“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

மனித உரிமைகள்


மனிதன் தோன்றிய அன்றே இயற்கைஉரிமைகளை அவனுக்கு வழங்கிவிட்டது. ஆனால்மனிதனானவன் அதனை உணர்ந்துக் கொள்வதற்கு குறிப்பட்ட காலம் அவன் கூர்ப்பு அடைய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த காலத்தினை அடைந்த போதுதான் அவன் உரிமைகளை உணரத்தொடங்கினான். இதன் பின்னரே உரிமைகளைப்பற்றி பேசவும் தொடங்கினான் எனலாம். மனித உரிமைகள் என்ற எண்ணக்கருவானது பல்வேறு நிலைகளில் இருந்து நோக்கப்படுகின்றது. இதற்கு பல்வேறு அறிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.  இவர்கள் தமது கருத்துகளை கால சூழ்நிலைக்கு ஏற்ப முன்வைத்துள்ளமையை நாம் அவதானிக்கலாம்.

உரிமைகள் என்பது 'சமூகத்தினாலும் அரசினாலும் அங்கிகரிக்கப்பட்ட மனிதக் கோரிக்கைகள்எனலாம். இதில் மூன்று விடயங்கள் முக்கியம் பெறும். குறிப்பாக மனிதக் கோரிக்கைகள்சமூக அங்கிகாரம்அரசியல் அங்கிகாரம் என்பனவாகும். இங்கு மனிதனது கோரிக்கைகளை எடுத்துக் கொண்டால் அனைத்துக் கோரிக்கைகளும் உரிமைகள் ஆகிவிடாது. அதன் தன்மையிலேயே தங்கியுள்ளது. கோரிக்கைகள் பாரபட்சமற்ற வகையில் அனைவரது நலனையும் நோக்காகக் கொண்டிக்கும் போது சமூகம் அங்கிகாரம் வழங்கும். சமூக அங்கிகாரம் பெற்ற கோரிக்கைகள் யாவும் உரிமைகளாக அமைவதில்லை. ஏனெனில் அவற்றுக்கு அரசின் அங்கிகாரம் அவசியமாகும். அரசின் அங்கிகாரம் கிடைக்கப்பெறும் போதே உரிமைகள் சட்ட ரீதியான தன்மைப்பெறும் ஏனையவர்களுக்கு பங்கம் விளைவித்துசமூகப் பொதுநலனை பாதித்துசுயநலநோக்கில் உரிமைகளை அனுபவிக்க எவருக்கும் உரித்து கிடையாது.

'மனிதன் பிறப்பது சுதந்திரமாகத்தான் ஆனால்பல்வேறு நிலைகளில் பல்வேறு தடைகளால் கட்டப்பட்டுள்ளான் என்பதே உண்மையாகும்என்று மொண்டஸ்கியூ குறிப்பிடுகின்றார். இக்கருத்தின்படி பிறக்கும் போது மனிதன் எல்லா உரிமைகளுடனும் பிறக்கின்றான். ஆனால்இடம்காலம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப அவன் அதனை மாற்றிக்கொள்ள வேண்டியத் தேவை ஏற்படுகின்றது. இதனையே சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளரான ரூசோ 'மனிதன் பிற்ககும் போது சுதந்திரமாகத்தான் பிறக்கின்றான். ஆனால்பின்னர் அவன் அடிமைச்சங்கிலியால் கட்டப்படுகின்றான்என்று கூறுகின்றார்.

'மனிதன் வாழ்ந்தால் மட்டும் போதாதுநன்றாக வாழ வேண்டும். நலன்கள் பாதுகாக்கப்பட்டால்தான் மனிதன் நன்றாக வாழ இயலும். தனது நலனைப்பேணி பொது நலனையும் பாதுகாப்பதற்கு ஒருவனுக்குள்ள சக்தியே உரிமைகள் எனப்படும்என்று அரிஸ்டோட்டில் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்துப்படிஉரிமைகள் என்பது மனித நலனிலேயே தங்கியிருக்கின்றது என்பது புலனாகின்றது. எனினும்இவர் கூறும் தனது நலனைப்பேணி பொது நலனையும் பாதுகாக்க வேண்டும் என்பது சற்று விமர்சனத்திற்குள்ளானது. ஒருவன் பொதுநலனை பேணவேண்டுமாக இருந்தால் அவன் தனது நலன்கள் சிலவற்றில் விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டும்.

லஸ்கி என்பவர் குறிப்பிடும் போது 'பிறருக்கு இடைஞ்சல் இன்றி ஒவ்வொரு மனிதனும் தனது ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கான சூழலை சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுதலையே உரிமைகள்என்றார். மற்றும் 'மனித வாழ்வின் நிபந்தனைகள் என்றும் பொதுவாக அவையின்றி எம்மனிதனும் சிறப்பாக செயற்பட முடியாதுஎனவும் குறிப்பிடுகின்றார். லொக் என்பவர் 'உரிமைகள் என்பன ஒவ்வருவருடைய அதிகாரம் அல்லது கோரிக்கையை விட உயர்ந்தவையாகும்என்றார். கோப் கவுஸ் என்பவர் 'சமூக நலனை பேணும் நிபந்தனைகளே உரிமைகள்எனக் குறிப்பிடுகின்றார். ஹொப்ஸ் என்பவர் 'உண்மையான உரிமைகள் சமூகப் பொதுநலத்தின் நிபந்தனைகள்என்றார்.

இவ்வாறு பல அறிஞர்களும் பலகருத்துக்களை முன்வைக்கின்றனர். உரிமைகள் எனும் போது மனித உரிமைகள்அடிப்படை உரிமைகள் பற்றிய கருத்து நிலவுகின்றது. மனித இருத்தலுக்கு அவசியமானதும் அவர்களின் சுய கௌரவத்தையும் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளே மனித உரிமைகளாகும். இவை இயற்கை உரிமைகளினதும் குடியியல் உரிமைகளினதும் கலவையாகும். இவை உலகிலுள்ள சகல இடங்களுக்கும் சகல மனிதர்களுக்கும் பொதுவானதாகும். மனித உரிமைகளின் எவற்றை அத்தியாவசியமாக பாதுகாக்க வேண்டும் என ஒவ்வொரு அரசும் தீர்மானித்து அது அரசியல் யாப்பில் உள்ளடக்கும் உரிமைகளே  அடிப்படை உரிமைகளாகும். இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. அரசுகள் இவற்றை பாதுகாப்பதற்கு சட்ட ரீதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

உரிமைகள் சமூகத்தில் தோன்றுபவை சமூகத்திற்கு அப்பால் உரிமைகள் இருத்தல் இயலாதது. உரிமைகளுக்கு வரையறையுண்டு இவ்வரையறை அனுபவித்தலேயாகும். உரிமைகள் கட்டாய கடமைகளுடன் இணைந்தவை. கடமைகளின்றி உரிமைகளை அனுபவிக்க முடியாது. உரிமைகள் வளரும் தன்மைக் கொண்டவை. சமூக அபிவிருத்திக்கு ஏற்ப உரிமைகளும் அபிவிருத்தி அடைகின்றது. உரிமைகளை அரசு உருவாக்குவதில்லை. உரிமைகளை சகலரும் சமமான முறையில் அனுபவிப்பதற்கேற்ற சூழலைஏற்படுத்தி உரிமைகளை பாதுக்காத்தல்  அரசின் கடமையாகும்.

இனி மனித உரிமைகளின் முக்கியத்துவம் பற்றி நாம் நோக்குவோம். இன்றைய கால கட்டத்தில் மனித உரிமைகளானது பல்வேறு வழிகளில் முக்கியத்துவமுடையதாக விளங்குகின்றது. இன்றை உலக அரசுகள் பொதுவாக ஜனநாயகம் என்ற அடித்தளத்தினை பேணுவதை நாம் அவதானிக்கலாம். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அங்கு சிறப்பான முறையில் ஜனநாயகம் நிலவமுடியும். மனித உரிமைகள் மறுக்கப்படும் ஒரு நாட்டில் ஜனநாயகம் வலுகுன்றியதாகவே காணப்படும். ஏனெனில் மனித உரிமைகள் என்ற தளத்திலேயே ஜனநாயகம் நிலைப்பெற்றுள்ளது. இதனாலேயே ஒவ்வொருநாடும் தனது அரசியல் யாப்பில் மனித உரிமைகளை அடிப்படை அலகாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காபிரான்ஸ்இந்தியாஇலங்கை போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.

ஒரு நாடு நல்லாட்சியுடையதாக விளங்க வேண்டுமானால் அங்கு மனித உரிமைகள் சிறப்பான முறையில் பேணப்படுதல் வேண்டும். இதனாலேயே நல்லாட்சியின் அடிப்படை பண்பாக மனித உரிமைகளை இணைத்துள்ளனர். மனித உரிமைகளின் முக்கியத்துவத்தினையும்அது பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியப்பாட்டாலும் உலக நாடுகள் பல ஒன்றிணைந்து பல மாநாடுகளை நடாத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக வியன்னா மநாட்னை குறிப்பிடலாம். மனித உரிமைகள் விடயத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்த மாநாடாக இதனை குறிப்பிடலாம்.

சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு என்று ஐக்கிய நாடுகள் சபைசர்வதேச பொது மன்னிப்பு நிறுவனம்மனித உரிமைகள் கண்காணிப்புசர்வதேச நீதியாளர்களின் ஆணைக்குழு என்பன வற்றை ஏற்படுத்தி அவற்றை பல நாடுகள் ஏற்றுக் கொண்டும் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை நிலைப்பெறத் தொடங்கியதற்குப் பின்னள்ள ஆண்டுகளில் உலகலாவிய மனித உரிமைகள் அதிகம் வளர்ச்சியும் காப்பும் பெற்றுள்ளன எனச் சொல்லலாம். மனித உரிமைகள் தற்போது உலகலாவிய தன்மை அடைந்துள்ளது. இந்நிலையில் ஐ.நா அமைப்புதான் மனித உரிமைகளின் காவலராக விளங்குகிறது என்பது மிகையல்ல. உலக மனித உரிமைகள் பிரகடனத்தில் பல்வேறு நாடுகளில் வழக்கத்தில் இருந்து வந்ததொன்று தொட்டு வழங்கப்பட்டு வந்த மனித உரிமைகளே இப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டு வந்தள்ளன. 'மனித உரிமைகள் அந்தந்த நாடுகளின் இறைமைக்கு உட்பட்டவைஎன்ற கருத்து இன்று முதன்மை பெற்று வருகின்றது. ஒவ்வொரு நாடும் தனது பாரம்பரிய அடித்தளத்தின் மீதே மனித உரிமைகளை பேணிவருவதை அவதானிக்கலாம்.

மனித உரிமைகளும் அபிவிருத்தியும் ஓன்றிலொன்று தங்கியிருக்கின்றது என்று ஐ.நா பொதுச் சபையினால் 1986.12.04ம் திகதி ஏற்றக் கொள்ளப்பட்டது. இதில்அபிவிருத்திஉரிமையின் பங்கு தாரர்மனித உரிமைகள் அனைத்தும் பிரிக்க முடியாதவைஉரிமைகளை அங்கிகரிக்க தவறுதல் அபிவிருத்திக்கான தடையாகும் போன்ற விடயங்கள் கூறப்பட்டிருந்தன. மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்கும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும் போதுபல நாடுகளில் பின்பற்றப்படும் அபிவிருத்தி மாதிரிகள் மனித உரிமைகளையும்சமூக நிலையையும் உறுதிப்படுத்தக் கூடியதாக இல்லை என்று இன்று வாதிடப்படுகின்றது. இதனால் சில நாடுகளின் அபிவிருத்தியில் சிக்கல்கள் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம்.

ஆக்கபூர்வ வழிகளில் மனித உரிமைகளை பயன்படுத்தவேண்டும் என்கிற உலக சமுதாயத்தின் லட்சியத்தை கூட்டாக சேர்ந்து மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை மூலமாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலமாகவும் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் சர்வதேச சமுதாயம் மேம்படுத்திடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்சபை 10-12-1948 அன்று மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனத்தை நிறைவேற்றி வெளியிட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியல்எல்லா நாடுகளுக்கும் எல்லா மனிதருக்கும் பொதுவான மனித உரிமையின் எட்டப்பட வேண்டிய இலக்கினைக் குறிப்பிடுகின்றது. இப்பிரகடனத்தின் உலகளாவிய சரித்திரப் புகழ் காரணமாகவே அவ்வறிக்கை வெளியிடப்பட்ட டிசம்பர் 10 ஆம் நாளை நாம் உலக மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

ஐ.நா. பொதுச்சபையின் சர்வ தேசியப் பிரகடனம் வழங்கும் மனித உரிமைகள் அனைத்துமே சமமான முக்கியத்துவம் உடையவை. அவ்வுரிமைகளில் எவ்வகைப்பட்ட ஏறு வரிசைகளோ இறங்கு வரிசைகளோ கிடையா. மேலும் ஐ.நா. பிரகடனம் மனித உரிமைகளை எவ்வகையிலும் வகைப்படுத்திக் கூறவில்லை. ஆயினும் மனித உரிமைகளை நாம் பின்வரும் வகைப்பாடுகளுக்குள் பொருத்திப் பார்க்கலாம்.

1. குடியியல் உரிமைகள்
2. அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. பண்பாட்டு உரிமைகள்

என்கின்ற இந்த வகைப்பாடுகளுக்குள் இடம்பெறும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமைகள் அனைத்துமே ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய பிறப்புரிமையாகும். ஐ.நா. பொதுச்சபையின் சர்வதேசியப் பிரகடனத்தின்படி ஒவ்வொரு தனிமனிதர்க்கும் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில உரிமைகள் பின்வருமாறு:

1. உயிர் வாழ்வதற்கான உரிமை
2. சமத்துவ உரிமை,
3. சுதந்திரமாக வாழும் உரிமை,
4. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
5. கருத்துகளை வெளியிட உரிமை
6. வாக்களிப்பதற்கான உரிமை
7. அரசியல் பங்கேற்புக்கான உரிமை
8. வேலைக்கான உரிமை
9. கல்வி பெறுவதற்கான உரிமை
10. சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
11. சுகாதாரப் பாதுகாப்புக்கான உரிமை
12. பாலியல் சமத்துவத்திற்கான உரிமை

மனித உரிமைகள் என்பன தனி மனிதர்களின் வாழ்வுரிமைசுதந்திரம்சமத்துவம் ஆகிய மூன்று அம்சங்களையும் பேணிப் பாதுகாப்பதைத் தம் அடிப்படை இலக்காகக் கொண்டுள்ளன.

மனித உரிமையின் முக்கியத்தவத்தில் அடுத்தாக குழு உரிமை என்பது முக்கியமானது. மனிதன் தனியாகவும்குழுவாகவும் தனது உரிமைகளை அனுபவிக்க உரித்துடையவன். அந்தவகையில் குழு உரிமைகள் மீறப்படுவதன் காரணமாகவே இன்று பல நாடுகளில் இன மோதல்களும்ஆயுதப் போராட்டங்களும் நிகழ்வதை நாம் அவதானிக்கலாம். ஒரு இனக்குழுவானது இன்னுமொறு இனக்குழுவின் உரிமைகளை மீறும் பட்சத்தில் அங்கு முரண்பாடு தோன்றும். இதனால் குழு உரிமைகளும் முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக பாலஸ்தீன - இஸ்ரவேல்இலங்கை இன முரண்பாடுஅமெரிக்காவில் காணப்பட்ட வட மாநில தென்மாநில முரண்பாடுகாஸமீர் முரண்பாடு மற்றும் தென்னாபிரிக்க இன போராட்டம் என்பவற்றை குறிப்பிடலாம்.

இது தொடர்பாக வியன்னா மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. சிறுபான்மையினர் தமது கலாசாரத்தினையும்மதங்களையும் பின்பற்றவும் தமது மொழியை பயன்படுத்தவும் எவ்வித தடைகளும் இருக்கக்கூடாது எனவும் தேசியஇனத்துவமதமொழிவாறு சிறுபான்மையினர் பற்றிய ஐ.நா பிரகடனத்தின் படி சட்டத்தின் மன் அவர்கள் சமத்துவம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யும்படி இம்மாநாடு சகல நாடுகளையும் கேட்டுக் கொண்டது. ஓரு நாடு எவ்வித பிரச்சினையும் இன்றி செயற்படும் போதுதான் அதன் அபிவிருத்தி உயர்நிலையடையும். இதற்கு அடிப்படையாக மனித உரிமைகள் பேணப்படுதல் வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மனித உரிமைகளின் முக்கியத்துவமானது மிகவும் பேசப்பட்டு வருகின்றது. இதற்கான பிரதான காரணத்தை நாம் பின்வருமாறு குறிப்பிடலாம்.

1.             மனித உரிமைகள் அபிவிருத்தியை அளவிடும் அளவு கோல்.
2.             வெளிநாட்டு உதவியை பெறுதல்.
3.             அரசின் அத்து மீறிய செயற்பாட்டை கட்டுப்படுத்தல்.
4.             பொருளாதார வளர்ச்சி.
5.             மனிதனை பாதுகாத்துக்கொள்ள.
6.             சிறுவர்களை பாதுகாத்துக்கொள்ள.
7.             பெண்கள் சமூதாயத்தில் கௌரவமாக வழ்வதற்கு.
8.             தனிமனித ஆளுமையை விருத்தி செய்ய.
9.             சமூகத்தின் அபிவிருத்திக்கு.
10.          மானிட விடுதலைக்கு.
11.          இனமுரண்பாடு வன்முறையை தடுக்க.

தற்காலத்தில் 'மனித உரிமைஎன்பது அரசின்மேல் அல்லது அரசுக்கு எதிராகத் தனிமனிதனால் எழுப்பப்படும் கேட்புக்கள் என்றே கருத வேண்டிய சூழல் உள்ளது. பிறர் எவரும் மற்றவருடைய மனித உரிமைகளை மீறாமலிருக்கும் நிலையை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமையாகும். ஆதலால்தான் அரசின் மேல் இக்கேட்புக்கள் எழுகின்றன. பாலின வேறுபாடின்றி உலகின் அனைத்து ஆண் பெண்களுக்கும் உள்ள உரிமைகள் மனித உரிமைகளாகும். ஒருவரது பிறப்புநாடுசாதிசமயம்சொத்துநிறம் ஆகிய எதனாலும் வேறுபடுத்தி பார்க்க முடியாதன அவ்வுரிமைகள் என்பர். ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள உலக மனித உரிமை பிரகடனம் என்பது கூட மனித உரிமைகள் குறித்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு குறைந்த பட்சப் பட்டியல் தான்அதுவே மனித உரிமைகள் பற்றிய முழுமையான தொகுப்பு எனச் சொல்ல இயலாது.

இன்றய காலகட்டத்தில் ஒரு நாடு சர்வதேசத்தினால் அங்கிகரிக்கப்பட வேண்டமானால் அந்நாடு மனித உரிமைகளை பேணும் நாடாக இருத்தல் அவசியமானதாகும். ஒரு நாட்டில் சிறுவர்கள்பெண்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகள் பற்றி சர்வதேசம் கண்காணித்துக் கொண்டுள்ளது. அவை மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கான நடவடிக்கையினை சர்வதேசம் எடுக்கும். குறிப்பாக யுத்தங்கள் இடம்பெறும்போது அங்கு மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாத விடத்து மனித உரிமைகளை மீறிய நாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறி இலங்கைக்கான ஐரோப்பிய நாடுகளின் வரிச்சலுகையான புளுP10 வரிசலுகை நிறுத்தப்பட்டது. மேலும்இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் இரண்டு மசோதாக்கள் கொண்டவரப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவாட்சியினை நிலைநிறுத்த மனித உரிமைகளை பேணுதல் வேண்டும். மனித சமுதாய வளர்ச்சியில் அரசியல் யாப்பகளின் மூலம் தம்மை நிர்வகித்துக் கொள்ளும் ஏற்பாடு அமையும் போது சட்டம் மனிதர்களது எந்த நலனைஏற்று பாதுகாக்கின்றதோ அந்த நலன்கள்தான் உரிமைகள் ஆகின்றன. சட்டத்தால் பாதுகாகக்கப்பெறாத நலன்கள் உரிமைகள் ஆவதில்லை. மனித உரிமைகளை சட்டத்தின் மூலம் பாதுகாக்கும் போதுதான் இங்கு சட்டவாட்சி நிலவ முடியும்.

பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் மனித உரிமைகளை பேணுவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் வளப்பற்றாக்குறையே இதற்கான முதல் காரணம் எனலாம். வளங்களை முறையாக பகிர்தளிக்காத போது அங்கு முரண்பாடுகளும்மனித உரிமை மீறல்களும் இடம் பெறுகின்றன. பொதவாக இன்நாடுகள் வறிய நாடுகளாகக் காணப்படுவதே இதற்கான முக்கிய காரணம். எடுத்துக்காட்டாக ஆபிரிக்க நாடுகளை குறிப்பிடலாம்.

மேலும்வளர்ச்சியடைந்த நாடுகள் மனித உரிமை மீறல்களை செய்கின்ற போதும் அவை தமது மேலாதிக்கத்தினையும்பொருளாதார செல்வாக்கினையும் பயன்படுத்தி ஜனநாயகம் என்ற போர்வையில் அவற்றை மறைத்து விடுகின்றன. இதனால் தான் மாக்சிசம் தாரான்மைவாத ஜனநாயகத்தில் காணப்படும் உரிமைகளானது வெறும் பொம்மைகளே என்று குறிப்பிடுகின்றது. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா ஈராக்கில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அந்நாட்டின் மீது கற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அது எடுபடவில்லை. எவ்வாறாயினும் மனிதன் சிறப்பாக வாழ உரிமைகளானது அத்தியாவசியமானதொன்றே.


இன்று மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் சர்வதேச மனித உரிமைகள் பேரவை மிகுந்த கஷ்டத்தினை எதிர்கொள்கின்றது. இதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. எனினும் உலக சமாதானத்தினையும்சமத்துவத்தினையும்மனித பாதுகாப்பினையும் நிலைநாட்டுவதற்கு உலகலாவிய மனித உரிமைகள் பேணப்படுதல் வேண்டும் என்பதில் சர்வதேச மனித உரிமை தொடர்பான அனைத்து ஸ்தாபனங்களும் கண்ணும் கருத்துமாக இருப்பதுடன் அதற்காக செயற்பட்டும் வருகின்றன.