அரசியல் - பொருளாதாரம் - பல்தேசிய கம்பனிகள்
(இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க வெளியீடான கிழக்கொளி சஞ்சிகையில் வெளியான கட்டுரை)
அறிமுகம்.
தற்போதைய உலகமயமாக்கல் செயற்பாடானது தனியார் கரங்களுக்கான செல்வக்குவிப்பையே தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் அதிகம் பேசுப்பொருளாகக் காணப்படுவது இந்த பல்தேசிய கம்பனிகள். இன்று பல அரசுகள் தமது பொருளாதார நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுப்பதில் தோல்விகளைக்கண்டு வருகின்றன. அரசுகளின் பொருளாதாரத்தினை தீர்மானிப்பதில் வெளி சக்திகளின் ஆதிக்கமே இதற்கான காரணம். இதில் பல்தேசிய கம்பனிகள் முக்கியப்பங்கைக் கொண்டுள்ளன. நாம் அறிந்தோ அறியாமலோ இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றோம். நாம் நமது அன்றாட செயற்பாடுகளின் மூலம் இவைகளை ஊக்குவிக்கின்றோம். தேசிய அரசுகளின் இறைமை, தேசிய எல்லைகள் என்பன தகர்த்தெரியப்பட்டு, ஒரு கட்டற்ற சந்தைப்பொருளாதாரம் ஒற்றைமைய உலகப் பொருளாதாரமாக வளர்ந்து வருகின்ற நிலையில் அரசுகள் தமது திட்டமிட்ட பொருளாதார கொள்கைகளைப் பேணமுடியாது போயுள்ளது. இதிலும் மூன்றாம் உலக நாடுகள் முற்றாக பல்தேசிய கம்பனிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிட்டன. தகவல் தொழிநுட்பம், கல்வி, வங்கித்தொழில், வர்த்தகம் என்ப பாரிய வளர்ச்சிக்காணுவதற்கு இவைகளின் பங்களிப்பே காரணம் என்று ஒரு மாயையினை உருவாக்கி விடுகின்றன. எனவே, இதனை கட்டவிழ்த்துப் பார்க்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையானது இவற்றின் சில புள்ளிகளை தொட்டுக்காட்ட விளைகின்றது.
இலங்கை இன முரண்பாட்டில் நோர்வே....!
அரசியல் - பொருளாதாரம் - பல்தேசிய கம்பனிகள்
அறிமுகம்.
தற்போதைய உலகமயமாக்கல் செயற்பாடானது தனியார் கரங்களுக்கான செல்வக்குவிப்பையே தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் அதிகம் பேசுப்பொருளாகக் காணப்படுவது இந்த பல்தேசிய கம்பனிகள். இன்று பல அரசுகள் தமது பொருளாதார நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுப்பதில் தோல்விகளைக்கண்டு வருகின்றன. அரசுகளின் பொருளாதாரத்தினை தீர்மானிப்பதில் வெளி சக்திகளின் ஆதிக்கமே இதற்கான காரணம். இதில் பல்தேசிய கம்பனிகள் முக்கியப்பங்கைக் கொண்டுள்ளன. நாம் அறிந்தோ அறியாமலோ இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றோம். நாம் நமது அன்றாட செயற்பாடுகளின் மூலம் இவைகளை ஊக்குவிக்கின்றோம். தேசிய அரசுகளின் இறைமை, தேசிய எல்லைகள் என்பன தகர்த்தெரியப்பட்டு, ஒரு கட்டற்ற சந்தைப்பொருளாதாரம் ஒற்றைமைய உலகப் பொருளாதாரமாக வளர்ந்து வருகின்ற நிலையில் அரசுகள் தமது திட்டமிட்ட பொருளாதார கொள்கைகளைப் பேணமுடியாது போயுள்ளது. இதிலும் மூன்றாம் உலக நாடுகள் முற்றாக பல்தேசிய கம்பனிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிட்டன. தகவல் தொழிநுட்பம், கல்வி, வங்கித்தொழில், வர்த்தகம் என்ப பாரிய வளர்ச்சிக்காணுவதற்கு இவைகளின் பங்களிப்பே காரணம் என்று ஒரு மாயையினை உருவாக்கி விடுகின்றன. எனவே, இதனை கட்டவிழ்த்துப் பார்க்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையானது இவற்றின் சில புள்ளிகளை தொட்டுக்காட்ட விளைகின்றது.
இலங்கை இன முரண்பாட்டில் நோர்வே....!
சர்வதேச அளவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத முரண்பாடுகளில் இலங்கை இன முரண்பாடும் பிரதானமானதாகும். இதனால் தேசிய சர்வதேச மட்டத்தில் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு இன முரண்பாடாகவும் இம்முரண்பாடு விளங்குகின்றது. இன முரண்பாடு என்பது பல இன மத மொழி கலாசாரங்களைப் பின்பற்றுகின்ற நாடுகளில் பெரும்பாண்மையினம் சிறுபாண்மையினரின் அடிப்படைத் தேவைகள் அபிலாசைகளை நிறைவேற்ற மறுக்கும் போது அல்லது ஒரு இனம் மற்ற இனத்தைத் தாக்கும் போது இன முரண்பாடு என்பது தோற்றம் பெறுகின்றது. இலங்கை பல்லினங்களையும் பல சமூகங்களையும் கொண்ட ஒரு பன்மைத்துவ கலாசார பின்னனியைக் கொண்ட நாடாகும். இந்நாட்டின் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் பறங்கியர் என பல இனங்கள் வாழ்கின்றனர். இவர்களுல் சிங்கள - தமிழ் சிங்கள– முஸ்லிம் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடே பிரதானமானதாகும். அதிலும் குறிப்பாக சிங்கள-தமிழ் முரண்பாடே இன்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற ஒரு போக்கைக் காணலாம்.
மலையக தொழிற்சங்க முன்னோடி கோ. நடேசைய்யர்
By :- Ramakrishnan Chandrasegar.
Political Science (Special Student)
Eastern University, Sri Lanka
தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் வசதியாக்கிக் கொள்ளவும் அமைத்தக் கொண்ட தொடர்சியாக இயங்கும் அமைப்புகளே 'தொழிற்சங்கம்' என அழைக்கப்படுகின்றது. அந்த வகையில் மலையக தொழிற்சங்க வரலாற்றில் தொழிற்சங்க முன்னோடி என புகழப்படும் கோ.நடேசையர் பற்றிய ஓரு வரலாற்றுப் பார்வையாக இக் கட்டுரை அமைந்துள்ளது.
கோ.நடேசையர் 1887 இல் தமிழகத்தில் தஞ்சாவூரில் பிறந்தார். தஞ்சை மண்ணில் பிறந்த ஐயர் தழிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். வர்த்தகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக தமிழரும் தடம் பதிக்க வேண்டும் என 1914 இல் வணிகர்களுக்காக 'மித்திரன்' எனும் பத்திரிகையை நடாத்தினார். இளம் வயதில் மகாகவி பாரதியின் தேசவிடுதலை பாடல்களை தேசிய உணர்வோடு கற்றுத் தேர்ந்தார்.
Read more..........
நவீன ஜனநாயக நாடுகள் அனைத்தும் அரசியல் யாப்பினைக் கொண்டே தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அரசியல் யாப்பு என்பது, ஆள்வோரின் கடமைகளையும் ஆளப்படுவோரின் உரிமைகளையும் குறிப்பிடும் விதிகளின் தொகுப்பு எனக் கூறலாம். இதனடிப்படையில் அனேகமான நாடுகளின் அரசியல் யாப்புக்களில் அடிப்படை உரிமைகளையும் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது. இவ்வாறாகவே இந்திய அரசியல் யாப்பும் ஏனைய நாடுகளின் அரசியல் யாப்பிலிருந்து தன்னை தனித்துவமாக காட்டுவதுடன், அடிப்படை உரிமைகளையும் ஒரு பகுதியாகக் கொண்டு காணப்படுகின்றது.
அறிமுகம்.
இலங்கையானது பல்லினங்களைக் கொண்டதொரு நாடாகும். இந்நாட்டில் சுமார் முப்பது ஆண்டுகள் யுத்தம் இடம்பெற்று வந்தது. 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் 19ம் திகதியுடன் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை பாரிய சவால்களை சந்திக்கத்தொடங்கியது. இது உள்நாட்டு ரீதியாகவும், வெளிநாட்டு ரீதியாகவும் அமைந்திருந்தது. உள்நாட்டு ரீதியாக சந்தித்த சவால்களில் மிக முக்கியமானது யுத்தத்தின் பின்னர் சமாதானத்தினை கட்டியெழுப்புதல் என்பதாகும். யுத்தம் முடிந்து இன்று வரையிலும் இலங்கை சமாதானத்தை கட்டியெழுப்புவதில் பாரிய பின்னடைவினை கண்டுவருகின்றது என்றும் கூறப்படுகின்றது.
Read more.........
Read more.........
மனித உரிமைகள்
மனிதன் தோன்றிய அன்றே இயற்கை, உரிமைகளை அவனுக்கு வழங்கிவிட்டது. ஆனால், மனிதனானவன் அதனை உணர்ந்துக் கொள்வதற்கு குறிப்பட்ட காலம் அவன் கூர்ப்பு அடைய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த காலத்தினை அடைந்த போதுதான் அவன் உரிமைகளை உணரத்தொடங்கினான். இதன் பின்னரே உரிமைகளைப்பற்றி பேசவும் தொடங்கினான் எனலாம். மனித உரிமைகள் என்ற எண்ணக்கருவானது பல்வேறு நிலைகளில் இருந்து நோக்கப்படுகின்றது. இதற்கு பல்வேறு அறிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இவர்கள் தமது கருத்துகளை கால சூழ்நிலைக்கு ஏற்ப முன்வைத்துள்ளமையை நாம் அவதானிக்கலாம். உரிமைகள் என்பது 'சமூகத்தினாலும் அரசினாலும் அங்கிகரிக்கப்பட்ட மனிதக் கோரிக்கைகள்' எனலாம். இதில் மூன்று விடயங்கள் முக்கியம் பெறும். குறிப்பாக Read more.....
ஐக்கியநாடுகள்சபையின் மனித உரிமைகள் பேரவையின் கண்டன பிரேரணைகள் இலங்கையின்இராஜதந்திர உறவு முறையில் எற்படுத்திய தாக்கம்.
இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் அதன் அமைவிடம் என்பது புவியியல் அரசியலில் மிகவும் முக்கியமானதொன்றாகும். இரண்டாம் உலகப்போரினைத் தொடர்ந்தும், பின்னர் ஏற்பட்ட பனிப்போரின் முடிவுடனும் பொருளாதார அரசியல் என்பது பலமானதாக மாற்றமடையத் தொடங்கியது. இதன்போது இந்துசமூத்திரமானது பல நாடுகளுக்கு அவசியப்படும் ஒரு இடமாக மாற்றமடைந்தது. இதனால் உலக அரசியல் நகர்வுகளானது இந்து சமுத்திரத்தின்பால் நகரத்தொடங்கியது எனலாம். இதன்போது சர்வதேச அரசியல் வலைப்பின்னலுக்குள் உள்ளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் தமது இராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையினை பலப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
'என் கடைசி காலம்வரை விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவேன்'
என்று கூறிய மனிதர் வெற்றி கண்டார்.
உலகம் எப்போதாவதுதான் சில மகத்தான மனிதர்களை நமக்கு அளிக்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை மூன்று முக்கிய மனிதர்களை மறந்துவிட்டு பார்க்க முடியாது. அவர்கள், அன்னல் காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா. இதில் முதல் இருவருக்கும் இந்த உலகம் துப்பாக்கி குண்டுகளையே பரிசாக அளித்தது. இந்த மகத்தானவர்களில் ஒருவர்தான் நெல்சன் மண்டேலா. இருபதாம் நூற்றாண்டில் பிறந்து இருபத்தியொராம் நூற்றாண்டினை கண்ட ஒரு இலட்சியவாதி என்றே அவரை கூறவேண்டும். 27 ஆண்டுகள் சிறையில் இருந்து உலகிலேயே நீண்டகாலம் சிறையிலிருந்த அரசியல் தலைவர் என்ற பெருமையை பெற்றவர்.
Read more
அரிஸ்டோட்டில் கி.மு 384 – கி.மு 322 வரை கிரேக்கத்தில் வாழ்ந்தவர். இவர்வாழ்ந்தக் காலக்கட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் இவர் எதன்ஸ் நகருக்கு அண்மையில் Stagira என்ற ஊரில் கி.மு 384ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் நாட்டம் அதிகமாக சமூகத்துறைகளில் காணப்பட்டது. இவர் பிளேட்டோவின் மாணவராக சேர்ந்து அவரின் பள்ளியில் கல்விப் பயின்றார். அரிஸ்டோட்டில் பிளேட்டோவை பின்பற்றி தனது கருத்துக்களை முன்வைத்தாலும் பல இடங்களில் பிளேட்டோவின் சிந்தனையில் இருந்து விடுபட்டுச் செல்கின்றார்.
பிரான்சிய ஜனாதிபதி
ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்கான ஆட்சி என்று குறிப்பிடலாம். இன்றைய உலகில் மக்கள் தமது பிரதிநிதிகள் ஊடாக தமது அரசியலினை செயற்படுத்தி வரகின்றனர். இதனையே பிரதநிதித்துவ ஜனநாயகம் என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படு ஆட்சி பீடத்திற்கு அனுப்படும் மக்கள் பிரதிநிதிகள் சில நேரங்களில் சகல அதிகாரங்களையும் தமது கையில் எடுத்துக் கொண்டு, சர்வாதிகார போக்கில் செயற்படுவதையும் நாம் அவதானிக்கலாம். ஆனால் அது குறிப்பிட்ட கட்டத்தின் பின்னர் மக்களால் வீழ்த்தப்படுவதையும் நாம் வரலாற்றின் ஊடாக கண்டுள்ளோம்.
அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துக் கொள்கின்றவர் யாராக இருந்தாலும் அவர் தலைவராவார் என்று ஸ்பிறாட் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். மேலும் தலைமை என்பது நடத்தை முறை இது பிறரின் நடத்தை முறையை பாதிக்குமே தவிர பிறரின் நடத்தைமுறை தலைவரின் நடத்தை முறையை பாதிக்காது என்று லாட்பியர், பிரான்ஸ் வொர்த் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக பார்க்கும் போது தலைவரின் நடத்தையானது அவர் சார்ந்த அமைப்பினை பாதிக்கும் என்ற கருத்தினை பெறக்கூடியதாக உள்ளது. எனவே தலைமைத்துவமானது மிகவும் முக்கியமானதும், அதன் தனை;மையினை பொருத்தே கட்சியின் செயற்பாடும் அமையும் என எம்மால் அறிய முடிகின்றது Read more
நவகாலனித்துவத்தில் வளர்முக நாடுகளின் சவால்கள்.
14.04.2013ம் திகதி வீரகேசரியில் வெளியான கட்டுரை.
ஒரு பெரிய சக்தி, வளர்ச்சி குறைந்த நாடுகள் அல்லது பகுதிகள் மீது தனது செல்வாக்கை நிலைக்க அல்லது நீடிக்க பொருளாதார மற்றும் அரசியல் வழிகளை பயன்படுத்திக் கொள்வதே நவகாலணித்துவமாகும். அரசியல் பொருளாதார ரீதியாக வலிமை குன்றிய நாடுகளை தமது செயற்பாடுகளையும் கட்டுபாடுகளையும் விதித்து தனது வலையில் வைத்துக்கொள்ளும் ஒரு தந்திரமே நவகாலணித்தவத்தில் காணப்படுகின்றது Read more
இலங்கை அதிகார பரவலாக்க முயற்சியில் கண்டுவரும் தொடர் தோல்விகள்.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்கவில்லை என்ற விமர்சனம் பல தரப்புகளினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில், இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அதிகார பரவலாக்க முன்னெடுப்புகள் பலவற்றை சில காலகட்டங்களில் முன்னெடுத்திருந்தது. உலகில் பல்வேறு மதிரிகளில் அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளபட்டுள்ளது. அவை அந்தந்த நாட்டின் சூழ்நிலக்கு ஏற்றதாக அமைந்திருக்கும். இவற்றில் சில மாதிரிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு, அவை செயற்திறன் குன்றியனவாய் தோல்வி அடைந்தமையை காணலாம். Read more
இன்றைய நவீன ஜனநாயக உலகில் பல நாடுகள், சர்வதேச நிறுவனங்கள், பொதுநல அமைப்புக்கள் போன்ற பல ஸ்தாபனங்களில் பேசப்படுவதும், அபிவிருத்தி, இறையாண்மை போன்ற கருத்துகளுக்கு முக்கியத்துவமாகவும், ஜனநாயகத்தின் மற்றுமோரு பரிணாமமாகவும் பேசப்பட்டு வருகின்ற ஓர் எண்ணக் கருவே நல்லாட்சியாகும். Read more
நல்லாட்சியின் தற்கால தேவையும், முக்கியத்துவமும்.
கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட வருடார்ந்த சஞ்சிகையான “வெளி 2012” வெளியான கட்டுரை.
நல்லாட்சித்தத்துவத்தின் ஆரம்பக்கால நிலை, அறிஞர்கள் மத்தியில் அதன் செல்வாக்கு, பண்புகள், சிறபம்சங்கள் போன்றன மற்றுமன்றி நல்லாட்சியின் தற்கால முக்கியத்துவம், வலியுறுத்துவதற்கான காரணங்கள், நவீனஜனநாயக முறையில் இதன் செல்வாக்கு, மூன்றாம் உலக நாடுகளில் இதன் நிலைபோன்ற விடயங்களை தொகுத்துப் பார்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சுவிற்சர்லாந்தின் கூட்டுக் குழு நிர்வாக முறை
பல இனங்களைக் கொண்ட ஒரு தேசத்தை சமஷ;டி முறையின் கீழ் வெற்றிகரமாக வடிவமைத்த முதலாவது தேசம் என்ற பெருமையை சுவிட்சர்லாந்துக்குண்டு. ஜேர்மன், பிரஞ்சு, இத்தாலி ஆகிய பல தேசிய இனங்களையும் தேசிய சிறுபான்மை இனங்களையும் கொண்ட தேசமே சுவிட்சர்லாந்து. பல் தேசிய அரசின் வளர்ச்சியை இங்கு காணலாம். சுவிஸ் மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாடாகும். Read more