“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

PS1

நல்லாட்சியின் தற்கால தேவையும், முக்கியத்துவமும். 

கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட வருடார்ந்த சஞ்சிகையான வெளி 2012 வெளியான கட்டுரை.
 

நல்லாட்சித்தத்துவத்தின் ஆரம்பக்கால நிலை, அறிஞர்கள் மத்தியில் அதன் செல்வாக்கு, பண்புகள், சிறபம்சங்கள் போன்றன மற்றுமன்றி நல்லாட்சியின் தற்கால முக்கியத்துவம், வலியுறுத்துவதற்கான காரணங்கள், நவீன
ஜனநாயக முறையில் இதன் செல்வாக்கு, மூன்றாம் உலக நாடுகளில் இதன் நிலைபோன்ற விடயங்களை தொகுத்துப் பார்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்றைய நவீன ஜனநாயக உலகில் பல நாடுகள், சர்வதேச நிறுவனங்கள், பொதுநல அமைப்புக்கள் போன்ற பல ஸ்தாபனங்களில் பேசப்படுவதும், அபிவிருத்தி, இறையாண்மை போன்ற கருத்துகளுக்கு முக்கியத்துவமாகவும், ஜனநாயகத்தின் மற்றுமோரு பரிணாமமாகவும் பேசப்பட்டு வருகின்ற ஓர் எண்ணக் கருவே நல்லாட்சியாகும். ஆட்சிப் பற்றிய எண்ணக்கருவானது புதிதல்ல. இது மனித நாகரிகத்தின் வெளிப்பாடு. தீர்மானம் எடுத்தல், நடைமுறைப்படுத்தல் போன்ற செயற்பாடே ஆட்சி என எளிமையாக கூறலாம். இதே அடிப்படையில் வளர்ச்சிப் பெற்ற ஒரு சிந்தனையே நல்லாட்சி. இதனை ஆங்கிலத்தில் 'புழழன புழஎநசயெnஉந' என்று அழைக்கலாம். இதன் பொருள் 'மக்கள் நலன் பேணும் நல்ல் அரசு' என்பதாகும். மக்கள்; உரிமைகள்,சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து ஓர் அரசின் கீழ்வாழும் போது, அவ்வரசானது அம்மக்களது தேவைகளை பூர்த்தி செய்யுமிடத்து அம்மக்களின்; உள்ளத்தில் தோன்றும் ஓர் எண்ணமே நல்லாட்சியாகும்.
ஆரம்பக்கால அறிஞர்களும் நல்லாட்சிப் பற்றி சிந்தித்துள்ளனர். 'அறிவடையோர்,பொதுநலனை நோக்காக கொண்டோர் ஆளும்போது அவ்வாளப்படும் சமூகத்தில் நல்லாட்சி நிலவும்' என்ற பிளேட்டோ கருதினார். அரிஸ்டோடில் 'நடுத்தர வர்க்கத்தினர் ஆளும்பொதே நல்லாட்சி நிலவ முடியும் ஏனெனில் அவர்களே ஐக்கியத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்' என்று கருதியுள்ளார். ஓராட்சி நல்லாட்சியாக அமைய வேண்டுமாயின் ஆளுபவன் பலம்மிக்கவனாகவும், அதிகாரம் கொண்டவனாகவும், வீரம். தந்திரம் போன்றன உடையவனாக இருக்க வேண்டும் என மாக்கியாவல்லி கருதியிருந்தார். அதன்படி நல்லாட்சி பழமையானதொன்று. ஓர் அரசு நிலைத்திருக்க ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் சுமுகமான உறவு காணப்பட வேண்டும் இதனை வழங்குவதே நல்லாட்சி.

நல்லாட்சியின் பிரதான அம்சங்கள் 

நல்லாட்சியின் பிரதான அம்சமாக அல்லது பண்பாக பன்வருவன காணப்படுகின்றன. இவை காணப்படுமிடத்தே நல்லாட்சி நிலவுவதை அறியக்கூடியதாக இருக்கும்.
1. பங்கேற்பு
2. சட்வாட்சி நிலவுதல்
3. பொறுப்புக் கூறுதல்
4. வெளிப்பட தன்மை
5. துலங்கும் தன்மை
6. செயற்திறன்,வினைத்திறன்
7. நியாயமான அல்லது பாரபட்சமற்றத்தன்மை.
8. நீதித்துறை சுதந்திரம்
பங்கேற்பு:- ஒரு நாட்டின் எல்லா சமூகங்களையும் இணைத்தவகையில் தீர்மானம் எடுத்தல், கொள்கை உருவாக்கல் இடம்பெற வேண்டும். ஆண பெண்,சிறுபான்மை பெரும்பான்மை போன்ற பாகுபாடுகள் காணப்படக் கூடாது என்பதோடு, சிவில் சேவை, அனைத்து அரசியல் கட்சிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றையும் கொள்கை உருவாக்கத்தில் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

சட்டவாட்சி நிலவுதல்:- 'சட்டத்தின் முன் அனைவரும் சமன்' என்பதையெ சட்டவாட்சி உணர்துகின்றது. இதனை முன்வைத்தவர் பேராசிரியர் டைசியாவாரர். ஆள்வோர் ஆளப்படுவோர் அனைவரையும் சமனாக கருதுவதே இதன் கொள்கை. நல்லாட்சி நிலவுவதில் இவ்சட்டவாட்சி முக்கிமானதொன்றாகும். 

பொறுப்பு கூறுதல்:- ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இருவரும் தமக்குத் தரப்பட்ட பகுதியில் பொருறுப்புக் கூறக்கூடியவ்களாக இருக்க வேண்டும். குறிப்பாக இன்றைய பிரதிநிதிதவ ஜனநாயகத்தில் ஆள்வோர் ஆளப்படுவோருக்கு பொறுப்புக் கூறுதல் கட்டாயமாகும். அப்போதுதான் சுமுகமான உறவு காணப்படும்.
வெளிப்பட தன்மை:- ஒரு ஆட்சிப் பகுதியில் நிலவும் சகல விடயங்களும் சமூகத்திற்கு தெளிவாக விளங்க வேண்டும். இதில் அரச நலன்கருதி செய்யப்படும் இராஜதந்திர செயற்பாடகள் விதிவிலக்கானவை. தவிர சட்டவாக்கம், பொருளாதார முடிவுகள், அறிக்கைகள், ஒப்பந்தங்கள், திட்ட மதிப்பாய்வுகள் போன் அனைத்தும் சமூகத்தின் பார்வைக்கு கொண்டுவரப்பட வேண்டும். 

துலங்கும் தன்மை:- சமூகத்தில் காணப்படும் அனைவரும் செயற்பட வேண்டும். ஒரு சாராரேனும் ஒதக்கி வைக்கப்படக் கூடாது. மக்களின் தேவைகளையுணர்ந்து ஆடசியாளர்கள் செயற்பட வேண்டும். 

செற்திறன்,வினைத்திறன்:- வளங்கள் சீரான முறையில் பங்கிடப்பட்டு அதன் மூலம் சிறந்த பயனை அடைவதையே இது குறிக்கின்றது. அருமையாகக் கிடைக்கும் வளங்கள் வீண்விரயமாக்கப்படாது, அவை அனைவருக்கும் சமமான முறையில் பங்கிடப் படுவதையே குறிக்கின்றது.

பாரபட்சமற்றத் தன்மை:- ஓர் அரசின் கீழ் வாழும் மக்கள் அனைவரும் ஒரேபார்வையின் கீழ் பார்க்கப்படுதல் வேண்டும். இன, மொழி, மத பாகுபாடின்றி சட்டத்தின் முன், வளப்பங்கீட்டின் போது அனைவரும் சமனாக நோக்கப்படுதல் வேண்டும். 

நீதித்துறை சுதந்திரம்:- நீதித் துறையானது சட்ட, நிர்வாக துறைகளின் தலையீடு இன்ற காணப்படுதல் வேண்டும். இதில் நீதிபதிகளின் நியமனம்,சேவை பாதுகாப்பு, சம்பளம் போன்றன அரசியல் தலையீடுகள் இன்றி காணப்படுதல்.
இவ்வாறான பண்புகளுடன் அரசியல் யாப்பு, மனித உரிமைகள், சிவில் சேவைகள் போன்றனவும் காணப்படுதல் வேண்டும். இன்றைய நாடுகள் அரசியல் யாப்பை முகிகியமனதொன்றாக கருதகின்றன. அதனூடக மனித உரிமைகளை பாதுகாத்தல் முக்கிமானதொன்றாகும். மேலும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாப்பதற்கு அரசிற்கு உதவியாக சிவில் சேவைகள் காணப்படுகின்றன. எனவே இவைகளும் நல்லாட்சியின் பண்புகளாக கருதப்படுகின்றன.

நல்லாட்சியின் தற்கால நோக்கு

நல்லாட்சி எனற எண்ணக்கருவானது அரம்பக் காலம் தொட்டு நிலவி வந்தது என்றாலும். 1980களின் பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. குறிப்பா மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டுவந்த அரசியல் ஸ்தீரமின்மை, போர்ச்சூழல் பொன்ற வற்றின் காரணமாக ஐ.நா சபை தனது அபிவிருத்தி திட்டத்தில் நல்லாட்சி பற்றிய எண்ணக்கருவை வெளியிட்டது. இதன் பின்னர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நஷனல் போன்ற நிறவனங்களும், அபிவிருத்தியை நோக்காக கொண்ட நிறுவனங்களும் நல்லாட்சி எண்ணக்கருவை முன்னெடுத்தன. 

ஜனநாயகமும் நல்லாட்சியம் 

ஜனநாயகத்தின் இன்னுமொரு பரிணாமமாகவே நல்லாட்சியை கருதல் வேண்டும். ஜனநாயக பண்புகள் நிலவும் ஒருநாட்டில் அல்லது சமூகத்திலேயே நல்லாட்சி நிலவ முடியும். ஜனநாயகம் சிறப்புற்று வளங்குமாயின் அங்கு இயற்கையாகவே நல்லாட்சி நிலவும். இருப்பினும் இன்றைய ஜனநாயகமானது பிரதிநிதித்துவ ஜனநாயகமாக(சுநிசநளநவெயவiஎந னுநஅழஉசயஉல) காணப்படுவதால் ஆடசிபீடம் ஏறும் ஆட்சியாளர்கள் பொது நலனை கருத்தில் கொண்டு செயற்படுதல் வேண்டும். இவ்வாறு இல்லாதவிடத்து அங்கு நல்லாட்சி நிலவ முடியாது. ஜனநாயக பண்புகள் பேணப்படும் போதுதான் நல்லாட்சித் தத்துவம் மேன்மையடைகின்றது. இன்று பல அரசுகளில் ஜனநாயகம் என்பது கோட்பாட்டு ரீதியாகவே காணப்படுகின்றது. இது சிறப்பான நல்லாட்சிக்கு வழிவகக்காது. இதன்படி எல்லா நாடகளும் அல்லது அரசுகளும் ஜனநாயக அரசுகள் என்று அழைக்கப்பட்டாலும், அங்கு நல்லாட்சி நிலவுகின்றதா என்பது சந்தேகமே. 

நல்லாட்சியை பாதிக்கும் காரணிகள்

1. ஒரு இடத்தில் அதிகாரமானது குவிந்தக் காணப்படுமாயின் அங்கு நல்லாட்சி நிலவுவது முடியாது. இதன்பொது அதிகாரம் உரைந்திருக்கும் நபரோ,குழுவோ சர்வாதிகாரப் போக்கைப் பின்பற்றலாம். இதன் போது மக்கள் நலன் பேணப்பட மாட்டாது.
2. ஆடசியில் காணப்படும் அரசாங்கமோ ஆட்சியாளரோ செயற்றிறன் குன்றியவர்களாக காணப்படுமிடத்து அங்கு ஆட்சியானது சிறப்புராது இதனால் மக்கள் நலன் ஓம்பப்பட மாட்டாது.
3. அரசின் கொள்கை தீர்மானங்கள் எடுப்பதிலிருந்து மக்கள் புறந்தல்லப் பட்டால் அங்கு மக்களுக்கான கொள்கைகள் முறையாக வகுக்கப்படாமல் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு விடுவர்.
4. ஓர் அரசில் லஞ்ச ஊழல் அதிகரித்தால் அங்கு வாழும் மக்களில் அதிகாரம், பலம் கொண்டவர்கள் மட்டுமே நன்மையடைய முடியும். பலவீனமானவர்கள் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் விடுவார்கள். இவ்வாரன நிலை நல்லாட்சியை சீர்குலைக்கக்கூடியது.
5. பிரதிநிதிதுவ ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்டு சட்டமன்றுக்கு அனுப்பப்படும் பிரதிநிதிகள் மக்களுக்கு பொறுப்பு சொல்லாது விடம்போது, ஆட்சி நிலையில் மக்களுக்கு விருப்பம் இல்லாது போய்விடும்.
இவ்வாரான காரணிகளுடன் ஜனநாயகத்தன்மை குன்றிய காரணிகளும் நல்லாட்சியை பாதிப்பதாக அமையும்.
   

இன்றைய உலகில் நல்லாட்சி 

மேற்குத்தேச ஜனநாயக நாடுகளை பொறுத்தவரை அவற்றில் ஓரளவிற்கு நல்லாட்சி தத்துவம் பின்பற்றப்படுகின்றது என்ற கருத்தே முதன்மை பெறுகின்றது. இதற்கான முக்கிய காரணம் மக்களின் அறிவுத் தன்மையே. சிறந்த அரசியல் அறிவுடைய மக்கள் தமது கொள்கை கொட்பாடுகளை முறையாக பின்பற்றகின்றமையே எனலாம். இதனோடு ஆட்சியாளர்களும் தமது கடமையை முறையாக மேற்கொள்கின்றனர். மேலும் சிறப்பான ஜனநாயக நுட்ப முறைகளும், வளர்ச்சியடைந்த பொருளாதாரப் போக்கும் இதற்கு காரணம் எனலாம்.
மூன்றாம் உலக நாடுகளை பொருத்தமட்டில் நல்லாட்சி என்பது அடையப்பட வேண்டிய ஒர் எண்ணக்கருவாகவே காணப்படுகின்றது. இந்நாடுகள் பொதுவாக பல அரசியல் பொருளாதார சிக்கல்களையும் அரசியல் ரீதியாக அறிவுக்குன்றிய மக்களையும் கொண்டு காணப்படுகின்றமையே காரணம். மேலும் இங்கு அனேகமான நாடுகள் காலணித்துவத்திற்கு உட்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதனால் ஒழுங்கான பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை பேண முடியாதுள்ளமை ஒரு காரணம் எனலாம். இதனோடு சனத்தொகை அதிகரிப்பு, தனிநபர் வருமானம் குறைவு, முறையான வளப்பங்கீடு இன்மை, மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு, போதிய வளங்களை கொண்டிருக்காமை பொன்றனவும் பிரதான காரணங்களாக அமைகின்றன.
இவற்றோடு மூன்றாம்மண்டல நாடுகள் அடிக்கடி யுத்தங்களுக்கு மகம் கொடுத்து வருவதனால் மக்கள் நலன் பேணம் திட்டங்கள் குறைவாக காணப்படுகின்றன. இதனோடு அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், இவர்களுக்கான நிவாரணங்ககள் போன்றவற்றிலேயே காலம் செல்கின்றது. தவிர நல்லாட்சியை நிறுவ முடியாதுள்ளது. செல்வந்த நாடுகள் இந்நாடுகளுக்கு கடன் உதவிகளை வழங்குதல், உணவப்பொருட்களை வழங்குதல், வரிசலுகைகளை வழங்குதல் போன்றவற்றினூடாக இந்நாடுகளை நவகாலணித்துவத்திற்கு இட்டுச்செல்கின்றன. இதனால் வளங்கள் சுரண்டப்பட்டு இந்நாடுகள் நலிவுற்றுப் போகின்றன.
இவ்வாறாக பார்க்கும் போது இலங்கையும் ஒரு வளர்ந்து வரும் நாடாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இங்கு நல்லாட்சியை நிலைநாட்டுவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றது. குறிப்பாக கடந்தக் காலங்களில் ஏற்பட்டிருந்த போர்ச் சூழல் காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டதோடு, ஆட்சி நிலையிலும் சிப்பினை காணக்கூடியதாக இருக்கவில்லை. எனினும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமானது நல்லாட்சியை நிறுவுவோம் என்ற கருத்தை முன்வைத்துக் கொண்டுள்ளது. எனினும் இது இலகுவானதொன்றா என்பது ஐய்யத்திற்கு இடமானதே.இலங்கையை பொருத்தவரை நல்லாட்சியை பாதிக்கும் பல காரணிகள் இங்கு காணப்படுகின்றன. இவற்றை களைவதாயின் ஒரு நீண்டகால அரசியல் கொள்கை பின்பற்றப்படுவதுடன், பொருளாதாரம், வளப்பங்கீடு என்பவற்றிலும் கவனம் செலுத்தப்படல் வேண்டும். இலங்கை ஒரு பல்லின சமூகத்தை கொண்ட நாடு என்ற வகையில் சரியானதும், தீர்க்கமானதுமான தீர்வு முன்வைக்கப்பட்டு, சிறுபான்மை இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் ஆட்சியானது வலைந்துக் கொடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் நல்லாட்சி தத்துவம் நிலைபெறும்.
இவ்வாறாக பார்க்கும் போது பொதுவளங்களை பொருப்புடனும் செயற்றிறனுடனும் பயன்படுத்தி ஊழலை தவிர்த்து, மனித உரிமைகளை பேணி, சட்ட ஆட்சி செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் ஒன்றாக நல்லாட்சி தத்துவம் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் அடைவதற்கு மிகவும் கடினமானதொரு சிந்தனையாகவே நல்லாட்சி காணப்படுகின்றது. எனினும் சில நாடுகள், சமூகங்கள் நல்லாட்சி தத்துவத்தை நெருங்கி வருகின்றன. எப்வபடியாயினும் மனித அபிவிருத்தி நிலைத்து நிற்பதற்கு செயற்பாட்டு ரீதியானதும், உண்மையானதுமான ஒரு சிந்தனையாக நல்லாட்சி காணப்படுகின்றது. 

கிருஷ்ணன் ஜெயசங்கர்

அரசறிவியல் சிறப்புக்கற்கை.

2ஆம் வருடம்.