“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

பிரான்சிய ஜனாதிபதி



பிரான்சிய ஜனாதிபதி


ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்கான ஆட்சி என்று குறிப்பிடலாம். இன்றைய உலகில் மக்கள் தமது பிரதிநிதிகள் ஊடாக தமது அரசியலினை செயற்படுத்தி வரகின்றனர். இதனையே பிரதநிதித்துவ ஜனநாயகம் என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படு ஆட்சி பீடத்திற்கு அனுப்படும் மக்கள் பிரதிநிதிகள் சில நேரங்களில் சகல அதிகாரங்களையும் தமது கையில் எடுத்துக் கொண்டு, சர்வாதிகார போக்கில் செயற்படுவதையும் நாம் அவதானிக்கலாம். ஆனால் அது குறிப்பிட்ட கட்டத்தின் பின்னர் மக்களால் வீழ்த்தப்படுவதையும் நாம் வரலாற்றின் ஊடாக கண்டுள்ளோம்.

உலகத்தில் நீண்ட அரசியல் வரலாற்றினை உடைய நாடும், மனித உரிமைக்காக போராடிய நாடும், ரூசோ போன்ற அறிஞர்களை பெற்ற நாடுமாகிய பிரான்ஸ் ஒரு நீண்ட அரசியல் வரலாற்றுப் பின்னணியினை கொண்டு காணப்படுகின்றது. சுமார் ஐந்து குடியரசு யாப்புக்களை மிகவும் குறுகிய காலத்திலேயே அமைத்துக் கொணட்டதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் தீர்ப்பு முறை, மத சார்பற்ற மக்களாட்சி குடியரசு, ஜனாதிபதி பாராளுமன்ற அரசாங்க முறையினைக் கொண்ட நாடு, இருவகை நீதி மன்றங்களையும், பலகட்சி முறையினையும் கொண்ட நாடாக பிரான்ஸ் விளங்குகின்றது.  பிரான்சின் அரசியல் வரலாற்றை நோக்கும் போது டீ கோலிற்கு முன்பும், டீ கோலிற்கு பின்பும் என்று நோக்குவது அரசியல் அரிஞர்களின் பொதுவான நோக்காகும். பிரான்சின் நவீன அரசியல் வரலாறு 1789 பிரான்சிய புரட்சியின் பின்னரே தொடங்கியது. இதன் பின்னர் 1958 வரை நான்கு குடியரசு யாப்புக்களை கொண்டு காணப்பட்டதோடு பிரான்ஸின் நவின தலைவர் என்று அழைக்கப்படும் டீ கோலினால் ஐந்தாவது குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று வரை நடைமுறையில் உள்ளது

இவ்யாப்பின்படி நிர்வாகத்துறைக்கு பொறுப்பாக ஜனாதிபதியே காணப்படுகின்றார். இவர் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார். ஐந்தாம் குடியரசு யாப்பின் படி இவர் மறைமுக தேர்தல் அதாவது தேர்வாரள் கழகத்தினாலேயே தெரிவு செய்யப்பட்டு வந்தார். எனினும் 1962ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தப்படி அவர் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட வழி செய்யப்பட்டது. இவர் ஐந்து வருடங்கள் பதவி வகிக்கவென தெரிவு செய்யப்படகின்றார். ஆரம்பத்தில் ஏழு வருடங்கள் பதவியாகக காணப்பட்ட போதும் 2000ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தத்தின் படி நை;து வருடங்களாக குறைக்கப்பட்டது. இவ்வாறாக ஜனாதிபதி முறையின் பல்வேறு மாற்றங்களுடன் ஜனாதிபதியை அரசின், அரசாங்கத்தின், அமைச்சரவையின் தலைவராகக் கொண்டு காணப்படும் பிரான்சின் ஜனாதிபதியானவர் ஒரு சர்வதிகாரி என்ற கருத்தும் காணப்படுகின்றது. இருப்பினும் இக்கருத்து ஆராயப்பட வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது
 
இவாறானதொரு கருத்ததை நாம் பின்வரும் அடிப்படையில் நோக்கலாம். ஒன்று அவர் யாப்பின் மூலம் பெற்றுள்ள அதிகாரங்கள், இரண்டாவது மரபு ரீதியாக  அல்லது நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் அவர் பெற்றுள்ள அதிகாரங்கள், மூன்றாவது கட்சிகளின் செல்வாக்கினால் பெற்றுக் கொண்ட அதிகாரங்கள் என்ற அடிப்படையில் நோக்கலாம். இருப்பினும் காலம் காலமாகக் மேற்கொண்ட சீர்த்திருத்தங்கள், நீதித்துறை சுதந்திரம், அமைச்சரவை அனுமதி போன்றவற்றின் ஊடாக இவர் கட்டுப்படுத்தப்படுவதாகவும் குறிப்படுகின்றது.

பிரான்சிய ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் பிரதமரை நியமிக்கின்றார். ஆரம்பத்தில் ஜனாதிபதி ஒரு தேர்வாளர் கழகத்தினாலேயே தெரிவு செய்யப்பட்டார் என்று நோக்கினோம். இந்நிலையில் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் அதிக பெரும்பான்மையை பெறும் கட்சியிலிருந்து ஒருவரை ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படத்தி தற்துணிவின் பேரில் நியமிப்பது என்பது ஜனநாயக பேரில் ஜனாதிபதியின் சர்வதிகாரத்தையே காட்டுகின்றது. எனினும், கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் ஜனாதிபதியும் நெரடி தேரிதல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றமையால் இக்குறை ஓரளவு குறைக்கப்படுகின்றது என்றே கூற வேண்டும். இருப்பினும் தனது சுயவிருப்பின் பேரில் பிரதமரை தெரிவு செய்தல் என்பது மக்கள் பிரதிநிதியை ஒரு தனிமனிதன் தீர்மானிப்பது ஜனநாயகத்திற்கு முரணானதொன்றாகும். இவ்வாறான தன்மையினை நாம் வேறு நாடகளில் காண்பதரிது. பிரித்தானியாவில் அதிக பெரும்பான்மையை பெற்ற கட்சியின் தலைவரையே முடி பிரதமராக நியமிக்கின்றார். மற்றும்படி எந்த ஒரு கட்சியும் அதிக பெரும்பான்மையை பெறாத பட்சத்திலேயே முடி தான் விரும்பிய ஒரு கட்சியை ஆட்சியரமக்குமாறு அறிவிக்கலாம்

அடுத்ததாக, அமைச்சரவையை நியமித்தல். இதன் போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையினைப் பெற வேண்டும் என யாப்பு குறிப்பிடுகின்றது. இருப்பினும் அவர் விரும்பினால் அவ்வாறு செய்யாமல் தனது சுய விருப்பின் பேரிலும் செயற்பட முடியும். இவ்வாறு பார்ககும் பொது ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரியாகவே செயற்படவதை நாம் அவதானிக்கலாம். இந்நிலை வேறு நாடகளில் காணப்படவது குறைவு. இந்தியா மற்றும் பிரிதானியாவில் பிரதமரின் ஆலோசனையினை பெற்றே பெயரளவு நிர்வாகி அமைச்சர்களை நியமிப்பர். ஆனால் இங்கு உண்மை நிர்வாகி பெயரளவு நிர்வாகி என்ற விடயங்கள் காணப்பட வில்லை. இருவரும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி தற்துணிவுடன் அமைச்சர்களையும் நியமிப்பது ஜனநாயகத்தில் ஓர் சர்வாதிகாரத்தினையே எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறாளதொரு தன்மை இலங்கையிலும்' காணப்படகின்றமை குறிப்பிடத்தக்கது

அமைச்சரவை கூட்டத்திற்குத் தலைமைத் தாங்குதல் அமைச்சரவையை ஒழங்குபடுத்துதல் கட்டளைகளுக்கு இறுதி அங்கிகாரம் வழங்குதல் போன்றனவும் ஜனாதிபதியின் அதிகாரங்களாக காணப்படுகின்றது. அமைச்சரவையின் தீர்மானங்களிற்கு பாராளுமன்றத்தின் அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி அவற்றில் கைசாத்திட்டு உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு கைச்சாத்திடாத சகல தீர்மானங்களும் இரத்து செய்யப்பட்டவையென கருதப்படும். இது ஜனாதிபதியின் விருப்பம் இன்றி அமைச்சரவையில் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது என்பதை எடுத்ததுக் காட்டுகின்றது. இதனை நோக்கும் போது நிர்வாகத்துறையான ஜனாதிபதி சட்டத்துறையான பாராளுமன்றத்திற்கும் மேலானவராகவும் அமைச்சரவையை தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பவராகவும் காணப்படகின்றார். எனவே நாட்டில் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களும் ஜனாதிபதிக்கு சார்பானதாகவும், அவரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதாகவுமே காணப்படும். இவ்வாறு செயற்படுவதனால் ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கு காணப்படுவதை அவதானிக்கலாம். இந்நிலை ஐக்கிய அமெரிகாவிலும் கூட இல்லை. இங்கு காங்கிரசினால் அனுப்பப்படும் சட்ட மூலத்தினை ஜனாதிபதி தனது வீடட்டோ அதிகாரத்தினை கொண்டு பத்து நாட்கள் மாத்திரமே தடுத்து நிறுத்தலாம். அதற்கு மேல் இருப்பின் அச்சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதாகவே கருதப்படும் என்ற கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.  

நிர்வாகத்துறையின் தலைவர் என்ற வகையில் முழு அரசாங்க சேவையினையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தினை ஜனாதிபதி பெற்றுள்ளார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒரு சட்டத்தின் மூலம் அரசாங்க சேவையில் மேற் கொள்ள வேண்டிய நியமனங்கள் காணப்படாவிட்டால் அரசாங்க சேவை நியமனங்கள் தொடர்பாக ஜனாதிபதி தமது தற்துணிவு அதிகாரத்தின் அடிப்படையில் செயற்பட முடியும். இவ்வாறு பார்க்கின்ற போது, முழு நாட்டினையும் கட்டுப்படுத்தக் கூடிய முழு அதிகாரத்தினையும் ஜனாதிபதி பெற்றள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறாக பார்க்கின்ற போது நாட்டின் நிர்வாத்தினையும் அதன் செயற்பாட்டினையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக் கூடியவராக இவர் காணப்படகின்றார். ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு தனி மனிதனின் அதிகாரம் மேலோங்கிக் காணப்படமாயின் அது சர்வதிகார போக்காகவே கருதப்படும்.
ஆயுத படைகளுக்கு கட்டளையிடும் பிரதம நிர்வாகி என்ற அடிப்படையில் ஜனாதிபதி அதிகாரங்களை கொண்டுள்ளார். இவரே முப்படைகளினதும் தலைமை தளபதியாகக் காணப்படுகின்றார். அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, பதவி நீக்கம் பொன்ற அதிகாரங்களுடன் பொர் பிரகடனம் சமாதானம் செய்தக் கொள்ளுதல் பொன்ற அதிகாரங்களையும் கொண்டுள்ளார். இருப்பினும் இவ்விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையின் ஆலோசனையினை ஜனாதிபதி பெறுவது அவசியமானதொன்றாகும். இருப்பினும் நடைமுறையில் ஜனாதிபதி மேற்கொள்ளும் அனைத்து தீர்மானங்களுக்கும் அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப் பெறகின்றதும் குறிப்பிடத்தக்கது.   

பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் ஜனாதிபதி செய்திகளை அனுப்புதல். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை 15ந்து நாட்களுக்கள் சட்டமகப் பிரகடனப்படுத்ததல்..தன் பொது சமர்ப்பிக்கப்படும் ஒரு மசோதாவை ஒன்றில் நடைமுறைப்படுத்தலாம். அல்லது அதனை மீண்டும் பரீசிலனை செய்யுமாறு திறப்பி அனுப்பலாம். மேலும் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி உரை நிகழ்த்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனொடு தேசிய பெரவையினை கலைக்கம் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்துணிவு அதிகாரத்தின் மூலம் எந்த சந்தர்பத்திலும் அவர் இந்த அதிகாரத்தைப் பிரயோகிக்க முடியும். வருடத்தில் ஒரு முறை மட்டுமே தேசிய அரசுப் பெரவையை கலைக்க முடியும். இவ்வதிகாரத்தினை பிரயொகிப்பதற்கு முன்னர் சட்டத்துறையின் இரு மன்றங்னகளின் தலைவர்களையும் பிரதமரையும் கலந்தாலோசிக்க வேண்டும். எனினும் அவர்களின் கருத்துக்களுக்க ஜனாதிபதி கட்டுப்படத் தேவையில்லை

இவ்வாறு பார்ககம் போது சட்டத்துறையிலும் ஜனாதிபதி பூரண அதிகாரத்தினை கொண்டு காணப்படவதோடு, சட்டத்துறையின் தனிச் சிறப்பினையும் மீறி தனது தற்துணிவு அதிகாரத்தின் மூலம் சட்டத்துறையினையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படகின்றதனால் இவர் ஒரு சர்வதிகாரியக செயற்படக் கூடிய சந்தர்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் காணப்பட வேண்டிய வலுவேறாக்கம் என்றகோட்பாட்டிற்கு இது முற்றிலும் வேறுபட்டதாகவே காணப்படகின்றதோடு, மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஒரு தனி நபர் கட்டுப்படுத்தவது என்பது ஜனநாயக கோட்பாட்டிற்கு முரணானதாகும். உலகில் பலம் பொருந்திய ஜனாதிபதியாக அமெரிக்க ஜனாதிபதியினை குறிப்பிடுகின்ற போதும் அவருக்கு இவ்வாறு சட்டத்துறையை தற்துணிவின் பேரில் வழிநடத்தம் அதிகாரம் வழங்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் யாப்பு என்பது அவசியமான தொன்றாகும். நாட்டினை சிறப்பான முறையில் வழிநடத்தி செல்வதற்கும், சர்வாதிகார தன்மைகளிலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கும், மக்களின் உரிமைகளை காப்பதற்கும் அரசியல் யாப்பு அவசியமானதொன்றாகும். பிரான்சை பொருத்தவரை அரசியல் யாப்பினை திருத்தும் அரதிகாரத்திலும் ஜனாதிபதியின் கையெ ஓங்கிக் ககாணப்படவதை அவதானிக்கலாம். அரசியல் யாப்பு திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்கள் தீர்ப்பிற்கு விடும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. ஜனாதிபதி விரும்பினால் குறிப்பிட்ட அரசியல் யாப்புத்திருத்தத்தை மக்கள் தீப்பக்கு விடாமல் பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் 35 பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி சட்டமாக்கலாம். இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், ஜனாதிபதியினை குறைந்தளவு கட்டுபடுத்தக்கூடிய அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடைக்கின்றது. கூட்டுக் கூட்டத்தில் திருத்த மசோதாவை தோல்வியடைய செய்யலாம். மக்களுக்கு ஏற்புடையது அல்ல என்று பாராளுமன்றம் கருதும் பட்சத்தில் அவ்வாறு செய்யலாம். ஏனெனில் பாராளுமன்றத்தில் காணப்படுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அதனை நோக்கலாம். இருப்பினும் மந்திரி சபைக்கு பொறுப்பாக ஜனாதிபதி காணப்படுவதனால் அவருக்க அதரவாகவே மந்திரிமார்களின் செற்பாடு அமையும். இதன் போது ஜனாதிபதி அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒரு தனி நபராகவே காட்சியளிக்கின்றார்.   
அரசியல் யாப்பிற்கு காவலானாக இருத்தல், மசோதா யாப்பிற்கு முரணானதா என பரிசீலிக்க அரசியல் அமைப்பு குழுவிற்கு அனுப்பும் அதிகாரம் ஜனாதிபதியிடமே காணப்படுகின்றது. எனினும் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் எல்லா மசோதாக்களையும் ஜனாதிபதியினால் நிறாகரிக்க முடியாது. எவ்வாறு இருப்பினும் கட்சிகளின் செல்வாக்கு காரணமாக அவர் சில அதிகாரங்களை தன்னிச்சையாக செயற்படுத்தக் கூடியதாக அமைகின்றது. அல்ஜீரிய பிரச்சனையின் போது பொதுவுடைமை கட்சி ஜனாதிபதி டி கோலிற்க சார்பாகவே செயற்பட்டதை குறிப்பிடலாம். இவ்வாறாக கட்சிகளின் ஆதரவுடன் செயற்பட்ட ஜனாதிபதிகள் மேலும் தமது அதிகாரத்தினை வலுப்படுத்திக் கொண்டனர்.

அரசியல் யாப்பின் 64ம் சரத்தின் படி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதகாக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. உயர் நீதித்துறையின் தலைவராக ஜனாதிபதியே காணப்படுகின்றார். இதனால் நீதித்துறையிலும் அவரின் செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகின்றது. நீதித்துறைக்க நீதிப்புணராய்வு அதிகாரம் இன்மையால், அது ஒரு குழுவிற்கே வழங்கப்பட்டுள்ளது. அக்குழுவிற்கும் ஜனாதிபதியே அதிகமான உறுப்பினர்களை தெரிவு செய்கின்றார். எனவே எத்துறையிலும் ஜனாதிபதியின் அதிகாரமே அதிகமாக காணப்படுகின்றது எனக்கூறலாம்.
அடுத்ததாக, அரசியல் யாப்பின் பதினாறாம் சரத்தின்படி பிரான்சிய குடியரசினதும். பிரான்சிய ஆட்சி தாபனங்களினதும், தொடர்ச்சியான இருப்பு மற்றும் செயற்பாடு என்பவற்றை பாதகாத்து கொண்டு நடாத்துதல், தேசிய சுயாதீனத்தை பாதுகாத்தல் கொண்டு நடாத்துதல் என்பவற்றின் பொறுப்பாளர் ஜனாதிபதியே ஆவார்.  எனவே அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. இதன் போது அவர் பாராளுமன்ற இரு மன்றங்களின் தலைவர்களையும் பிரதமரையும் கலந்தாலோசிக்க வேண்டும். எனினும் தற்காலத்தில் அது நலிவடைந்து ஜனாதிபதி தனது சுய விருப்பின் பேரில் சில நடவடிக்கைகளை மேற் கொள்ளவே செய்கின்றார். இந்நிலையினை வேறு நாட்டு நிர்வாகத்துறையுடன் தொடர்பு படுத்தி பார்ககும் போது அங்கு இவ்வாறானதொரு நிலையினை காண முடியாதுள்ளது

கட்சிகளின் நிலைப்பாட்டினாலும் ஜனாதிபதி சில அதிகாரங்களை பெற்றுக் கொள்கின்றார். அதாவது, பொதுவுடைமை கட்சி, சோசலிச கட்சி என்பன மந்திரி சபையினை அமைக்கும் போது அது ஜனாதிபதியாக இருப்பவருக்கு அதிகம் செல்வாக்கு உடையதாக காணப்படுகின்றதை அவதானிக்கலாம். இருப்பினம் பிரதமர், ஜனாதிபதி என்போர் வேறுபட்ட கட்சிகளை சேர்ந்தவர்களாயின் இங்க முரண்காடு தோன்றுவது இயல்பாகவே காணப்படுகின்றது. எனினும், நம்பிக்கையில்லா பிரேரணை என்பன கொண்டுவரப்பட்டால் மந்திரி சபை மாத்திரம் பதவி விலகுமே தவிர மந்திரி சபைக்கு பொறுப்பாக இருக்கும் ஜனாதிபதி பதவி நீங்க மாட்டார். எனவே இங்கும் ஜனாதிபதியின் அதிகாரமே பலமானதாக காணப்படுகின்றது

இவ்வாறான விடயங்களை தொகுத்து பார்க்கும் போது, பிரான்சிய ஜனாதிபதி ஜனநாயக முறையில் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட போதும், அவர் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தினை கட்டுப்படுத்தவும், பிரதமரை நியமிக்கவும், அவசர கால நிலையின் போது ஒரு சர்வாதிகாரியாக செயற்படுவதும், ஜனாதிபதியும் பிரதமரும் முரண்படும் போது அரசியலில் ஸ்தீரமற்ற நிலை தோன்றுவதனால் அது பிரான்சுக்கு ஆபத்தானதாகும். எனவே, ஜனாதிபதி அரசியல் யாப்பு ரீதியாகவும், மரபு ரீதியாகவும், கட்சிகளின் செல்வாக்கு காரணமாகவும் அவர் அதிகாரங்களை செயற்படுத்தி வருகின்றார். இதனால் பிரான்சிய ஜனாதிபதி ஜனநாயக முறையின் கீழ் அமையப்பெற்ற ஒரு சர்வாதிகாரியாகவே காணப்படுகின்றமையை அவதானிக்கலாம்.

எவ்வாறு இருப்பினும் பிரான்சிற்கும், பிரான்சிய மக்களுக்கும் இத்தன்மை சர்வாதிகார போக்காக காணப்படவதாக அவர்கள் கருதவில்லை. அவ்வாறு கருதும் போது மக்கள் தமது இறைமை அதிகாரத்தை பயன் படுத்தி அதனை தடுத்து விடுகின்றனர். ;வ்வாறே ஜனாதிபதியின் பதவி காலம் குறைக்கப்பட்டதும், தேர்வு முறை மாற்றப்பட்டதையும் நாம் காணலாம்.