திருந்ததோடு விரும்பியும் இருந்தது.
இவ் சமாதான முயற்சியில் இந்தியா யுத்த நிறுத்த
உடன்பாட்டினையடைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதுடன்
அதற்கான பல உள்ளடக்கங்களையும் புதுப்பித்துக் கொடுத்தது. சமாதான முயற்சிகளில் வேறு
நாடுகள் தொடர்புபடுவதை இந்தியா விரும்பாததுடன்இ யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில்
எந்த நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துள்ளது. இந்தியாவின் தேசிய நலன்களை
நிராகரித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் எதையும் சாதித்து விட முடியாதிருந்தது.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவின் தேசிய நலனுக்காகத் தமது கொள்கையினை
மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கவில்லை
அதேநேரம் ராஜீவ் காந்தி படுகொலை தமிழீழ விடுதலைப்
புலிகள் மீதான உச்ச மட்ட கோபத்திற்குள் இந்தியா உள்ளாவதற்குக் காரணமாக இருந்தது என்பதையும்
மறுக்க முடியாதுள்ளது. யுத்தக்களத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பூரணமாக அழித்தொழிக்கப்படுவதைப்
நேரடியாகப் பார்ப்பதில் இந்திய அரசாங்கம் மிகவும் ஆர்வத்துடன் இருந்ததோடு பொது மக்கள்
கொல்லப்படுவதும் இந்தியா அறிந்தும் இருந்தது. இந்தியாவின் அங்கீகாரத்துடன் தான் இறுதி
யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்தியா எண்ணியிருந்தால் யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த
வேளையில் அதனைத் தடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அவ்வாறு சொல்லவோ செய்யவோ இல்லை. இதற்கு இந்தியாவின் தேசிய நலனும்இ விடுதலைப் புலிகளின்
வழர்ச்சியை தடுப்பதற்குமான ஒர் நடவடிக்கையாகவே இருந்தது.
இலங்கையில்
நோர்வேயின் தோல்விகள்
இலங்கையின் இன மோதலின் முக்கிய பங்குதாரர்களை
ஓரிடத்திற்குள் கொண்டு வருவதற்கு நோர்வே வகித்த வகிபாகம் பிரதானமானதாகும். இலங்கையின்
எதிர்கட்சிகளும்இ இந்தியாஇ யப்பான் போன்ற நாடுகளும் இலங்கையின் இனமோதலில் காத்திரமான
இடத்தினைப் பெற்றிருந்தன. ஆயினும் சர்வதேச சமூகம் வெளிப்படையாகச் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத்
தனது முதன்மையான ஆதரவினைத் தெரிவித்து வந்தது. சமாதானப் பேச்சு வார்த்தையில் இந்தியாவின்
ஆதரவு முழுமையானதாக இருக்கின்றது என்பதில் நோர்வே முழு நம்பிக்கை கொண்டிருந்தது. இன்னோர்
வகையில் பிராந்திய அதிகாரப் போராட்டத்தின் யதார்த்தத்தினை நோர்வே ஏற்றுக்கொண்டிருந்தது.
சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தேவையான முழு விடயங்களையும் இந்தியா வழங்கி வழிப்படுத்தி
வந்தது.
ரணில்
விக்கிரமசிங்காவினால் ஏற்படுத்தப்பட்டிருந்த சர்வதேச வலையமைப்புத் தொடர்பாகத் தமிழீழ
விடுலைப்புலிகளுக்கு அச்சம் காணப்பட்டது. மகிந்தராஜபக்ஷ மேற்கு நாடுகளுடன் தொடர்பு
கொள்வதில் ஆர்வம் அற்றவராக காணப்பட்டார். இந் நிலையில் மகிந்தராஜபக்ஷ வெற்றி பெற்றால்
ரணில்விக்கிரம சிங்காவினால் ஏற்படுத்தப் பட்டிருந்த சர்வதேச வலைப் பின்னலிலான பொறிமுறையொன்றை
உருவாக்க முடியாது. மகிந்தராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்தால் சமாதான முயற்சிகளுக்கு எதிரான
தேசிய வாதம் உருவாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை
இது தீவிரப்படுத்தும். தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்பார்ப்பும் இதுவாகவே இருந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர் பார்த்தது போன்றே நிலைமைகள் இலங்கையில் ஏற்பட்டன. இங்கு
அவதானிக்கப்பட வேண்டிய விடையம் யாதெனில் தமிழீழ விடுதலைப்புலிகள் இக் காலத்தினை தமது
இறுதி யுத்த தயார் நிலைக்கு பயன்படுத்தி இருந்தார்களேயன்றிஇ மாறி வரும் சர்வதேச அரசியல்
சூழ்நிலைகளைக் கருத்தில்எடுத்து ராஜதந்திரப் போருக்குத் தம்மை தயார்படுத்தியிருக்கவில்லை.
இன்னோர் வகையில் கூறின் யுத்த நிறுத்த காலத்தில் தனது இராணுவ கட்டமைப்பினை வலிமைப்படுத்திஇ
பொருத்தமான சூழலில் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறி யுத்தத்தினை ஆரம்பிப்பதும்இ
அதற்கான முழுப் பொறுப்பினையும் கொழும்பின் மீது சுமத்துவதே தமிழீழ விடுதலைப்புலிகளின்
நோக்கமாக இருந்தது எனலாம். இதற்காக மேற்கு நாடுகளுடன் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்த
ரணில் விக்கிரமசிங்காவை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும்
பொறிமுறையொன்றைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இதன் படி தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையினைத் தடுத்தனர். இதனால் சிறிய வாக்கு வித்தியாசத்தில்
மகிந்தராஜபக்ஷ வெற்றி பெற்றார். தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையில்
வலிந்து தலையிடாமல் இருந்ததால் மகிந்தராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்திருக்கக் கூடும்.
2002ஆம்
ஆண்டு கார்த்திகை மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் மகாநாடு ஒஸ்லோவில்
கூடப்பட்டது. இதில் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளும்இ வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
நாடுகளும் நோர்வே தலைமையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமது முழுமையான ஆதரவினைத்
தெரிவித்ததோடு. இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களின் மனிதாபிமான உதவிக்கு நிதி உதவி வழங்க
இணங்கிக் கொண்டன. இந்த இரு தரப்பு பேச்சு வார்த்தையின் மூன்றாவது அமர்வின் பின்னர்
ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக சுய நிர்ணய உரிமையுடனான சமஸ்டி முறையில் அரசியல் தீர்வினைக்
காண்பதற்கு இலங்கை அரசாங்கமும்இ தமிழீழ விடுதலைப்புலிகளும் உடன் பட்டுக் கொண்டனர்.
ஆயினும் பின்னர் பேச்சு வார்த்தையிலிருந்து முழுமையாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியேறியமை
சர்வதேச சமூகத்தினை நிராகரிப்பதற்குச் சமமாகியது. சர்வதேசச் சூழலைச் சரியாக தமிழீழ
விடுதலைப்புலிகள் புரிந்து கொண்டிருப்பார்கள்
ஆயின் ஒஸ்லோ தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மிகவும் அவதானத்துடன் ஈடுபட்டிருக்கக்
கூடும். எவ்வாறு 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்
திருப்பு முனையாக அமைந்ததோ அவ்வாறானதொரு திருப்பு முனையினை ஒஸ்லோ பிரகடனம் மூலம் ஏற்படுத்தி
இருக்கலாம். இலங்கை இந்திய ஒப்பந்தம் குறைந்த பட்சம் மகாண சபைகளை உருவாக்கியிருந்தது.
இதுவே இன்று தமிழ் மக்களுக்கு எஞ்சியுள்ள அரசியல்
தீர்வாகவுமுள்ளது. பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இதனை நிராகரித்து யுத்தம் புரிந்தது
போன்றுஇ ஒஸ்லோ தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த சகிப்புத்தன்மையுடன் சர்வதேச
சமூகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிப் பின்னர் போராட்டத்திற்கான புதிய பரிமாணத்தினை தேடியிருக்க
முடியும். ஆயினும் இது நிகழவில்லை. பதிலாக 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு
பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்இ இலங்கை அரசாங்க படைகளுக்கும் இடையிலான யுத்தம்
அதிகரித்து. 2008ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்த உடன் படிக்கையினை முடிவுக்கு
கொண்டு வந்ததுடன் யுத்தம் மீண்டும் ஆரம்பமாகியது. நோர்வேயினைப் பொறுத்த வரையில் இலங்கையின்
இன மோதலுக்கு இராணுவத் தீர்வு முடிவாக அமையாது என்பதை அழுத்திக் கூறியிருந்தது.
இலங்கையின்
அரசியல் கலாசாரம் பொதுவாக கூட்டுக் கட்சி அரசாங்கமாகவே இருக்கின்றது. இது இலங்கையின்
இனமோதலுக்கான தீர்வினைக்காண்பதற்குச் சாதகமானது என்பது எவ்வாறு உண்மையானதோ அந்தளவிற்குப்
பாதகமாக இருந்தது. என்ற உண்மையினையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. கூட்டு அரசாங்கத்தில்
பங்கெடுக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு இடையில் இன மோதல் தொடர்பான பொது இணக்கப்பாட்டினைக்
காண்பது நோர்வேக்கு பெரும் பிரச்சினையாகவிருந்தது. மேலும் இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக்
குழுவினை நெறிப்படுத்திய நோர்வேயினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டுப்
பிரதேசங்களாகிய கிளிநொச்சிஇ முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் யுத்த நிறுத்த உடன் படிக்கையின்
ஏற்பாடுகளை செயற்படுத்தக் கூடிய சூழ்நிலையினை உருவாக்கமுடியாமல் இருந்தது. அதே நேரம்
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தந்திரமாக தமது அரசியல்
வேலைகளைச் செய்வதற்கு நோர்வே வாய்ப்புகளை தேடிக் கொடுத்திருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளை
ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் ஈர்ப்பதற்கும்இ பயிற்சிப்பதற்குமான தந்திரோபாயமாக
இவ் வாய்ப்புக்களைக் நோர்வே தேடிக் கொடுத்ததாக கருத முடியும். மறு பக்கத்தில் யாழ்குடா
நாட்டிற்கான பிரதான போக்குவரத்துப்பாதை மீண்டும்இ திறக்கப்பட்டதன் பின்னர்இ தமிழீழ
விடுதலைப்புலிகளின் சட்டப்படியற்ற ஆனால் நடைமுறையிலிருந்த அரச பிரதேசத்திற்கு ஊடாக
பிரயாணம் மேற்கொள்ளும் மக்கள்இ வாகனங்கள்இ பொருட்கள் மீது இவர்கள் வரி விதிக்கத் தொடங்கினார்கள்.
இவைகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இல்லாத விடயங்கள் ஆகும். இவற்றைக் கட்டுப்படுத்த
அல்லது தடுக்க முடியாத நிலையில் நோர்வே இருந்தது. இது நோர்வே தமிழீழ விடுதலைப்புலிகளை
ஆதரிக்கும் ஒரு நாடாக விமர்சனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது.
மேலும்இ
இராணுவ ரீதியாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் பலமடைவதை தடுக்கக் கூடிய வல்லமையற்ற நிலையில்
நோர்வே இருந்தது. இரு தரப்பும் தமது அரசியல் விரோதிகளைப் பரஸ்பரம் படுகொலை செய்கின்ற
கலாசாரமும் அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை
தெரியவராவிட்டாலும் ஏறக்குறைய 3113பேர்கள் 2005ஆம் ஆண்டுஇ ஆவணி மாதம் வரையில்
(2002இல் இருந்து – 2005வரை) படுகொலை செய்யப்பட்டதாகவும் இதில் 141பேர்கள் அரசாங்கத்தினால்
படுகொலை செய்யப்பட்டவர்கள் என்றும்இ குறிப்பாக 2003ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரையில்
38 அரசியற் படுகொலைகள் நடை பெற்றதாகவும் கூறப்படுகின்றது. நோர்வே தனது மத்தியஸ்த்தப்
பணியை சிறப்பாகச் செய்ய முடியாமல் தடுமாறியமைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தமிழீழ
விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நாடுகளாக நோர்வேயும்இ டென்மார்க்கும் விமர்சிக்கப்
பட்டு வந்ததுடன்இ தேவையான நிதியுதவிகளையும் வழங்கி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிந்தன.
நோராட்(ழெசயன)ரெட்பானா (சுநனடீயசயெ) போன்ற அமைப்புகளுடாக நோர்வே நிதி வழங்கியதாகக்
கூறப்படுகின்றது. 2005ஆம் ஆண்டு எரிக்சொல்கெய்ம் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை(வுசுழு)
தழிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடாக வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் ஒஸ்லோவில்
சர்வதேச தொடர்பாடல் தலைமையகத்தினை அமைப்பதற்கும் நோர்வே அனுமதியளித்திருந்தது. யுத்த
நிறுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் சிறந்த வானொலி தொடர் பாடல் வலைப்பின்னலை
உருவாக்கிக் கொள்ள நோர்வே உதவியதாகவும் வெளிவந்த செய்திகளை நோர்வே மறுத்திருந்தது.
மத்தியஸ்த்தப் பணியை மேற்கொள்ளும் நாடு பக்கச்சார்பாக நடந்து கொண்டது தவறானது என்ற
விமர்சனம் நோர்வேக்கு ஏற்பட்டது.
அதேபோன்று நிச்சயமற்ற அரசாங்கம்இ முஸ்லிம் எதிர்பார்புக்கள்இ
நிர்வாக திறமையின்மை இந்நிலமையினை சீhராக்கம் செய்வதாகவே அரசு காணப்படுகின்றது. நோர்வே
அரசாங்கம் இந்நிலமையினை நிவர்த்தி செய்து சிறப்பான அனுசரனையினை மேற்கொள்வதிலேயே அதன்
நிலைப்பாடுடாக காணப்படுகின்றது. பொதுவாக சுனாமியின் நிமித்தம் கொண்டுவரப்பட்ட பொதுக்
கட்டமைப்பு சகல தரப்பாரையும் அனுசரித்துச் செல்லும் நிலையில் இருக்க வேண்டும். இவ்வுடன்படிக்கையில் முஸ்லிம் தரப்பார் கைவிடப்பட்டமையும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் ஒரு புறமும் மக்கள் விடுதலை முன்னனி
ஒரு புறமும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வந்தமையையும் காணலாம்.
அதேபோன்று 2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் அன்ரன் பாலசிங்கத்தின்
மரணத்தைத்தொடர்ந்து விடுதலைப் புலிகள் தரப்பில் முடிவுகள் பிரபாகரனின் தனிப்பட்டதாக
அமைந்தமையும் நோர்வேயின் சமாதான முயற்சி தோல்வி அடைய ஒரு காரணமாகவும் அமைந்தது.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18ஆம் திகதி யுத்தம்
நிறைவடைந்ததாக அரசாங்கம் மக்களுக்கும் சர்வதேச நாடுகளுக்கு அறிவித்துக் கொண்டது. யுத்தம்
நிறைவடைந்ததுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் முறிவடைந்து நோர்வேயின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.
சமாதானப் பணிகளில் நோர்வே பாரிய தோல்வியினை தழுவியது. சிறப்பாக அப்பணியைச் செய்ய முடியாது
தடுமாறியது என்றும் கூறப்படுகின்றது. நோர்வேயின் (சமாதான) முயற்சியினால் யுத்தம் முடிவடைந்தது
ஆனால் இன்னமும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் சரியாக வழங்கப்படாத நிலையில் சமாதானம்
என்பது இடையப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது. ஏப்போது அனைத்து இனங்களும் சமமாக மதிக்கப்பட்டு
அவர்களுக்கான உரிடைகள் வழங்கப்பட்டு உத்தரவாதம் அழிக்கப்படுகின்றதோ அப்போதே இலங்கையிர்
சமாதானம் நிலைத்து நிற்கும்.