“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

Srilanka


இலங்கை அரசியல் கட்சிகளின் தலைமைத்துவப் போக்கு

அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துக் கொள்கின்றவர் யாராக இருந்தாலும் அவர் தலைவராவார் என்று ஸ்பிறாட் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். மேலும் தலைமை என்பது நடத்தை முறை இது பிறரின் நடத்தை முறையை பாதிக்குமே தவிர பிறரின் நடத்தைமுறை தலைவரின் நடத்தை முறையை பாதிக்காது என்று லாட்பியர், பிரான்ஸ் வொர்த் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக பார்க்கும் போது தலைவரின் நடத்தையானது அவர் சார்ந்த அமைப்பினை பாதிக்கும் என்ற கருத்தினை பெறக்கூடியதாக உள்ளது. எனவே தலைமைத்துவமானது மிகவும் முக்கியமானதும், அதன் தனை;மையினை பொருத்தே கட்சியின் செயற்பாடும் அமையும் என எம்மால் அறிய முடிகின்றது.

அரசியற் கட்சி எனும் போது, ஓர் இணைந்த அரசியல் சமூகமாக செயற்படுவதும், ஓரளவிற்கு நெறிப்படுத்தப்பட்டதுமான ஓர் அமைப்பு என்றும் அது குடிமக்களால் உருவாக்கப்படுமாயின் அதுவே அரசியற் கட்சி என்று குறிப்பிடலாம். ஒரு அரசியற் கட்சியின் வெற்றிக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும், அக்கட்சியின் தலைமைத்தவத்திலேயே அவற்றை ஒழுங்கப்படுத்தி செயற்படுத்தக் கூடிய பலம் காணப்படுகின்றது. ஆகவே கட்சியானது நிலைத்து ஆட்சிப்பீடத்தை கைப்பற்றுவதும் அதன் வெற்றி தோல்வி என்பன தலைமைத்துவத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எந்தவொரு கட்சியானாலும் ஒரு தலைமைபீடத்தைக் கொண்டே காணப்படும். அதில் ஒரு தலைவர் காணப்படவே செய்கின்றார். மேலும் ஆட்சி பீடத்தை அமைக்கும் கட்சியின் தலைவர் நாட்டின் தலைமைத்துவத்திற்கு முன்மாதிரியானவராக போற்றப்படுகின்றார். இவ்வாறாக ஓர் அரசியற் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றது.

ஒரு கட்சியின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி செயற்படுத்துவதற்கும் வினைத்திறனான செயற்பாடுகளையும், முன்னோக்கிய பயணத்திற்கும் தலைமைத்துவம் முக்கியமானதாகும். கட்சியானது பொதுஜன அபிபிராயத்தை ஒன்றுதிரட்டி அதனை நடைமுறைப்படுத்துவதும், தேசிய ஒருமைபாட்டை வளர்த்தலும் தனது முக்கிய பணியாகும். இதனோடு உறுதியான அரசாங்கத்தை அமைத்தலும், பலமான எதிர்கட்சியினை உருவாக்குவதும் இதன் பிரதான செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடுகளை வெற்றிகரமானதாக செயற்படுத்த கட்சி தலைமைத்துவமானது முக்கியமானதாகும்.

கட்சியானது வெற்றிப்பெறுவதற்கு பலவழிகள் காணப்படுவதுடன் அவற்றை ஒழுங்கான முறையில் முறைப்படுத்தி வழிநடத்துவது தலைமைத்துவத்திலேயே தங்கியுள்ளது. இதனாலேயே கெபினட் ஆட்சி முறையில் ஆட்சி அமைக்கும் கட்சித் தலைவரை சூரியனை ஒத்தவர் என்று குறிப்பிடுகின்றனர். இதனூடாக கட்சியில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்ளக் கூடியதாய் உள்ளது. ஒரு கட்சியானது தமது சூழலுக்கு ஏற்ப செயற்பட்டு மக்களின் நலன்களை பேணி, சிறந்த கொள்கைகளை வகுத்து செயற்படுமாயின் அக்கட்சியானது நிலைத்து நிற்கக் கூடியதொன்றாக காணப்படும். இருப்பினம் சில கட்சிகளில் தலைமைத்துவம் மாறும் போது கொள்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். அது தலைமை ஏற்பவரின் தன்மையினைப் பொருத்து அமையும்.

இந்தவகையில் இலங்கையின் கட்சிமுறையானது காலணித்துவ காலத்தில் தோற்றம் பெற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. முதன் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியற்கட்சியாக 1935ம் ஆண்டு தோற்றம் பெற்ற லங்கா சமசமாஜ கட்சியே காணப்படுகின்றது. இது ஒரு இடதுசாரி கட்சியாக காணப்பட்டது. அதாவது இதன் தலைவர்கள் மாக்சிச கொள்கையினை பரப்புபவர்களாக காணப்பட்டனர். இதனைத்தொடர்ந்தே பல கட்சிகளின் தோற்றத்தினை காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக 1940களிளேயே வலதுசாரி கொள்கையுடைய கட்சிகளின் தோற்றம் இடம்பெற்றது. இவ்வாறாக காலணித்துவ காலத்தில் தோற்றம்பெற்ற கட்சிகள் தமது தலைமைத்துவத்தில் பல முரண்பாடகளை சந்திக்காமல் இல்லை. இதனால் பிளவுகள் ஏற்பட்டு, பல கட்சிகள் தோன்ற ஏதுவானது.

ஆரம்ப காலம் தொட்டே இலங்கையின் கட்சிகள் வலதுசாரி, இடது சாரி என பிரிந்து செயற்படலாயிற்று. பிற்காலத்தில் இவ்வாறான கொள்கைகளின் கலப்புத் தன்மையுடன் இன ரீதியான, மத ரீதியான கட்சிகளின் தோற்றமும் இடம் பெறலாயிற்று. இலங்கையை பொருத்தவரை பலமான இரண்டு கட்சிகளாக UNP, SLFP   என்பன காணப்பட்டாலும் அவை கூட்டரசாங்கங்களையே அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்சியின் தலைமைத்துவமானது எவ்வாறு இருக்க வேண்டும் என்றால், கொள்கைகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி அதன்போது தோன்றும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, கட்சிக்குள் பிளவு ஏற்பாடாத வண்ணம் செயற்படும் தன்னலமிலாதவரே கட்சி தலைவராவார். இவ்வாறாக ஒரு தலைவர் செயற்படும் போதே கட்சியானது சிறந்த பாதையில் செல்லக்கூடும். ஆனால் நாம் இவ்வாறான தன்மைகளை இலங்கையில் ஆரம்பகாலம் தொட்டு காண்பது கடினமானதாகவே உள்ளது.

 கட்சியின் தலைவர் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். அதனோடு குறிப்பிட்ட காலத்திற்கே அவர் தலைவராக பதவியாற்றுதல் வேண்டும். அவ்வாறு இல்லாதவிடத்து புதிய நுட்பங்கள், கொள்கைகள், புத்துணர்வு என்பன தோன்றுவது இல்லாமல் போய் விடுவதுமுண்டு. எடுத்துக் காட்டாக ஐக்கிய தேசிய கட்சியினை குறிப்பிடலாம். இக்கட்சியானது ஆரம்ப காலத்தில் சிறந்ததொரு கட்சியாக காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இதன் தலைவர்களே. அதாவது ஜே. ஆர் ஜயவர்தனா, ஆர். பிரேமதாச போன்றோரை குறிப்பிடலாம். ஜே. ஆர். ஜவர்தனா காலத்தில்(1977) ஆட்சிபீடம் ஏறிய ஐ.தே.க தொடர்ந்து சுமார் 17 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்தது. இதற்கு முக்கிய காரணம் கட்சி தலைவர்களே என்று குறிப்பிடலாம். சிறந்த தலைமைத்துவ பண்புகளைப் பெற்றவர்களாக இவ்விரு தலைவர்களும் காணப்பட்டனர். அதனோடு கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரால் இவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக காணப்பட்டனர். ஆனால், இன்று கட்சியின் தன்மை அவ்வாறானதாக இல்லை. தலைவராக காணப்படும் திரு. ரணில் விககரமசிங்க அவர்களை முழு கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. கட்சிக்குள் பிளவுகளும், கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்றது. இதனால் கட்சியின் முன்னேற்றங்கள் தொடர்ந்து தோல்விகண்டே வருகின்றது.

கட்சி தலைமைத்துவமானது சுயநலம் அற்றதாகவும், தனது தேவைக்காக கட்சியினை பயன் படுத்தவதாகவும் இருக்க கூடாது. மேலை நாடுகளை பொருத்தவரை தலைமைத்துவம் தனது கருத்தை பரப்பும் அல்லது கொள்கையை பரப்பும் ஒரு கருவியாக கட்சியினை பயன்படுத்துவதில்லை. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தமது கருத்துக்களைப் பரப்புவதற்கே புதிய கட்சிகளை உருவாக்குவதனை நாம் காணலாம். இலங்கையில் குறிப்பாக, ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஆட்சிகாலமான 1970 தொடக்கம் 1977 வரை காலபகுதியில் தமது கொள்கைகளை நாட்டின் கொள்கைகளாக மாற்றினார். இதில் குறிப்பாக மூடிய பொருளாதாரத்தினை ஏற்படுத்தி நாட்டில் வறுமை நிலை தோன்ற இது ஒரு காரணமானதோடு, நாட்டில் கலவரம் ஏற்படவும், 1977ம் ஆண்டு தேர்தலில் கட்சி படுதோல்வி அடையவும் காரணமானது.  இவ்வாறு ஒரு கட்சி தலைமைத்துவமானது தான் தோன்றி தனமான முடிவுகளை எடுக்கும் போது அது அக்கட்சியின் வெற்றியினையே தடுக்கும்.

தலைமைத்துவமானது முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக இருத்தல் கூடாது. அவ்வாறு ஏற்படுமிடத்து கட்சி பிளவுபட்டு போகும். எடுத்துக்காட்டாக, ருNP கட்சியில் தலைமைத்துவங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ளு.று.சு.னு பண்டாரநாயக்கா கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சியினை தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இதே நிலமை 1945ம் ஆண்டு காலப்பகுதியில் இடது சாரி கட்சிகளிடமும் காணப்பட்டது. என்.எம் பெரேராவிற்கும் கொல்வின் ஆர்.டி சில்வாவிற்கும் இடையிலான முரண்பாடு காரணமாக சில்வா தலைமையிலான குழு டுளுளுP கட்சியிலிருந்து பிரிந்து போல்ஸ்விக் லெனின் கட்சியினை ஆரம்பித்தனர். இவ்வாறான பிளவு காரணமாக அதன் பின்னர் இலங்கையில் இடது சாரி கட்சிகளின் பலம் மிகவும் குறைந்து சென்றமையை நாம் காணலாம். இதன்படி பார்க்கும் போது கட்சி தலைமையில் ஏற்படும் முரண்பாடானது சரியான முறையில் தீர்க்கப்படாது விடப்படும் போது கட்சி வலுகுன்றி போவதை அவதானிக்கலாம். இந்நிலமை தற்போது UNP கட்சிக்குள் இடம்பெறுவதனை அவதானிக்கலாம். அதாவது ரணில் விக்ரமசிகாவிற்கும் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் தலைமைத்துவத்தில் முரண்பாடுகள் காணப்படுகின்றது. அதனால் கட்சி வலுகுன்றி வருகின்றது.

ஒரு கட்சி தலைமைத்துவமானது நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தல் வேண்டும். அந்த வகையில் தற்போதைய ருPகுயு கட்சியானது அனைவருக்கமான கட்சியாக தொழிற்பட முயற்சித்த போதும், அது வெற்றியளிப்பதாக தென்படவில்லை. ஆனால், முன்ன்னால் ஜனாதிபதியான ஆர்.பிரேமதாசாவின் தலைமைத்துவத்தில் கொண்டுவரப்பட்ட வீடமைப்புத்திட்டங்கள், கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் போன்றன கிராமிய மக்கள் தொட்டு அனைவரையும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைப்பதற்கு ஒரு வழியாக அமைந்தது. இவ்விடத்தில் ஐக்கிய அமெரிக்காவின் கட்சி தலைமைத்துவத்தினை குறிப்பிடுதல் வேண்டும். அதாவது, அங்கு காணப்படும் கட்சிகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் மக்களை ஒன்றிணைத்து வழிநடத்தி செல்வது என்பது ஒரே தன்மையினை கொண்டாதாக காணப்படுவது ஒரு முக்கிய அம்சமாகும். இது கமியூனிஸ்ச கட்சிகளிலும் காணப்படுகின்றது. குறிப்பாக சீனா, ரஷ்சியா பொன்ற நாடகளில் காணப்படும் கட்சிகளானது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செல்கின்றது. இந்த நிலை இலங்கையில் காணப்படுவது குறைவாகவே காணப்படுகின்றது. எடுத்துகாட்டாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை குறிப்பிடலாம். இதில் தலைமைத்துவத்தில் ஏறபட்டுள்ள சிக்கல் தன்மை காரணமாக ஒட்டு மொத்த தமிழ் மக்களின் குரலாக இக்கட்சியினால் செயற்பட முடியாதுள்ளதை அவதானிக்கலாம். அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து செல்லக்கூடிய தலைமைத்துவ பண்பை இது இழந்துள்ளது என்றே கூற வேண்டும்.

தலைமைத்துவமானது பொறுபேற்க கூடியதாய் இருத்தல் வேண்டும். அந்த வகையில் ஒரு கட்சியின் தலைமைத்துவமானது அக்கட்சியின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளது. பொதுவாக நோக்கும் போது மூன்றாம் மண்டல நாடுகளில் காணப்படும் கட்சிகளிடம் இத்தன்மையை காண்பது கடினமானதாகவே உள்ளது. இலங்கையை பொருத்தவரை கட்சி தலைமைத்துவத்திடம் பொறுப்புக் கூறுதல் குறைவானது. குறிப்பாக ருNP கட்சியின் இத்தன்மை காரணமாக மக்கள் இக்கட்சியில் வெறுப்படைந்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து இடம்பெற்ற பல தேர்தல்களில் இக்கட்சி தோல்வியினை தழுவிய போதும் தலைமையானது எவ்வித பொறுப்புக்கூறலையும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதே வேளை வேறு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதே நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் உண்டு. தொடர்ந்து இடம்பெற்ற பல பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களுக்கான தீர்வு திட்ட பிரதநிதியாக அரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்திய போது அது தோழ்வி கண்டது. இது தொடர்பாக கட்சி தலைமைத்துவமானது எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக கட்சியின் எதிர் காலம் பாதிக்கப்பட்டே வருகின்றது.

 தான்தோன்றித் தனமாக தலைமைத்துவமானது காணப்படுதல் கூடாது. ஒரு கட்சியின் தலைமைத்துவமானது தான் தோன்றித் தனமானதாக காணப்படுமாயின் இக்கட்சி வீழ்ச்சியடைவது உறுதி. இலங்கையில் ஏற்பட்ட கட்சி பிளவுகளிற்கும், சில கட்சிகள் வலிமை குன்றி போனமைக்கும் இதுவே காரணமாக அமைந்தது. கட்சியின் தலைமைத்துவமானது நுண்ணறிவு மிக்கதாக காணப்படுமிடத்தே அதன் செயற்பாடுகளும், வெற்றியும் உறுதியானதாக அமையும். அந்தவகையில் 1980 களில் ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்கள் மீது கையாண்ட அணுகுமுறையானது தவறானதாகவும், தான்தோன்றித் தனமானதாகவும் காணப்பட்டது. இதன் விளைவாக 1993ம் ஆண்டிற்கு பின்னர் அக்கட்சி வீழ்சி பாதையிலேயே சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலும் கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்ட போதும், வினைத்திறனற்ற செயற்பாடுகளால் அக்கட்சியினால் முன்னணி பெற முடியாதுள்ளது. இதே போன்றே 1970 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் அப்போதய தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகளும் அக்கட்சியியை வீழ்சியடைய செய்தது. இவ்வாறு பார்க்கும் போது தலைமைத்துவத்தின் தான் தோன்றி போக்கினால் கட்சிகள் வீழ்சி அடைந்தள்ளன. அதே நேரம் இன்றைய ஆளும் கட்சியானது சிறந்த நுண்ணறிவுடனும், தெளிவான சிந்தனையுடனும் வழி நடத்தப் படுவதால் இதன் வெற்றிகள் உறுதிப்படுத்தப் படுகின்றன.

ஒருகட்சியின் வெற்றிக்கு ஜனநாயக ரீதியிலான தலைமைத்துவமே சிறந்ததாகும். அந்த வகையில் கட்;சி தலைவர்களின் பதவிக் காலம், தெரிவு என்பன முக்கியமானதாக காணப்படுகின்றது. தலைவர்களை பொருத்தவரை தொடர்ந்து ஒரே தலைமைத்துவம் காணப்படுமிடத்து  புதிய நுட்பங்களும் புதிய செயற்பாடுகளும் இடம்பெறாது போய்விடும். இதனால் கட்சியின் முன்னோக்கிய பயணம் தடைப்படக்கூடும். இந்நிலமை ஐக்கிய தேசிய கட்சியில் இன்று காணப்படுகின்றது. 1994ம் ஆண்டிற்கு பின்னர் தலைமை பொறுப்பேற்ற திரு ரணில் விக்கரமசிங்க அவர்களே இன்றை வரைக்கும் தலைவராக காணப்படுகின்றார். இது விமர்சனத்திற்கு உள்ளானதொன்றாகும். இதனால் மாற்றுத் தலைமைகளுக்கு இடமளிக்கப்படாததன் விளைவாகவே தொடர்ந்து இக்கட்சியானது தோல்விகளை சந்தித்து வருகின்றது என்ற கருத்தும் காணப்படவே செய்கின்றது. இதே போன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் இன்று தலைமைத்துவ போட்டி எழுந்தள்ளது. இதற்கான காரணம் தொடர்ந்து ஒருவரே கட்சியின் தலைமையை ஏற்று நடத்திவருவதாலாகும். எனவே கட்சியின் வெற்றிக்கு ஜனநாயக ரீதியிலான தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது.

சில கட்சிகளின் தலைமைத்துவமானது மதம் சார்ந்ததாக அமைந்திருக்கும். இவ்வாறான கட்சிகளில் தலைமைத்துவத்தின் இயல்பானது, மதம் சார்ந்ததாகவே காணப்படும். ஜாதிக்க எல உறுமய பொன்ற கட்சிகளை குறிப்பிடலாம். இவர்களின் கொள்கையானது மதம் சார்நததாகவும், இனம் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும்.

கட்சியின் தலைமைத்துவமானது சரியான தொடர்பாடலை பேணுதல் வேண்டும். அந்தவகையில் இலங்கையின் தற்பொதைய ஆளும் கட்சி சிறந்ததொரு தொடர்பாடல் முறையினை கையாளுகின்றது என்றே கூற வேண்டும். இருவழி தொடர்பாடரல் சிறப்பாக காணப்படுகின்றது. இது இக்கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்த ஒரு காரணியாக கருதலாம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளில் சிறந்த தொடர்பாடல் பறிமாற்றம் இல்லாமையை காணக்கூடியதாக உள்ளது. தலைவரிடம் இருந்து பெறப்படும் செய்திகள் கட்சியின் அடிமட்டம் வரை செல்லுதல் வேண்டும். அதே போன்று அடிமட்டதிலிருந்து செல்லும் செய்திகளும் தலைமை பீடத்தை சென்றடைகின்றதா என்பதை கண்காணித்தல் வேண்டும். அப்போதுதான் தலைமைத்தவமானது சிறப்பானதாக அமைய முடியும். ஆனால் மேற்குறிப்பிட்ட கட்சிகளை பொருத்தவரை பொது கூட்டங்கள் மக்கள் சந்திப்புக்கள் என்பன குறைவாகவே உள்ளது. இதனால் தலைமைப்பீடம் தனித்து இயங்ககின்றது போன்றே தென்படுகின்றது. இது ஒரு சிறந்த தலைமைத்துவ பண்பல்ல. இதனால் கட்சி தோல்வி காணக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.

கட்சி தலைமைத்துவமானது கட்சிக்காகவே அன்றி தலைமைத்துவதிற்காக கட்சி இருத்தல் கூடாது. அவ்வாறு இருக்கும் போது தான்தோன்றித்தனமும், சர்வதிகாரமும் தோற்றம்பெறக்கூடும். இன்றைய ருPகுயு கட்சி தலைமைத்துவமானது அவ்வாறான ஒன்றாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கட்சியின் கொள்கைகளைவிட தலைமைத்துவம் தீர்மானிக்கின்ற கொள்கைகளையே நிறைவேற்றி வருகின்றது. இது குடும்ப ஆட்சியாக மாறுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. விமர்சகர்கள் மத்தியில் ருPகுயு கட்சியானது ஒரு குடும்பக் கட்சி என்றே வர்ணிக்கப்படுகின்றது. இதே நிலை 1980களில் ஐக்கிய தேசிய கட்சியிலும் காணப்பட்டது. அப்போதைய தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனா தனது எண்ணங்களையும் செயற்பாடுகளையுமே கட்சிக்கள் புகுதினாறேதவிர கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவராக காணப்படவில்லை. எனினும் இத்தலைமைத்துவத்தினை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கவே செய்தன. அNது போன்றே இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அதனை தனது உடைமையாக வைத்தக் கொண்டள்ளமையை அவதானிக்கலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் தலைவர் சம்பந்தன் இல்லாவிட்டால் யார் தலைவர் என்ற சூழ்நிலைவரை அவர் கட்சியை  தனதாக்கிக் கொண்டுள்ளார். இவ்வாறான தலைமைத்துவங்களால் கட்சியின் வளர்ச்சிப்போக்கு தடைபட்டு செல்லும் என்பது உண்மை.

இலங்கையில் காணப்படும் தமிழ் கட்சிகளினது தலைமைத்துவத்தினை நோக்கம் போது அவை தலைமைத்துவ போட்டிகளாலும், பிரதேச வாதத்தாலும், பிற்போக்கான கொள்கைகளாலும் பிளவுபட்டு நிற்பதை அவதானிக்கலாம். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளில் ஏற்பட்டு வரும் உட்பூசல் காரணமாக மேலும் அவை பிளவுப்பட கூடிய வாய்ப்பக்கள் இருப்பதை காணலாம். தலைமைத்துவங்களுக்கு இடையிலான போட்டி காரணமாகவும் தமிழ் கட்சிகள் வௌ;வேறு பாதையில் செல்கின்றன. இதனால் இக்கட்சிகளின் வெற்றிகள் விளகிசெல்கின்றன.

இலங்கையில் கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்த தலைமைத்துவங்கள் இல்லாமல் இல்லை. எடுத்துக் காட்டாக ஜே. ஆர். ஜயவர்தனா, ஆர். பிரேமதாச மற்றும் திருமதி சந்திரிக்கா குமாரத்துங்க போன்ற தலைவர்களை குறிப்பிடலாம். இவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியின் ஊடாக மக்கள் நல பணிகள் பல மேற்கொள்ளபபட்டதுடன், கட்சிகள் பிளவுபட்டு செல்வதை தடுத்தார்கள். இதனால் இலங்கையில் காணப்படும் இரண்டு பிரதான கட்சிகளை காணக்கூடியதாக உள்ளது.

இதே போன்றே பல கட்சிகளின் தலைமைத்துவங்களின் சீரின்மை காரணமாக அவை தோல்வி கண்;டு, மறைந்து போன கட்சிகளும் இல்லாமல் இல்லை. இவற்றிற்கு காரணம் கட்சி தலைமைத்துவமே எனலாம். இதே போன்றே தமிழ் கட்சிகளின் தோல்விக்கும் தலைமைத்துவங்களின் செயற்பாடே காரணம் எனலாம். இதற்கான காரணங்கலாக நாம் மேல் பார்த்த விடயங்களே அமைகின்றன.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் கட்சி தலைமைத்துவதிலிருந்து ஆசிய நாடுகளின் கட்சி தலைமைத்துவங்கள் மாறுபடவே செய்கின்றன. இதற்கான காரணம் சிறந்த கல்வியறிவு, கல்வியறிவு படைத்த மக்கள், சிறப்பான அரசியல் கலாசாரம் என்பனவாகும். மேலும், அங்கு கட்சி தலைமைத்துவமானது பொறுப்பக்கூறுதல், விட்டுக்கொடுத்தல், ஜனநாயக வழியை பின்பற்றுதல் போன்ற தலைமைத்துவ பண்புகளை கொண்டள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்க குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியினையும், பிரித்தனிய கன்சவேர்டி கட்சி, தொழிற் கட்சி என்பவற்றை குறிப்பிடலாம். இவ்வாறான கட்சிகளின் தலைமைத்துவமானது கீழேத்தேச நாடுகளின் கட்சிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தற்போது இலங்கையில் காணப்படும் கட்சிகள் தலைமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றது. அரசியல் கட்சிகளில் காணப்படும் தலைமைத்தவ குறைப்பாடகளை கண்டு அவற்றை நீக்குதல் வேண்டும். அவற்றிக்கு திறந்த மனப்பான்மையுடன் தலைமைத்துவங்கள் தங்களை ஒன்றுப்படுத்தியும், ஒழுங்குப்படுத்தியும் செயற்படுதல் வேண்டும். மேலும், நவீன பாணியில் தமது கொள்கைகளை வகுத்து சிறந்த அரசியல் ஞானத்துடன் தலைமைத்துவ பயிற்சிகளுடனும் எதிர்கால லட்சியங்களுடனும் கட்சி தலைமைகள் முன்னோக்கி செல்லுதல் வேண்டும். அவ்வாறாயின், இலங்கையில் கடந்த காலங்களில் பேசப்பட தேசிய அரசாங்கத்தை அமைத்தல் போன்ற விடயங்கள் இலகுவாக்கப்படும். அரசியலும் சர்வதேச நீரோட்டத்தில் இணையக் கூடியதாகவும், அபிவிருத்தியில் வெற்றிகாணவும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அரசியல் ஸ்தீரத்தன்மையை பேணவும் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவம் முக்கியமானது.

இவ்வாறான விடயங்களை தொகுத்து நோக்கும் போது, ஒரு கட்சி தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, அரசியல் அதிகாரத்தினை பெற்று, தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, ஆட்சியினை நிலை நாட்டுவது என்பது அக்கட்சியின் தலைமைத்துவத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனூடாக தலைமைத்துவத்தின் தன்மையிலேயே ஒரு கட்சியின் வெற்றி தங்கியுள்ளது என்பது தெளிவாகுகின்றது.