ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கண்டன பிரேரணைகள் இலங்கையின் இராஜதந்திர உறவு முறையில் எற்படுத்திய தாக்கம்.
இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும்
அதன் அமைவிடம் என்பது புவியியல் அரசியலில் மிகவும் முக்கியமானதொன்றாகும். இரண்டாம்
உலகப்போரினைத் தொடர்ந்தும், பின்னர் ஏற்பட்ட பனிப்போரின் முடிவுடனும் பொருளாதார
அரசியல் என்பது பலமானதாக மாற்றமடையத் தொடங்கியது. இதன்போது இந்துசமூத்திரமானது பல
நாடுகளுக்கு அவசியப்படும் ஒரு இடமாக மாற்றமடைந்தது. இதனால் உலக அரசியல்
நகர்வுகளானது இந்து சமுத்திரத்தின்பால் நகரத்தொடங்கியது எனலாம். இதன்போது சர்வதேச
அரசியல் வலைப்பின்னலுக்குள் உள்ளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் தமது இராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக்
கொள்கையினை பலப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
'வெளியுறவும் இராஜதந்திரமும் சர்வதேச அரசியலை நடாத்திச்
செல்லும் இரு சக்கரங்கள்' என்றார் பேராசிரியர் மொடெல்லஸ்கி அவர்கள். ஓவ்வொரு
தேசிய அரசிற்கும் தனிப்பட்ட வெளியுறவுக்கொள்கைகள் உள்ளன. இந்த வெளியுறவுக்
கொள்கைகளை இராஜதந்திர வழிமுறைகளில் அந்தந்த நாடுகள் நடத்திச் செல்கின்றன. ஒரு
நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அந்த அரசாங்கத்தின் பிரத்தியேகக்
கொள்கையாகும். இது நாட்டின் தேசிய நலனை அடிப்படையாகக்கொண்டு காணப்படும்.
இலங்கை அரசாங்கம் பயன்படுத்திய மிகவும்
கவனத்துடன் உருவாக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை இறுதியுத்தத்தில் வெற்றியடைவதற்கு
பெரும் பங்காற்றியுள்ளதுடன் அரசியல் சாணக்கியம் புத்திசாலிதனமான சர்வதேச
இராஜதந்திரம் என்பன தமிழீழ விடுதலைப்புலிகளை பூரணமாக அழித்தொழிப்பதற்குப்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இறுதியுத்தக்காலத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல்
தொடர்பான இலங்கையின் புரிந்துணர்வு பரந்துப்பட்டதாகக் காணப்பட்டதுடன், வெளியுறவுக்
கொள்கையின் இராஜதந்திர திறன்களை விருத்தி செய்வதாகவும் இருந்தது. ஆயினும், யுத்தத்தின்
பின்னர் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றை
யுத்ததக்காலத்தில் இலங்கை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதுடன் அதற்கான
பொறுப்பினை ஏற்குமாறும் இலங்கை நிர்பந்திக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சபையின் மனித
உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மேற்படி குற்றச்சாட்டுக்களைத்
தனது இராஜதந்திர திறன் மூலம் தோற்கடிப்பதில் இலங்கை பெரும் தோல்வியைச் சந்தித்து
வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.
அடுத்ததாக, ஐக்கியநாடுகள்
சபையில் இலங்கைக்கு எதிராக கண்டனப்பிரேரணைகள் தோன்றுவதற்கான பின்புலத்தினை நாம்
வதானிக்கவேண்டும். அதனடிப்படையில் யுத்த குற்றங்கள், மனித, சிறுவர் உரிமை மீறல்கள், யுத்த குற்றங்களுக்கான சுதந்திர விசாரணையின்மை, மேற்கு
நாடுகளின் தேசிய நலன் என்ப இதற்கான பின்புலமாக அமைந்திருந்தன. இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்களை
பயன்படுத்துவதில்லை என்;று அறிவித்து யுத்த சூனிய பிரதேசங்களை உருவாக்கியது. பின்னர்
அவற்றின் மீது செல் தாக்குதல்களை மேற்கொண்டது. ஐக்கியநாடுகளின் கேந்திரமையம், உணவு
வினியோகப்பாதை, காயமுற்றோரை
ஏற்றிச்செல்லும் பாதை, வைத்தியசாலை என்பவற்றிக்கு அருகிலும் செல் தாக்குதல்களை
நடாத்தியது. தப்பி வந்தவர்களையும் சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொண்டனர். வெள்ளை
கொடியுடனும் வந்தவர்களையும் கொன்றனர். யுத்தத்தின் பின்னர் பெண்கள் பாலியல்
துன்புருத்தலுக்கும் சிறுவர்கள் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டனர் என்றும்
இலங்கை மீது குற்றங்கள் சுமத்தப்பட்டன. மேலும், காணமல் போனோர் பற்றிய விசாரணைகளும் நடைபெறவில்லை. இது
ஐ.நா. மனிதஉரிமை பேரவையின் விசாரணைக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இவற்றுடன் செனல் 4
தொலைக்காட்சியினால் ஆக்கப்பட்ட இலங்கை யுத்தகளம் தொடர்பான ஆவணப்படங்களும் சர்வதேச
அளவில் பேசப்பட்டது. இதில் சரணடைந்தவர்களை கை, கால் கட்டிய நிலையில் சுட்டுக்கொள்வது, கொன்றவர்களை
ஒரே இடத்தில் நிர்வாணநிலையில் போட்டு வைத்தமை என்பனவும் சர்வதேசத்தின் கவனத்தை
ஈர்த்தது.
இவை அனைத்திற்கும் மேலாக, இலங்கை
மீது சர்வதேசத்தின் பார்வை இருந்துக்கொண்டே இருந்தது. ஏன் இவ்வாறு கூறுகின்றேன்
என்றால், பொதுவாக
யுத்தம் நடைபெற்ற நாடுகள் பலவற்றில் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாகவே இடம்பெற்றைமை
அனைத்துலகும் அறிந்ததொரு விடயமாகும். எனினும் இலங்கை மீது தமது கரிசனையினை சர்வதேச
நாடுகள் ஐக்கியநாடுகள் சபையின் மூலமும், தனியாகவும் காட்டுவதற்கு அவற்றின் பிரதான தேசிய நலனே
காரணம் எனலாம். யுத்தம் முடிவடைந்ததும் இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் தமது கொள்கையை
சீனா சார்பானதாக வகுத்துக்கொண்டு மேற்கு நாடுகளுடன் ஒரு மேலெழுந்த வாரியான
இராஜதந்திர போக்கை கடைப்பிடிக்க முற்பட்டனர். யுத்தமற்ற இலங்கையை எவ்வாறாயினும்
தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் தமது
ஆதிக்கத்தினை செலுத்த முற்பட்ட மேற்கு நாடுகளுக்கு, இது பலத்த சவாலாக அமைந்தது. இதனால் யுத்த குற்ற, மனித
உரிமை விசாரணை என்ற வாசலினூடாக இலங்கைக்கு பிரவேசிக்க மேற்கு நாடுகள் தீர்மானித்தன
இதன் விளைவே கண்டன பிரேரணைகள் எனலாம்.
முதல் நடவடிக்கையாக ஐக்கியநாடுகள்
சபையின் செயலாளர் பான்கீ மூன், இந்தோனேசிய சட்டமா அதிபர் மர்சூகி தருஸ்மன் (ஆயசணரமi னுயசரளஅயn) தலைமையிலான
தென்னாபிரிக்க (லுயளஅin ளழழமய) அமெரிக்க (ளுவநஎயn சுயவநெச) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழுவை
நியமித்து இலங்கையின் யுத்த குற்றங்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு
வேண்டிக்கொண்டார். இவர்கள் 2010.08.16ம் திகதி தமது பணிகளை ஆரம்பித்தனர். இவர்களின் அறிக்கை 2011.04.12ம்
திகதி ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட்;டது.
அதே தினம் அதன் பிரதியொன்று இலங்கை அரசாங்கத்திற்கும் கையளிக்கப்பட்டது. இது
தருஸ்மன் அறிக்கையென அழைக்கப்படுகின்றது.
யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை
அரசாங்கம் மீள் கட்டுமானம், புனர்வாழ்வு, நல்லிணக்கம் என்பவைகளுடாக தேசிய ஐக்கியத்தினையும், நல்லாட்சியினையும்
ஏற்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதுடன், கடந்தகால துன்பங்களையும், சோகங்களையும் மறந்து எதிர்கால இலங்கையை
கட்டியெழுப்பிக்கொண்டிருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் இலங்கையின் வெளிவிவகார
அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் நிபுனர்குழுவின் அறிக்கையினை பின்வருமாறு குறிப்பிட்டார்.
'இது
ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கையல்ல, செயலாளரினால் தனிப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்டதாகும்.
இது உண்மைகளை திரட்டும் அமைப்பல்ல, இது சிங்கள தமிழரிடையே பிரிநிலையை ஏற்படுத்தும்' என்று
கூறினார்.
இலங்கையின் யுத்த பிரதேசத்தில்
நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை உடனயாக ஐக்கியநாடுகள் சபையின்
மனித உரிமை பேரவையில் கலந்துரையாட எடுக்கப்ட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. 2009ம்
ஆண்டு செக்கோஸ்லாவாக்கியாவினை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக மனித உரிமைகளின்
பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த முதல் பிரேரணையினை இந்தியா எதிர்த்து இலங்கைக்கு
ஆதரவு வழங்கி இலங்கையினை பாதகாத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் 2012ம்
ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் விவாதிப்பதற்கான பொறிமுறையினை அமெரிக்கா
உருவாக்கியது. நல்லிணக்க ஆணைக்குழவின் அறிக்கையினையும், நிபுணர்குழவின்
அறிக்கையினையும் பயன்படுத்தி மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள்
அமெரிக்கா கொண்டுவந்தது. இதன்வழி இலங்கையின் நல்லிணக்கத்தினை முன்னேற்றுவதும்
பொறுப்புக்கூறுதலும் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பயனுடைய சிபாரிசுகளை
நடைமுறைப்படுத்துமாறும் பொறுத்தமான சட்டக்கட்டமைப்புகளை நிறைவேற்றுவதற்குத்
தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும், எல்லா இலங்கையருக்குமான நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், சமத்துவம், நீதி
போன்றவற்றை உறுதிப்படுத்தக்கூடிய அர்பணிப்புள்ள நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான
செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
ஐக்கியநாடுகள் சபையின் மனித
உரிமைகள் பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளுள் 24 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 15
நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குக்கொள்ள வில்லை. இதில்
பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமை குறிப்பிடதக்கது. சீனா, ரஷ்யா
என்பன எதிராக வாக்களித்தன. இவ்வாறு இந்நாடுகள் செயற்பட்டமைக்கான உள் நோக்கங்கள்
ஆராயப்பட வேண்டியவை. ஈரான், வடகொரியா, கியூபா, வெனிசூலா போன்ற நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
இவற்றின் நோக்கம் இலங்கைக்கு ஆதரவு என்பதற்கும் அப்பால் அமெரிக்க எதிர்ப்பு வாதம்
என்பதே முக்கியமானது. இதனால் அமெரிக்கா கொண்டுவரும் எத்தீர்மானத்திற்கும் எதிராகச்
செயற்படுகின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இவ்வுறவு இலங்கைக்குக்
காணப்படுகின்றது.
2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ஆம்
திகதி ஜேனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரில் இணை அனுசரணை நாடுகளாகிய அஸ்த்திரியா, கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், இத்தாலி, நோர்வே, பிரித்தானியா
ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டாவது தடவையும்
யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணையினைச் சமர்பித்து நிறைவேற்றிக் கொண்டது.
இலங்கைக்கு எதிரான பிரேரணையில் சில திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா
முயற்சித்தாலும், ஐக்கிய
அமெரிக்காவின் ஏனைய நட்பு நாடுகளால் இந்தியாவின் இம்முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக இருபத்தைந்து நாடுகளும். எதிராக
பதின்மூன்று நாடுகளும் வாக்களித்ததுடன், எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல்
விலகியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணைக்கு ஐக்கிய
நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆதரவாக அதிக வாக்குகள் கிடைக்கும் என பலராலும்
எதிர்வு கூறப்பட்டதுடன்
எனவே 2012 ஆம்
ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட
தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த
இலங்கை இந்தியாவிற்கு இது தொடர்பாக எதிர்காலத்தில் இருக்க கூடிய இடர்பாடுகளை
மீள்பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும். மறுபக்கத்தில் 2014 ஆம்
ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள இந்திய அரசாங்கம் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள
யுத்தக் குற்றச்சாட்டுக்களால் தேசிய மட்டத்தில் தனக்கு ஏற்படக் கூடிய
அசௌகரியங்களைக் கருத்தில் எடுத்தே செயற்படும் என்ற உண்மையினை இலங்கை கொள்கை
வகுப்பாளர்கள் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாது விட்டமை எல்லா
இராஜதந்திரத் தோல்விகளுக்கும் காரணமாகிவிட்டது.
பிரேரணைகளின் பின்னர் இலங்கை
வெளியுறவில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் பின்வருமாறு நோக்கலாம். இன்றைய இலங்கையின்
வெளிநாட்டுக் கொள்கை சீனா, ரஷ்யா, ஆபிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பிச்
செயற்படுகின்றமையினைக் காணலாம். இதற்கு இறுதி யுத்த காலப்பகுதியில் இவ்நாடுகளின்
உதவியும், இன்றைய
பொருளாதார உதவியும் காரணமாக அமையலாம். உத்தியோக பூர்வமாக சீனா சென்ற மகிந்த (7வது
தடைவ) 'இலங்கை
சீனாவின் மூலோபாய பங்காளி நாடாக மாறியுள்ளது' என சீன துணை ஜனாதிபதியினால் புகழப்பட்டது. 2013
மாசி மதமளவில் ளுவ. Pநவநசளடிரசப இல் நடைபெற்ற அனைத்துலக பொருளாதார ஒன்றுக்
கூடலில் ரஷ்ய அரச தலைவர் னுஅவைசல ஆநனநெனநஎ மற்றும் சீன தலைவர் அமைச்சர் ர்ர துiவெயழ
ஆகியொரின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உகண்டாவிற்கு உத்தியோக பூர்வமாகச்
சென்ற ஜனாதிபதியும் பு.டு பீரிஸ்சும் 'மேற்கு
நாடுகளினால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிட்டுவதில்லை ஆனால் ஆபிரிக்க நாடுகள்
இலங்கை மீது மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றது. இந்நாடுகளுடனான உறவினை நீடிப்பதே
சிறந்ததது' என கூறியிருந்தனர். இந்நாடுகள் ஐக்கியநாடுகள் சபையில்
இலங்கைக்கு எதிரான பிரேரணையில் ஆதரவளித்தது என்பது குறிப்பிடதக்கது. இவற்றோடு 23.09.2013 அன்று ஐக்கிய நாடுகள் சபையின்
பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளச் சென்ற இலங்கை ஜனாதிபதி
நியுசர்லாந்து, ஈரான், ஈராக்
ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளை சந்தித்து பேசியுள்ளமையும் குறிப்பிடலாம். அங்கு இந்திய பிரதமரை சந்திக்க வில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
ஈரான், லிபியா, சீனா, பாகிஸ்தான், வடகொரியா, ரஷ்யா, ஆகிய
நாடுகள் உடனான உறவினை இலங்கை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றது. 'எமது
சர்வதேச பங்காளிகளுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியமையால்
அண்மைக்கால வெளிநாட்டுக் கொள்கை சரிவடைந்துள்ளது' என திஸ்ஸ ஜயதிலக்க கூறுகின்றார். 'வெளியுறவு
கொள்கையில் முதலீடு செய்வது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒரு காப்புறுதியாகும்' எனக்
குறிப்பிடும் அமெரிக்க செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹம் பிரதமர் சிறிமாவோ
பண்டாரநாயாக்காவின் வெளிநாட்டுக் கொள்கை முன்னெடுத்திருந்த சமனிலை தொடர்பான
கோட்பாடு இன்றைய இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக் கொள்கையில் இல்லாமை தெளிவாகத்
தெரிகின்றது. அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் எமது வெளிநாட்டு கொள்கை குறித்து
தேர்ச்சி மிக்க சமநிலையை மீள நிறுவிய போதிலும் அவரை பின்தொடர்ந்த மனித ஜன்துக்கள் 'யதார்த்தவாத' சமநிலையற்ற
தன்மைக்காக அதனைக் கைவிட்டனர்' என்பதும் குறிப்பிடதக்கது. இவ்வாறானதொரு ராஜதந்திர
வெளிவுறவுக் கொள்கையின் தோல்வியினாலேயே இலங்கை இவ்வாறான கண்டன பிரேரணைகளை
தொடர்ந்து சந்தித்து வருகின்றது என்றும் ஒரு சிலர் குறிப்பிடகின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் முன்னால் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்
இருந்திருந்தால் நிலமையை சமாளித்திருப்பார் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
ஐக்கியதேசிய கட்சியின்
பொதுச்செயலாளர் கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் 'இலங்கையில் வெளியுறவுக் கொள்கை என்ற ஒன்று இல்லை இதனால்
இலங்கை ஒருபக்கச்சார்பாக செல்கின்றது. இது
இலங்கையின் உள், வெளி
இறைமைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். (திஸ்ஸ அத்தனாயக்க) இதே வேளை
இலங்கையானது சீனா மற்றும் பாகிஸ்தானுடன் பூகோள அரசியல் உறவினை பலப்படுத்தி
வருகின்ற அதே வேளை நாட்டின் பாரிய அபிவிருத்தி திட்டங்களை சீனாவுடன் இணைந்து
மேற்கொண்ட வருகின்றது. இந்த நகர்வானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
இலங்கை தன்னை நியாயப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் என்பதே உண்மையாகும்' என
ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிடுகின்றது.
இன்று அரபுலக நாடுகள்
முதலாலித்துவத்திற்கு எதிர்ப்பு தன்மையினைக் கொண்டுள்ளது. இவைகளுடன் சர்வதேச
ரீதியில் இராஜதந்திர உறவகளைப்பேண இன்றைய ஜனாதிபதி விரும்புகின்றார். இதற்காகவே
அவரது மத்திய கிழக்கு நாடுகளின் பயணம் அமைந்து காணப்படுகின்றது. செப்படம்பர் 2013ல்
பாதுகாப்பு சபையில் உரை நிகழ்த்த நிவ்யோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியை
சந்தித்தப் பின்னர் 'அல்ஜசீரா' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 'நாம்
அரபுலகினூடாக நட்புறவை வளர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் சில நாடுகள் ஏனைய
நாடுகள் மீது காவல்துறை செய்யும் வேலையை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்' ஏனெனில் இலங்கையை பொறுத்தவரையில் சர்வதேச ரீதியில்
பொருளாதார முதலாலித்துவ நாடுகளின் எதிர்ப்புத்தன்மையினையும் யுத்த
குற்றத்திலிருந்து விடுபடவும் ஐக்கிய நாடுகள் சபையில் கூடுதலான நாடுகளின் ஒத்துiழைப்பு
கட்டாயமானது.
யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெற்ற
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கூடுதலான நாடுகள் இலங்கை மீது
வெறுப்பைக்கொண்டுள்ளன. தாம் சார்ந்த நலனையும் இறைமையினையும் பாதுகாக்க வீற்றோ பவர்
உள்ள சீனா, ரஷ்யாவுடன்
இணைய வேண்டியது இலங்கையின் கட்டாயத் தேவையாகியுள்ளது. இலங்கைக்கு எதிரான சர்வதேச
விசாரணையினை தடுக்கும் வல்லமை சீனா, ரஷ்யா போன்ற தமது நேசநாடுகளுடன் இருக்கின்றது என்பதை
இலங்கை நன்கு அறிந்து வைத்துள்ளது. இதனால் இவைகளின் பின்னால் ஒழிந்து நிற்க
வேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு காணப்படுகின்றது. அதாவது 'இலங்கையை
சர்வதேச ரீதியில் சிக்க வைத்து சில நிபந்தனைகளின் அடிப்படையில் தம்வசப்படுத்திக்
கொள்ள மேற்குலக நாடுகள் சில முயற்சிக்கின்றன. மறுபக்கத்தில் தமது அதிகாரத்திற்கு
பாத்திரமாக சுற்றிவிட சீனா, ரஷ்யா மற்றும் அவற்றுக்கு சார்பான நாடுகள்
முயற்சிக்கின்றன' இவை
இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என்றே சிலர் கூறுகின்றளர்.
நவநீதம் பிள்ளையின் காரசாரமான
கருத்துக்களுக்கு மத்தியிலும் ஐக்கியநாடுகள் சபையுடன் இலங்கை அரசாங்கம் சவால்
விடுவதுடன், மோதலுக்கும்
தயாராகிறது. ஐக்கியநாடுகள் சபையுடன் முடிந்தளவிற்கு நல்லுணர்வையும் தேவையான
இடத்தில் சமரசத்தினையும், விட்டுக்கொடுப்பினையும் செய்துக்கொள்ள வேண்டிய
தேவையுள்ள இத்தருனத்தில் இவ்வாறு நேருக்கு நேர் மோதுவது புத்திசாலிதனமன
இராஜதந்திரமாக இருக்க முடியாது. மேலும், புலம்பெயர் தமிழர்களை புலிகளின் எச்சமாக கருத கூடாது.
இது சிறிய வட்டத்திற்குள் இருந்து பார்க்கின்ற ஒரு பார்வையாகவே தென் படுகின்றது.
ஏனெனில், பிரேரணையின்
போது, பிறேசில், அர்ஜன்ரீனா, பேரூ, உருகுவே
பொன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டன. இங்குடி புலம்பெயர் தமிழர்கள் இல்லை.
எனவே இதனை இலங்கை அரசாங்கம் பகுப்பாய்விற்கு உட்படத்த வேண்டும்.
இலங்கை தனது நண்பர்களை இழந்து
வருகிறது. குறிப்பாக, கனடா, இந்தியா போன்ற நாடுகளை கறிப்பிடலாம். பொருளாதார
விடயங்களில் பின்னடைவினை சந்தித்து வருகின்றது. யுத்த குற்றங்களுக்குப் பின்னர்
இலங்கைக்கான ஜீ.எஸ்.பி வரிசலுகை நிறுத்தப்பட்டது. இந்தியாவின் உதவிகள் பெருமளவு
குறைக்கப்பட்டன. நடந்து முடிந்த பொது நலவாய மாநாட்டிற்கும் பல எதிர்ப்புகளை இலங்கை
சந்தித்ததோடு பல நாடுகளின் பங்கு பற்றலையும் இழந்தது. இந்நிலையில் பிரித்தானியா
சில பரிந்துரைகளை கறிப்பிட்டு இலங்கை அரசாங்கம் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில் 2014ம்
ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான
கடுமையான பிரேரணைகள் கொண்டுவரப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் தம்மை
எதிர்க்கும் நாடுகளிடம் இலங்கை மேற்கொண்டு வந்த உறவுமல்ல பகையுமல்ல என்ற
இராஜதந்திர உறவு தோல்வி கண்டுள்ளது என்றே கூறவேண்டும்.
எனவே. இலங்கையானது யுத்தத்திற்கு
முன்னர் பல நாடுகளின் உதவியினைப் பெற்று யுத்தத்தில் வெற்றிகண்ட போதும்
யுத்தத்தின் பின்னர் தாம் வகுத்துக்கொண்ட இராஜதந்திர வெளியுறவுக்கொள்கையில் சீர்
இன்மையாகக் காணப்படுகின்றது. இதனால் சர்வதேசத்தின் மத்தியில் தான் ஒரு தோல்வி கண்ட
நாடாக ஆக்கப்ட்டடு வருவதை இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.
இதன் ஒரு முனையாகவே பொதுநலவாய மாநாட்டை சில நாடுகள் பகிஸ்கரித்தமையை
குறிப்பிடலாம். இதன் மூலம் பார்க்கும் போது இலங்கை தனக்கான ஆதரவினை பெறும்
நோக்கில் சிறிய நாடுகளையும் நாடிச்செல்வதை அவதானிக்கலாம். இவற்றில் இருந்து இலங்கை
மீள வேண்டுமாயின் கை;கிய நாடகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட
கண்டன பிரேரணைகளின் படி, கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே சிறந்தததாகும். இது இலங்கை, தனக்குத்
தானே உருவாக்கிக்கொண்ட வலை எனலாம்.
இவ்வாறான விடயங்களே மனித உரிமை பேரவையின் கண்டன பிரேரணைகள் இலங்கையின்
இரஜதந்திரத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்று கூறலாம்.