பொதுவான காரணங்கள்.
இலங்கையில் வாழும் பெரும்பான்மை இனமானது இலங்கையை எந்தவொரு சூழ்நிலையிலும்
துண்டாடக் கூடாது என்று கூறுவதுடன், வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனியான ஆட்சி பொறுப்பு
சென்றுவிடும், அது தனியரசாக
மாறக்கூடும் என்று கருதி அதிகார பரவலாக்க செயற்பாட்டு முறைகளை பல சந்தர்ப்பங்களில்
கொடூரமான முறையில் எதிர்த்தன. மேலும், ஏமாற்றத்திற்கு உள்ளான தமிழர் தரப்பினரும் சில அதிகார பரவலாக்க யோசனைகளை
நிராகரித்தமை, சில சர்வதேச
சக்திகளும் தங்களின் நலனுக்காக இலங்கையை ஒரு தளமாகக் கொண்டிருந்தமை போன்ற
காரணங்களும் இலங்கையில் அதிகாரபரவலாக்க செயன்முறையினை நடைமுறைப்படுத்த தடையாக
அமைந்தமையை நாம் உணரலாம்.
இலங்கையில் எடுக்கப்பட்ட முயற்சிகள்
மத்திய அரசிடம் குவிந்திருக்கும் அதிகாhரத்தை மாவட்ட, மாகாண, பிரதேச மட்டத்திலுள்ள அமைப்புகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான ஒரு வழிமுறையினையே
அதிகார பரவலாக்கம் குறித்து நிற்கின்றது. சட்டவாக்க அதிகாரமும், நிர்வாகத்துறை அதிகாரமும், நீதியதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்து
காணப்படாது பரந்துபட்ட வகையில் பகிர்ந்தளிக்கும் ஒரு நிலையினையே இது
குறிக்கின்றது. அனைவரையும் உள்ளடக்கி சமத்துவம் நிழவும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப,
பாரம்பரிய பிரதேச ரீதியான
அதிகாரபகிர்வு போதுமானதாக இல்லை. இதற்கு தீர்வுகாண வேண்டிய அவசியமும் ஏற்பட்டே
உள்ளது.
கடந்த காலங்களில் தோழ்வி கண்ட முயற்சிகளாக: பண்டா – செல்வா உடன்படிக்கை, டட்லி – செல்வா ஒப்பந்தம், இலங்கை - இந்திய உடன்பாடு (யாப்பின் 13 வது திருத்தமும் மாகாணசபை முறைமையும்),
ஜனநாயக மக்கள்
முன்னணியின் தீர்வுத்திட்டம் (1988), மங்கள சமரவீர இடைக்கால அறிக்கை (1992), பொதுஜன ஐக்கிய முன்னணியின் தீர்வுத்திட்டம் (1997)
போன்றவற்றைக் குறிப்;பிடலாம். இவையனைத்தும் கொண்டுவரப்பட்ட
காலங்களிலேயே தோல்வி கண்டமை என்பது மிகவும் வருந்ததக்க விடயமாகும்.
பண்டா - செல்வா ஒப்பந்தம்.
இலங்கையில் முதன் முதலாக இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் 1957ஆம் ஆண்டு ளுடுகுP அரசாங்கத்தின் தலைவரும் அப்போதைய பிரதமருமான
ளு.று.சு.னு பண்டாரநாயகா, அப்போதைய
தமிழரசுக்கட்சியின் தலைவர் ளு.து.ஏ செல்வநாயகம் ஆகியோருக்கு இடையில் செய்யப்பட்ட
ஒப்பந்தமே பண்டா – செல்வா உடன்படிக்கை.
இது இரண்டு பக்கங்களைக் கொண்டது ஒன்று மொழி பற்றியது, இரண்டாவது நிர்வாக பரவலாக்கம் பற்றியது.
பண்டா – செல்வா ஒப்பந்தம்
தமிழ் மக்களை பொருத்தவரை பூரண உரிமைகளை வழங்காவிட்டாலும், இனப்பரச்சினை தீர்வுக்கான ஒரு பலமான
படிக்கல்லாக அமைந்திருக்கும். இவ்வொப்பந்தத்தின் மூலம் ஓரளவு இலங்கைக்கு ஏற்ற ஒரு
அதிகார பரவலாக்கம் கொண்டுவரப்பட இருந்ததோடு அது அதிகாரபரவலாக்களை நோக்கிய
பயனத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதன் நடைமுறையானது மிகவும் குறுகிய காலத்திலேயே
தோல்வியைகண்டது. இதற்கு அப்போதய அரசியல் சூழ்நிலையே காரணம் எனலாம். பிரதமர்
ளு.று.சு.னு பண்டாரநாயகா அவர்களின் றொஸ்மீட் பிளேசிலுள்ள இல்லத்தின் முன்பாக 1958 ஏப்ரல் 8ம் திகதியன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை
சேர்ந்த பிக்குகளின் வழிநடத்தலில் பௌத்த பெரமுன பண்டா – செல்வா ஒப்பந்ததிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததை
அடுத்தே ஒருதலைபட்டசமாக பிரதமர் அதனை கிழித்தெறிந்தார். இருபுடைசார் ஒப்பந்தத்தின்
அடுத்த பக்கத்தவரான தந்தை செல்வாவுடன் கலந்துரையாடாமலே இதனை பிரதமர் செய்தார்.
அப்போதய எதிர்ககட்சியான ருNP இவ்வொப்பந்தத்தை
கடுமையாக எதிர்ததோடு, பண்டாரநாயகா
நாட்டை கூறு போடுகின்றார் என்ற கருத்தையும் கூறிவந்தது. மேலும், நாடு பிளவுப்படபோகின்றது என்ற கருத்தும்
பெரும்பான்மை மக்களிடம் காணப்பட்டது. இதற்கு ஏற்ற வகையிலேயே பிக்குகளும் தமது
ஆர்பாட்டத்தினை நடத்தினர். இதனால் இறதியில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கொடூரமான முறையில்
எதிர்க்கப்பட்டதினால் தோழிவிகண்டது மட்டுமல்லாமல், கிழித்தெறியவும்பட்டது. இது சுதந்திர இலங்கை
முதன்மதலாக மேற் கொண்ட அதிகார பரவலாக்கத்திற்கான அடித்தளம் தோழ்வி அடைந்தமையை
எடுத்துக்காட்டுகின்றது.
டட்லி – செல்வா ஒப்பந்தம்
இதனைத்தொடர்ந்து பல அரசியல் மாற்றங்களின் பின்னர் டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் மூலம் ஒரு அதிகார
பரவலாக்க யோசனை முன்வைக்கப்பட்டது. அதாவது பிரதமர் டட்லி சேனாநாயகாவிற்கும் ளு.து.ஏ செல்வநாயகத்திற்கும் இடையில் 1965ம் ஆண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக
முன்வைக்கப்பட்ட உடன் படிக்கையே டட்லி – செல்வா உடன்படிக்கையாகும்.
இதன் ஓர் அம்சமாக மாவட்ட சபைகள் (னுளைவசiஉவ உழரnஉடைள) உருவாக்கப்படுவதை குறிப்பிடலாம். இதில் முக்கிய படுத்தக்கூடிய அதிகார
பரவலாக்க விடயங்கள் காணப்படவில்லை. இதன் பிரகாரம் மாவட்ட சபைகளை நிறுவி
அதிகாரங்களை பரவலாக்கி தமிழ் பிரதேசங்களுக்கு ஓரளவு அதிகாரங்களை கையளிப்பதற்கான
மாவட்ட சபைகள் சட்ட மூலத்தை அமைச்சர் மு. திருச்செல்வம் தயாரித்தார். பலமாதகாலம்
பலராலும் ஆராயப்பட்ட மசோதா பாராளுமன்றத்தில் வெள்ளையறிக்கையாக
அறிமுகப்படத்தப்பட்டது. இருந்தும் பல எதிர்ப்பின் விளைவால் அதுவும் சாதியபாடு அற்றதாகிவிட்டது.
மாவட்ட அபிவிருத்தி சபைகள்.
இலங்கையின் அடிமட்ட மக்களும் ஆட்சியில் பங்கு கொள்ள வேண்டும் மற்றும்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டவைகளே மாவட்ட
அபிவிருத்தி சபைகளாகும். இலங்கைக்கு சமஷ்டி முறையே ஏற்புடையது என்று அறிந்த போதும்
மாவட்ட சபைகளை அந்தளவிற்கு தரத்துடன் கொண்டு வரலாம் என்ற நோக்குடன்
அறிமுகப்படுத்தப்பட்டது. மதமிழர் விடுதலை கூட்டணியும் மக்களின் தமது சாத்வீக
போராட்டத்தில் இறுதி பங்களிப்பை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. தந்தை
செல்வாவின் மகனும் கனடாவில் அவ்வேளை அரசியற்துறை பேராசிரியராகவும் இருந்த ஏ.ஜெ
வில்சன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் உள்ளுராட்சி அமைச்சரவையிலிருந்த
செனட்டர் மு. திருச்செல்வம் அவர்களின் புதல்வரும் சட்டத்தரணியுமான காலாநிதி நீலன்
திருச்செல்வமும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தினர். வர்க்க ரீதியான நல்லுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருந்த இவர்களது
பேச்சு வார்த்தையின் விளைவாக மாவட்ட அபிவிருத்தி அதிகார சபைகள் பற்றிய
உடன்பாட்டிற்கு ஐ.தே.க அரசும் தமிழர் ஐக்கிய முன்னணியும் 1981ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன.
இந்த சூழ்நிலையில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டை தீர்மானதின் படி தனி நாடு என்று
ஆகிவிட்டதனால் தமிழ் இளைஞர்களும் இதனை ஏற்றுக்கொள்ள வில்லை. இருப்பினும் 1981 யூன் மதம் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்கள்
நடாத்தப்பட்டன. பட்டின சபைகளுக்குறிய அதிகாரங்கள் கூட இல்லாத நிலையில் பெயரளவில்
செயற்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபையின் மீது தமிழ் மக்கள் முற்றாக நம்பிக்கை
இழக்கும் நிலை ஏற்பட்டது. அதற்கு காரணம் அப்போதய இலங்கை அரசானது தமிழர்களை
ஏமாற்றகின்றது என்று தமிழ் தலைவர்கள் கருதினர். ஒரு வகையில் அதுதான் உண்மையும்
கூட. நடைமுறையில் அரசு மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கு தேர்தலை நடத்தியது தவிர,
வேறு எந்த அதிகாரங்களையோ,
நிதிபலத்தையோ வழங்க
வில்லை. மேலும், நாடு பூராகவும்
தமிழர்களுக்கு எதிராக வன்முரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனால் தமிழ்
தலைவர்கள் அரசியல் தீர்வு யோசனைகள் பலவற்றிலிருந்து விலகினார்கள். இவ்வாறான
சூழ்நிலையில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் தனது நோக்கத்தினை அடைவதில் தோல்வி
கண்டமையை காணக்கூடியதாக இருந்தது.
மானாணசபை முறை
யாப்பில் கொண்டவரப்பட்ட 13வது
சீர்த்திருத்தத்தின் மூலம் மாகாணசபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது
இந்தியாவின் தலையீடடினால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். இதனூடாக இலங்கையின் அதிகார
பரவலாக்க செயற்பாட்டில் வெளி சக்திகளின் தலையீட்டினை காணக்கூடியதாக உள்ளது. இந்திய
பிரதமர் ராஜுகாந்தியும், இலங்கை ஜனாதிபதி
ஜே.ஆர் ஜெயவர்தனாவும் 1987ம் ஆண்டு
கொழும்பில் செய்துக்கொண்ட உடன் படிக்கையே இலங்கை - இந்திய உடன் படிக்கையாகும்.
இதுவே 13வது திருத்த
மாகாண சபைகளின் மூலக்காரணியாகும்.
ஒவ்வொரு மாகாண சபையும், தனித்தனி மாகாண சபையாக செயற்படும் எனவும்,
அவற்றுக்கான அதிகாரங்கள்
மாகாண பட்டியல், மத்திய பட்டியல்,
ஒத்தியங்கும் பட்டியல் என
பிரித்தளிக்கப்பட்டன. அதில் முறையே மாகாணங்களுக்கான அதிகாரங்கள், மத்திய அரசிற்கான அதிகாரங்கள், பொதுவான அதிகாரங்கள் என காணப்பட்டன. இதில்
பொதுவான அதிகாரங்களில் அதிகம் ஆதிக்கம் கூடியதாக மத்திய அரசு காணப்பட்டது. இதில்
குறிப்பிடக் கூடிய விடயம் என்னவெனில், ஏற்கனவே மத்திய அரசிடம் காணப்பட்ட அதிகாரங்களில் குறிப்பிட்ட சில அதிகாரங்களை
மட்டுமே மாகாணங்களுக்கு வழங்கப்பட்டது. அதிலும் ஒத்தியங்கும் பட்டியல் என்ற ஒன்றை
ஏற்படுத்தி விட்டனர்.
மாகாணசபைகள், எந்த
நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ, எந்த மக்களிற்காக
கொண்டுவரப்பட்டதோ அதிலிருந்து மாறுபட்ட விதத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய
மாகணங்கள் சிறப்பாக இயங்க, இவை பல்வேறு
சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன. மேலும், மாகாணசபைகள் தீர்வு யோசனையை விடுதலை புலிகளும்
ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக, வடக்கு கிழக்கில்
அசாதாரண சூழ்நிலையை ஆதாரமாகக் கொண்டு மத்திய அரசானது இவற்றை தனது கட்டுப்பாட்டில்
வைத்திருந்தது. இது சிறபான அதிகார பரவலாக்க முறைக்கு தடையாக அமைந்தது.
இன்று பூரணமான அதிகாரங்களுடன் மாகாண சபைகள் இயங்கவிலை. அவற்றின் பல
அதிகாரங்கள் மத்திய அரசினால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக காணி, காணி அபிவிருத்தி, பொலிஸ் போன்ற அதிகாரங்களை குறிப்பிடலாம்.
மேலும் இவற்றை வழங்கினால் பிரிவினை என்ற எண்ணம் வந்தவிடும் என்று பெரும்பான்மை
மக்கள் எண்ணுகின்றார்கள். 13வது திருத்தச்
சட்டத்தில் குறிப்பாக ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்துச் பெரும்பான்மையினர்
எதிர்க்கிறார்கள். இந்நிலையில் மாகாணசபையானது அதிகார பரவலாக்கம் என்று
கூறப்பட்டாலும் நடைமுறையில் அவை இருந்தும் செயலற்றவைகளாகவே காணப்படுகின்றன எனலாம்.
இவ்வாறாக மாகாண சபைகளின் நிலை காணப்பட்டதன் விளைவாகவும், தமிழ் தேசிய வாதிகள் இதனை ஏற்றுக் கொள்ளாததன்
விளைவாலும் தொடர்ந்து இலங்கையில் இனப்பிரச்சினை நிலவி வந்ததது. இதனால் கடந்தகால
அரசாங்கங்களினால் அதற்கான மாற்று வழியினை சிந்திக்க வேண்டி ஏற்பட்டது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் அதிகாரப் பகிர்வுத்திட்டம்.
ஆரம்பத்தில் இத்திட்டயோசனையும் பல
சிங்களவர்களால் எதிர்க்கப்பட்டதனால் பல எதிர்ப்பிற்கு பின்னர் 1996 ஜனவரியில் முன்னால் ஜனாதிபதி திருமதி
சந்திரிக்கா குமாரத்துங்கவினால் கொண்டுவரப்பட்டது. இது அரசியவமைப்பின்
சீர்த்திருத்ததிற்கான யோசனையாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது பல
எதிர்ப்புகளினாலும், ஆட்சி
மாற்றங்களினாலும் அது அரம்பத்திலேயே தோல்வி கண்டது. இதில் பிராந்தியங்களின்
ஒன்றியம் என்ற அடிப்படையில் தீர்வு யோசனை முன்வைக்கப்பட்டது. இதில் யாப்பில்
ஒன்றையாட்சி முறையினை நீக்கி சமஷ்டி முறையினை கொண்டுவருதல் வேண்டும் என்றும்
எல்லைக்கோடுகளை மீள வரைவதன் மூலம் சிறப்பானதொரு தீர்வினை முன்வைக்கலாம் என்று
சுதந்திர கட்சி விரும்பியது. இருந்தும் ஜனாதிபதி முறை நீக்கம் கொண்டுவரப்படும்வரை
யாப்புதிருத்த யோசனைகளை எதிர்ப்பதாக ஐ.தே.கா தெரிவித்தது. ஒற்றையாட்சி தன்மை
நீக்கப்படுவது நாடு துண்டாடப்பட வழிவகுக்கும் என கூறி பௌத்த பீடங்களும் அதன்
தலைமைகளும் இதனை நிராகரித்தன. இதன் விளைவாக இத்திட்டம் தோழ்வி கண்டது.
யுத்த முடிவினைத்தொடர்ந்து அரசானது சிறுபான்மை இனங்களை திருப்தி படுத்தும்
வகையில் ஒரு தீர்வு யோசனையை முன்வைக்கும் என்று அரசதரப்பு கூறிவருவதுடன், சிறுபான்மை மக்களும் நம்பிவந்தனர். இது
ஒருபக்கமாக இருக்க, 13வது திருத்ததில்
கூறப்பட்டிருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க
கோரியும் சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில்
ஈடுபட்டு வந்தது. ஆனால், அதற்கும்
அரசதரப்பு உடன்பட வில்லை. 13வது பிளஸ் வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கூறிய ஜனாதிபதி
பின்னர் தமிழ் தலைவர்கள் திரும்பத்திரும்ப திம்புவிலேயே நிற்கின்றார்கள் என்று
கூறிவிட்டார். மேலும் 13வது பிளசின் ஊடாக
செனட்சபையொன்று கொண்டுவரப்பட்டும் என்றும், மாகாணங்களின் அதிகாரங்கள் வேறு விதமாக மறு
சீரமைக்கப்படும் என்றும் கூறிவந்திருந்தன.
இப்போது நிலமை வேறு விதமாக போகின்றது. மேற்கு
தேச நாடுகளின் அழுத்தத்தினால் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கும்
இலங்கைக்கு எதிரான பிரேரனையானது, கட்டாயம்
தமிழர்களுக்கு முறையான தீர்வு திட்டத்தினை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு
உள்ளாக்கியுள்ளது. இருப்பினும் இதன்சாத்தியப்பாடு அதிகார பகிர்விற்கு வழிவகுக்குமா?
ஆம் என்றாலும், அது நிரந்தரமானதும் பூரணமானதுமாக அமையுமா?
என்பதை பொருத்திருந்தே
பார்க்க வேண்டும்.
முடிவுரை
பல முயற்சிகளின் விளைவாக அதிகார பகிர்வு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும்,
இலங்கையின் பேரினவாத
சக்திகள், மதவாதிகள்,
அரசியல் அறிவு குறைந்த
மக்கள் அனைத்திற்கும் மேலாக சிறந்த தலைமைத்துவம் இன்மை போன்ற காரணங்களினாலும்,
எந்த சந்தர்ப்பத்திலும்
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவதில்லை என்ற திட்டத்தோடு செயற்படும்
பெரும்பான்மை மக்கள் மத்தியில் அதிகார பகிர்வு என்பது சாத்தியப்படுமா என்பது
சந்தேகத்திற்கிடமானதொன்று. மேலும் தமிழ் நாட்டையும் இலங்கையின் வடக்கு கிழக்கையும்
தொடர்பு படுத்தி பார்க்கும் பெரும்பான்மை மக்கள் தமிழர்களுக்கு இந்தியா
இருக்கின்றது தங்களுக்கு யாரும் இல்லை என்ற நிலைப்பாட்டை மாற்றி இலங்கையில்
இருக்கும் தமிழர்களும் இலங்கையர்களே என்ற நிலைப்பாட்டிற்கு வந்தால் மட்டுமே அதிகார
பகிர்வு வெற்றியளிக்கும்.