மாபெரும் மனிதர் நெல்சன் மண்டேலா
'என் கடைசி காலம்வரை விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவேன்'
என்று கூறிய மனிதர் வெற்றி கண்டார்.
என்று கூறிய மனிதர் வெற்றி கண்டார்.
அபிரிக்க நாட்டில் 1918 ஜுலை மாதம் 18ம் திகதி பிறந்தார் மண்டேலா. இவரின் இயற்பெயர் நெல்சன் ரோலிஹலாஹலா மண்டேலா (Nelson Rolihlahla Mandela) இவரின் தந்தை காட்லா ஹென்றி தெம்புலன்ட் (Thembuland) என்ற நாட்டின் அரசாங்க ஆலோசகராக இருந்தார். இவருக்கு நான்கு மனைவிமார். மூன்றாவது மனைவியின் பிள்ளைதான் மண்டேலா. நெல்சன் மண்டேலா தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். இதனால் குடும்பம் வறுமை நிலையை அடைந்ததது. மண்டேலாவின் தாய் இவரை ஜோன் கிந்தாபா என்ற அரசரிடம் ஒப்படைத்தார். பின்னர் மண்டேலா பாடசாலையில் சேர்க்கப்பட்டு அரச குடும்பத்தோடு வளர்ந்தார்.
நிறவெறி தலைவிரித்தாடிய காலகட்த்தில் வாழ்ந்த மண்டேலா
தான் நிறத்தால் ஒதுக்கப்படுவது கண்டு மனம் கலங்கினார். (Fort Hare) கல்லூரியில் பீ. ஏ பட்டம் பெற்றார். 1960வரை கறுப்பினத்தவர்களுக்கென்று இருந்த ஒரே கல்லூரியாக இது காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் ஜொகான்ஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டம் படித்தார். கல்லூரியில் நிறவெறிக்கு எதிராக பேசினார் என்ற காரணத்தினால் கல்வி கற்பதிலும் பல சிக்கல்களை எதிர்நோக்கினார். எவ்வாறு இருப்பினும் ஆரம்பத்தில் இவர் ஒரு குத்துச்சண்டை வீரராகவே அறியப்பட்டார் என்பது முக்கியமானதொன்று .
முதல் தடவையாக 1943ல் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து கண்டனம் செய்தார். 1946ல் சுரங்க பணியாளர்கள் 70,000 பேர் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறைவாக உள்ளது என்றும், போதியளவு விடுமுறையும் வேண்டி இப்போராட்டத்தை நடத்தினார்கள். இப்போராட்டமும் மண்டேலாவினை பெரிதும் ஈர்த்தது என்றே கூறவேண்டும். 1950ல் ஆபிரிக்க தேசிய நிறுவனத்தின் தேசிய செயற்குழுவிற்கு நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
வழக்கறிஞராக வெளியேறிய மண்டேலா, தன்னை முழு நேர வழக்கறிஞராக மாற்றிக்கொள்ள ஒரு தேர்வு எழுதவேண்டியிருந்தது. இதனையும் வெற்றிகரமாக எழுதி முடித்து முழுநேர வழக்கறிஞராக ஹெச் எம் பேஸ்னர் எனும் சட்ட ஆலோசனை மையத்தில் சிலகாலம் பணிபுரிந்தார். பின்னர் சொந்தமாக ஒரு சட்ட ஆலொசனை மையத்தை தொடங்கினார். அரசியல் பணிகளிலும் தன்னை முழமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இதனால் ஆபிரிக்க தேசிய அமைப்பின் துணைத்தலைவராகவும் மண்டேலா தெரிவுசெய்யப்பட்டார்.
வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்திலும் நிற வேறுபாடு காரணமாக பல இன்னல்களுக்கு மண்டேலா முகம் கொடுத்தார். ஏனெனில், நீதி மன்னறத்திலும் அவருக்கு எதிர்ப்புகள் இருந்த வண்ணமேயிருந்தன. நீதி மன்றங்களுக்கு வரும் சாட்சிகள் வெள்ளையர்களாயின் அவர்கள் கருப்பின வழக்கறிஞர்களுக்கு பதில் கூறுவதில்லை. மேலும், ஒருமுறை நீதிபதியினாலேயே மண்டேலா வெளியேற்றப்பட்டதும் குறிபிடதக்கது.
இவரின் திருமண வாழ்ககையினை பொறுத்தவரை முதலில் எவெலின் மாசே என்ற பெண்னை 1944ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். எவெலினை பொறுத்தவரை இவர் ஒரு வழக்கறிஞராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பே காணப்பட்டது. எனினும் இவரின் அரசியல் செயற்பாடுகள் இருவருக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வின்னி மகிடி லேனா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். வின்னி, மண்டேலாவிற்கு பெரும் துணையாக இருந்தார். குறிப்பாக அரசியல் செயற்பாடுகளில் பெரும் உதவியாக இருந்தார். மண்டேலா சிறையில் அடைக்கப்பட்ட போது வின்னி பல இடங்களுக்குச் சென்று ஆதரவு திரட்டினார். இதனால் இவர் கைது செய்யவும்பட்டார்.
ஆபிரிக்க தேசிய அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும், ஜோகான்பேர்கை விட்டு வெளியில் செல்லக்கூடாது, பொது கூட்டங்களில் பங்குபற்ற கூடாது என்று பல்வேறு அலுத்தங்கள் மண்டேலாவிற்கு வந்துக்கொண்டே இருந்தன. இதனால் சில நேரங்களில் மண்டேலா உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும் அது கருப்பினத்தவரை பாதிகாதவகையில் பார்த்துக்கொண்டார் என்றே கூறவேண்டும்.
1956.12.05 அன்று மண்டேலா உட்பட அவரின் தோழர்கள் சுமார் 150 பேர் வரை தேசதுரோக குற்றசாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, மார்சல் சதுக்கத்திலுள்ள
சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிராக நாடு பூராகவும் எதிர்பலைகள் தோன்றின. பெரும் சட்ட போராட்டத்தின் பின்பு 1961ல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆபிரிக்க தேசிய காங்கிரசில் மண்டேலா கலகப்படை ஆரம்பிக்கும் திட்டத்தை முன்வைத்தார். அது நீண்ட விவாதத்திற்குப் பின் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. கலகப்படையின் தலைவராக மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
தொடரும்...........